Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
இந்த 4 ராசிக்காரங்க உயிரே போனாலும் அவர்களின் முதல் காதலை மறக்க மாட்டார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
ஒருவரின் வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியான காலகட்டம் என்பது அவர்கள் முதல் காதலில் இருக்கும் காலகட்டம்தான். ஏனெனில் ஒன்றுமறியா வயதில் தோன்றும் அப்பாவித்தனமான காதல் என்பது பரிசுத்தமானது. அதனால்தான் என்னவோ மக்கள் பெரும்பாலும் தங்களின் முதல் காதலை விட்ட வெளிவர மிகவும் சிரமப்படுகிறார்கள்.
சில அதிர்ஷ்டசாலிகள் தங்களின் முதல் காதலிலேயே வெற்றியடைந்து அவர்களையே திருமணம் செய்து கொள்வார்கள், ஆனால் பெரும்பாலான மக்களுக்கு முதல் காதல் கைகூடாமல், தோல்வியில் முடிகிறது. சிலர் அந்த வலியையும் வருத்தத்தையும் நீண்ட நாட்களுக்குச் சுமந்து, மீண்டும் காதலில் விழும்போது அதை மெதுவாக மறந்துவிடுகிறார்கள்.

ஆனால் சில துரதிர்ஷ்டசாலிகள் அந்த காயங்களை நீண்ட காலத்திற்குச் சுமக்கிறார்கள். அவர்கள் பின்னாளில் வேறு காதல் வாழ்க்கையைத் தொடங்கினாலும் முதல் காதலின் காயம் அவர்கள் மனதில் ஆறாத வடுவாக இருக்கும். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் முதல் காதலிலிருந்து வெளிவர முடியாமல் கஷ்டப்படுவார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள். அவர்களின் மிகப்பெரிய பிரச்சினையே காதலோ, பகையோ அதை நீண்ட காலம் மனதில் வைத்திருப்பார்கள். உறவு விஷயத்தில் அவர்களின் சிக்கல் என்னவென்றால், அவர்கள் நம்பிக்கை தொடர்பான சிக்கல்களால் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். அவர்களின் முதல் காதல் என்பது முற்றிலும் நம்பிக்கையைப் பற்றியது, அந்த நம்பிக்கை ஒருமுறை உடைந்தால், காதலில் மற்றொருவரை மீண்டும் நம்புவது என்பது அவர்களுக்கு மிகவும் கடினமாகிவிடுகிறது. இதன் விளைவாக, அவர்களின் முதல் காதல் மறக்க முடியாததாகி, நீண்ட காலத்திற்கு அவர்களைத் துன்புறுத்தக்கூடும்.
கடகம்
அனைத்து ராசிக்காரர்களையும் விட அதிகம் உணர்ச்சிவசப்படும் கடக ராசிக்காரர்கள், தாங்கள் காதலிக்கும் நபருடன் மறக்க முடியாத மிகவும் ஆழமான பிணைப்பை உருவாக்கிக்கொள்கிறார்கள். முதல் காதல் அனுபவம் ஒரு கடக ராசிக்காரரின் வாழ்க்கையில் மிகவும் ஆழமான உணர்வுப்பூர்வமான மதிப்பைக் கொண்டுள்ளது. அந்தக் காதல் உறவு முடிவுக்கு வந்த பிறகும் கூட, காதலித்தவருடன் கழித்த அந்த வாழ்க்கையை மறப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அவர்கள் காதல் மற்றும் உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தாலும், புதிய நபர்களிடம் மனம் திறந்து பழகுவதில் அவ்வளவு வசதியாக உணர்வதில்லை. அதனாலேயே அவர்கள் முதல் காதலிலேயே தேங்கி நின்று விடுகிறார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் அவர்களின் மிதமிஞ்சிய காதல் உணர்வு மற்றும் மேம்பட்ட கற்பனைத் திறனுக்காக அறியப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் கனவுலகில் மகிழ்ச்சியாக வாழ்பவர்கள், ஏனெனில் அங்குதான் அவர்கள் ஆசைப்பட்ட அனைத்தும் கிடைக்கும். மேலும், அவர்கள் முதன்முதலில் காதலில் விழும்போது, அவர்களுடனேயே தங்கள் எதிர்காலத்தை கனவு காண்கிறார்கள். எனவே, முதல் காதல் தோல்வியடையும் போது, அந்த நினைவுகள் அவர்களுக்குள் மாறாமல் நிலைத்திருக்கும், முதல் காதல் பற்றிய ஏக்கம் அவர்களை முதல் காதலை மறப்பதை சாத்தியமற்றதாக்கிவிடும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாதமும், மன உறுதியும் கொண்டவர்கள். எனவே அவர்களின் முதல் உறவு முடிவுக்கு வந்தாலும் நீண்ட காலத்திற்கு, முதல் காதலை மறப்பது அவர்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். மேலும், ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் அர்ப்பணிப்புள்ள காதலர்களாக இருப்பார்கள். அவர்கள் ஒரு உறவை பாதுகாக்க தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வார்கள், அதுவும் முதல் காதலாக இருக்கும்போது அவர்களின் முயற்சிகள் இன்னும் அதிகமாக இருக்கும். இதனால் அவர்கள் முதல் காதலை தங்கள் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகப் பாதுகாக்கிறார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
