Latest Updates
-
அதிசார குரு பெயர்ச்சி 2026: மேஷம், ரிஷபம், மிதுனம் ராசிக்கு எப்படி இருக்கும்? - ஜோதிடர் கணிப்புகள் -
குருபகவான் மகம் நட்சத்திரத்திற்குள் நுழைவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
டெல்லி ஸ்டைல் சன்னா மசாலா - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணி பாருங்க.. -
கல்யாண வீட்டு உருளைக்கிழங்கு பொடி வறுவல் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - காரமா செமையா இருக்கும் -
மழைக்காலத்தில் பளிச்சுன்னு அழகாக இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்குகளைப் போடுங்க.. -
கண்ணாடி போன்ற பளபளப்பான சருமம் வேணுமா? அப்ப இந்த 5 பழங்களில் ஒன்றை அடிக்கடி சாப்பிடுங்க -
வாஸ்துப்படி, வீட்டில் இந்த 5 பொருட்களை காலியா வெச்சுக்காதீங்க.. இல்ல லட்சுமி தேவியின் கோபத்துக்கு ஆளாவீங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க யாராலும் தடுக்க முடியாதவர்களாம் - இவர்களின் வெற்றி பிறக்கும்போதே உறுதி செய்யப்பட்டது -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க.. உங்க முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் பழக்கம் எதுன்னு சொல்றோம்.. -
தலையணையில் உள்ள மஞ்சள் நிற கறைகள் மற்றும் துர்நாற்றத்தை நீக்கும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க
இந்த 4 ராசிக்காரங்க பிரச்சினைய பார்த்தாலே பயந்து ஓடும் கோழையாக இருப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா?
வாழ்க்கையில் அனைவருக்குமே ஒவ்வொரு விதமான பிரச்சினைகள் இருக்கும். சிலர் பிரச்சினைகளை துணிச்சலுடன் எதிர்கொள்வார்கள், ஆனால் சிலரோ இதற்கு முற்றிலும் எதிராக பிரச்சினைகளை கண்டு பயந்து ஓடுபவர்களாக இருப்பார்கள். இப்படி ஒருவர் பிரச்சினைகளை கண்டு பயந்து ஓடுவதற்கு அவர்களின் ராசி முக்கிய காரணமாக இருக்கலாம் என்று ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.
உண்மைதான், சில ராசிகளில் பிறந்தவர்களுக்கு பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிச்சல் குறைவாக இருக்கும். அவர்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டு தீர்ப்பதற்குப் பதில் அதனைக் கண்டு பயந்து ஓடுவார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் பிரச்சினைகளை கண்டு பயந்து ஓடுபவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

மிதுனம்
ராசி சக்கரத்தில் இரட்டையர்களால் குறிக்கப்படும் மிதுன ராசிக்காரர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்கள். அவர்கள் சமூக பட்டாம்பூச்சிகள், அவர்களால் வெவ்வேறு சூழ்நிலைகளுக்கு எளிதில் தகவமைத்துக் கொள்ள முடியும், ஆனால், பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொள்ளும்போது, அவர்களிடம் எப்போதும் இருக்கும் தைரியம் இருக்காது.
மோதல் மீதான அவர்களின் வெறுப்பு மற்றும் ஒரு சூழ்நிலையின் ஒவ்வொரு பக்கத்தையும் பார்க்கும் திறன் காரணமாக அவர்கள் பிரச்சினைகளிடமிருந்து தூரமாக ஓடுகிறார்கள். பிரச்சினைகளிடமிருந்து தூரமாக ஓடும்போது நிச்சயம் வேறொரு நல்ல வழி கிடைக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள். வாழ்க்கை மிகவும் குறுகியது, எனவே அதை பிரச்சினைகளை எதிர்கொள்வதில் வீணாக்கக்கூடாது என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
துலாம்
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்கள் உலகத்தில் அமைதியை உருவாக்கும் துலாம் ராசிக்காரர்கள். வசீகரமான நடத்தை மற்றும் ராஜதந்திர அணுகுமுறைக்கு பெயர் பெற்ற துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்லிணக்கத்தை விரும்புவார்கள். துலாம் ராசிக்காரர்கள் மோதல்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்படும் போது, அவற்றை நேரடியாக எதிர்கொள்வதற்கு பதிலாக ஒதுங்கியே இருப்பார்கள்.
இதன் அர்த்தம் அவர்கள் பிரச்சினைகளைத் தீர்க்க இயலாதவர்கள் என்பதல்ல, ஆனால் அவர்கள் தேவையற்ற சிக்கல்கள் மற்றும் அசௌகரியத்தைத் தவிர்க்க விரும்புகிறார்கள். துலாம் ராசிக்காரர்கள் ஒவ்வொரு பிரச்சனையும் இறுதியில் தானாகவே சரியாகிவிடும் என்று நம்புகிறார்கள். அவர்கள் எப்போதும் பிரச்சினையின்றி வாழ வேண்டும் என்பதற்காக பிரச்சினைகளிடமிருந்து விலகி ஓடுகிறார்கள்.
மீனம்
ராசி சக்கரத்தின் மிகவும் உணர்திறன் மிக்க ராசியாக அறியப்படும் மீன ராசியினர், பிரச்சினைகள் அல்லது மோதல்களை எதிர்கொள்ளும்போது இயற்கையாகவே அதனிடமிருந்து தப்பித்து ஓடுகிறார்கள். மீன ராசிக்காரர்கள் பெரும்பாலும் கனவுலகில் வாழ்பவர்கள், இது பெரும்பாலும் நிஜ உலக பிரச்சினைகளை சந்திக்கும் போது அவர்களை கனவுலகிற்குள் ஒளிந்து கொள்ள வழிவகுக்கிறது.
அவர்கள் பிரச்சினைகளை எதிர்த்து சமாளிப்பதற்கு பதில் னவுகள் மற்றும் கற்பனைகளின் கடலில் மிதக்க விரும்புகிறார்கள். இதன் அர்த்தம் மீன ராசிக்காரர்கள் பலவீனமானவர்கள் அல்லது திறமையற்றவர்கள் என்பதல்ல, இது வாழ்க்கையின் அழுத்தங்களைச் சமாளிக்கும் அவர்களின் தந்திரமாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் பிரச்சனைகளை நேரடியாக எதிர்கொள்வதை விட ஓடிவிடவே அதிக வாய்ப்புள்ளது, ஏனெனில் அவர்கள் சுதந்திரமான மனநிலைக்கு பெயர் பெற்றவர்கள். தனுசு ராசிக்காரர்கள் புதிய விஷயங்களை ஆராய்ந்து அனுபவிக்க இயற்கையான ஆசை கொண்டவர்கள். ஒரு பிரச்சனையை எதிர்கொள்வதை அவர்கள் தங்கள் சுதந்திரம் மற்றும் மகிழ்ச்சிக்கு ஒரு தடையாகக் கருதுகிறார்கள்.
எனவே பிரச்சினைகளை சமாளிப்பதை விட அதிலிருந்து தப்ப்பித்து ஓடுவதை அவர்கள் எளிய ஆப்ஷனாக பார்க்கிறார்கள். தனுசு ராசிக்காரர்கள் சவால்களை எதிர்கொள்ள முடியாது என்று இது அர்த்தப்படுத்துவதில்லை, ஏனெனில் அவர்களின் நம்பிக்கையான பார்வை பெரும்பாலும் எந்த பிரச்சினையையும் சமாளிக்கும் நல்ல வழியைக் கண்டறிய உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

