For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நவராத்திரிக்கான 4 வீட்டு அலங்கார தீம்கள்!

By Staff
|

நவராத்திரியை ஒரு வெளிப்புறத் திருவிழாவாக தான் பெருவாரியாக கருதுகின்றனர். ஜென்மாஷ்டமி அல்லது விநாயகர் சதுர்த்தி போன்றவைகள் எல்லாம் பொதுவாக வீட்டிற்குள் கொண்டாடப்படும்.

ஆனால் நவராத்திரி என்றால் ஆலயத்திற்கு செல்லலாம் அல்லது டாண்டியா ஆட்டத்திற்கு கால்களை அசைக்கலாம். ஆனாலும் கூட நம் வீட்டிற்கும் இந்த திருவிழாவிற்கு சம்பந்தம் இல்லை என கூறி விட முடியாது.

4 Home Decoration Themes For Navratri

வீட்டிலும் கூட பலர் நவராத்திரி பூஜைகளை செய்து வருகின்றனர். அவர்கள் கட்ஸ்தாபனா செய்து, தேவிகளை வழிபட்டு, ஒன்பது நாட்களையும் கொண்டாடுவார்கள். அத்தகைய நபர்களுக்கு நவராத்திரியின் போது வீட்டு அலங்காரம் என்பது மிகவும் முக்கியமானது.

மலர் அலங்காரம்:

செய்வதற்கு மிகவும் சுலபமானது இதுவே. ஆனால் அவைகள் வாடும் முன் தினமும் பூ மாலைகளை மாற்ற வேண்டி வரும். சுவர்கள், தூண்கள் மற்றும் உட்கூரையையும் கூட மாலைகளை கொண்டு அலங்கரிக்கலாம். கலசத்தை வைக்கும் இடத்தில் மலர்களை குவியலாக குவித்தும் கூட அலங்கரிக்கலாம்.

துப்பட்டா அலங்காரம்:

வண்ண நிறங்களை கொண்ட திரைச்சீலைகள் அல்லது துப்பட்டாக்களை கொண்டும் உங்கள் வீட்டில் நவராத்திரிக்கு அலங்கரிக்கலாம். கண்ணாடி வேலைப்பாடு செய்யப்பட்ட பாந்தினி துப்பட்டா தான் இந்த திருவிழா காலத்திற்கு ஏற்ப அம்சமாக பொருந்தும். இந்த நவராத்திரிக்கு இத்தகைய துப்பட்டாக்களை கொண்டு உங்கள் வீட்டை சுலபமாக அலங்கரிக்கலாம்.

விளக்குச் சர அலங்காரம்:

பலரும் தேவதை விளக்குகள், சுருள் விளக்குகள் மற்றும் சர விளக்குகளை தங்கள் வீட்டை நவராத்திரிக்கு அலங்கரிக்க பயன்படுத்துவார்கள். நவராத்திரியின் போது உங்கள் வீடு பிரகாசமாக மிளிர வேண்டும் என்றால் நீங்கள் பல்வேறு வகையான விளக்குகள் மற்றும் மின்னணு விளக்குகளை பயன்படுத்தலாம். துர்க்கையம்மனை உங்கள் வீட்டிற்கு வரவழைக்கும் வழி இதுவாகும்.

ரங்கோலி அலங்காரம்:

ரங்கோலி என்பது ஒவ்வொரு திருவிழாவின் போதும் செய்யப்படும் இந்திய தரை ஓவியம். நவராத்திரியை கொண்டாட உங்கள் வீட்டின் முன்போ அல்லது கலசம் வைக்கப்பட்டுள்ள இடத்தின் முன்போ ரங்கோலி போடலாம். ரங்கோலி போட பல்வேறு வண்ணங்களையும் ரங்கோலி டிசைன்களை பயன்படுத்தவும்.

இந்த வருட நவராத்திரியின் போது மேற்கூறிய சில வீட்டு அலங்காரங்களை நீங்களும் முயற்சித்து பாருங்களேன்.

English summary

4 Home Decoration Themes For Navratri

Home decoration for Navratri is very special. If you have navratri puja at home, then try these themes to decorate your home for Navratri..
Desktop Bottom Promotion