Latest Updates
-
தாபா ஸ்டைல் ராஜ்மா கறி - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
சுதந்திர தேவி சிலையை அமெரிக்காவிற்கு பரிசாக கொடுத்தது எந்த நாடு தெரியுமா? -
சிங்கப்பூரில் அரசு அதிகாரிகள் திருமணம் செய்ய அரசாங்கம் என்ன செய்யுது தெரியுமா? என்ன இப்படி இறங்கிட்டாங்க -
Ayudha Pooja 2026: ஆயுத பூஜைக்கு வீட்டை ஈஸியா சுத்தம் செய்யணுமா? அப்ப இந்த ஒரு நேச்சுரல் க்ளீனர் போதும்! -
பூரி செய்யும் போது இந்த தவறுகளை தெரியாம கூட செஞ்சுராதீங்க - இல்லனா எண்ணெய் உறிஞ்சி முறுக்கு மாதிரி மாறிரும் -
நவராத்திரி ஸ்பெஷல் சுரைக்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
முருங்கைக்காய் இருந்தா இந்த மாதிரி செட்டிநாடு கார குழம்பு செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
காலையில் எழுந்ததும் இந்த பழக்கம் இருந்தா உடனே நிறுத்துங்க.. இல்ல கிட்னி டேமேஜ் ஆயிடும்! எச்சரிக்கும் டாக்டர்! -
கொல்கத்தாவில் துர்கா தேவி சிலைகள் செய்ய ஏன் பாலியல் தொழிலாளர்களின் வீட்டு மண் பயன்படுத்தப்படுகிறது தெரியுமா? -
18 ஆண்டுகள் கழித்து மகர ராசிக்கு செல்லும் ராகு: இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது!
இந்த 4 ராசிக்காரங்க அவங்க நண்பரையே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்குவாங்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
காதல் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு தவிர்க்க முடியாத அழகான உணர்வாகும். ஒருவரின் வாழ்க்கையில் அவர்களுக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசே மகிழ்ச்சியான காதல் வாழ்க்கைதான். ஒருவருக்கு எப்போது யார் மீது எப்போது காதல் வரும் என்று யாராலும் கணிக்க முடியாது. சிலர் அவர்களின் நெருங்கிய நண்பர்கள் மீது காதல் உறவை வளர்த்துக் கொள்வார்கள்.
உங்கள் சிறந்த நண்பருடன் காதல் கொள்வது ஒரு அற்புதமான உணர்வாகும். உங்கள் நெருங்கிய நண்பர் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும்போதும், அவர்களுடன் நீங்கள் உணர்ச்சிப்பூர்வமாக இணைந்திருக்கும்போதும் இந்த காதல் உணர்வு உங்களுக்குத் தெரியாமலேயே உங்களுக்குள் உருவாகிறது. உங்கள் நெருங்கிய நண்பரை காதலிப்பதில் பல நன்மைகள் உள்ளது.

உங்கள் சிறந்த நண்பருடன் நீங்கள் காதலில் விழும்போது, உங்களிடையே உங்களுக்குள் சிறந்த இணக்கம், புரிதல் மற்றும் ஒரு வலுவான பிணைப்பு இருக்கும். அனைவரும் தங்கள் நெருங்கிய நண்பர்களை காதலிக்காவிட்டாலும் சிலர் அதை அதிகம் விரும்புவார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிகளில் பிறந்தவர்கள் அவர்களின் நெருங்கிய நண்பர்களை காதலிக்க விரும்புவார்கள். அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் ஸ்திரத்தன்மைக்கும், நீண்டகால உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர்களாக இருப்பார்கள். அவர்கள் மனம் திறந்து பேச நேரம் எடுத்துக்கொள்வார்கள், அவர்கள் புது உறவுகளை உருவாக்கிக் கொள்ள அதிக நேரம் எடுத்துக் கொள்வார்கள். அதனால் அவர்களின் நெருங்கிய நட்புகளே பெரும்பாலும் அவர்களின் மிக முக்கியமான உறவுகளாக மாறுகின்றன. ஒரு ரிஷப ராசிக்காரர் தனது நெருங்கிய நண்பர் மீது காதல் உணர்வுகளை வளர்த்துக் கொள்ள முக்கிய காரணம், அவர்கள் அந்த நண்பரை மிகவும் நம்பகனமவராகவும், உண்மையான துணையுமாக கருதுவதே ஆகும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் மற்ற எல்லாவற்றையும் விட உணர்ச்சிப்பூர்வமான பாதுகாப்புக்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். அவர்களின் அனைத்து உறவுகளும் நம்பிக்கை மற்றும் பாசத்தின் அடிப்படையில் அமைந்தவை, இது பல நெருங்கிய நட்புகளுக்கு அடிப்படையாக அமைகிறது. தங்களைப் புரிந்துகொண்டு உண்மையாக நேசிக்கும் தங்கள் சிறந்த நண்பர், தங்களுக்கு சிறந்த நண்பராகவும் இருக்க முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அவர்கள் உணர்ச்சிப்பூர்வமான நெருக்கத்தை விரும்புகிறார்கள், மேலும் அவர்களின் சிறந்த நண்பர்களே அதை வழங்குவார்கள் என்று ஆழமாக நம்புகிறார்கள்.
துலாம்
அழகு மற்றும் காதலின் கிரகமான சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசிக்காரர்கள் நல்லிணக்கம் மற்றும் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். அவர்கள் தங்கள் சிறந்த நண்பர்களுடன் வலுவான உணர்ச்சிப்பூர்வமான பிணைப்புகளை உருவாக்கிக்கொள்கிறார்கள், மேலும் அந்த உறவு வழங்கும் சமநிலையை மதிக்கிறார்கள். அவர்கள் அன்புக்கும் தோழமைக்கும் மதிப்பு கொடுப்பதால், தங்கள் சிறந்த நண்பரையே சிறந்த துணையாகக் கருதுவதற்கான வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஏனெனில் அவர்கள் ஏற்கனவே நன்கு அறிந்த மற்றும் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட ஒருவராக இருப்பதால் தங்களின் எதிர்கால வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று தீர்க்கமாக நம்புகிறார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இயல்பிலேயே மிகவும் ரொமான்டிக்கானவர்கள் மற்றும் காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதை தங்கள் வாழ்க்கையின் இலட்சியமாகக் கொண்டவர்கள். தங்களின் உணர்ச்சிப்பூர்வமான மற்றும் கற்பனைத் திறமிக்க இயல்பைப் பாராட்டும் நபர்களால் இவர்கள் எளிதில் ஈர்க்கப்படுகிறார்கள், அதில் முதலிடத்தில் இருப்பவர்கள் அவர்களின் நெருங்கிய நண்பர்தான். ஒரு வலுவான பிணைப்பையும் பரஸ்பர புரிதலையும் உணர்ந்தால், ஒரு சிறந்த நண்பருடன் காதலில் விழுவது அவர்களுக்கு முற்றிலும் இயல்பானதாகத் தோன்றும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

