எல்லோரும் 13 ஆம் நம்பரை கேட்டாலே பயப்படுவார்கள்.. ஏன் தெரியுமா?

பிரபஞ்சமே 13-வது எண்ணை துரதிஷ்ட எண்ணாக கருதுகிறது. இந்தியாவில் எந்த இந்திய கிரிக்கெட் வீரரும் 13 வது ஜெர்சி அணியவில்லை. சிலர் தங்கள் நாக்கில் 13 என்ற எண்ணைக் உச்சரிக்க்கூட விரும்புவதில்லை. 13 ஆம் எண்ணில் எந்த ரகசியம் மறைக்கப்பட்டுள்ளது என்பதை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம் வாங்க..

நீங்கள் உலகின் பல இடங்களுக்கு சென்று பார்த்தாலும் பல கட்டிடங்களில் ஹோட்டலில் எண் 13 அறையை அல்லது கட்டிடத்தில் 13 வது மாடியையும் இல்லாமல் இருப்பதை பார்த்திருக்கலாம். அதற்கான காரணம் உங்களுக்கு தெரியுமா...?

why number 13 is unlucky number

பொதுவாகவே எண் 13, 13 ஆம் நம்பர் வீடு ,பேய், ஆவி என கெட்ட சக்தியுடன் எதிர்மறையான பல விஷயங்களுடன் தொடர்புடையது. இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாட்டில் கூட 13ஆம் என்ற எண்ணை தவிர்த்து விடுகிறார்கள். ஏன் பல நாடுகளில் வீட்டின் முகவரியில் 13 என்ற எண் இருக்காது. 12, 12a, 14 என்ற வரிசையில்தான் இருக்கும். இந்தியாவில் இன்றும் கூட தனியார் விடுதிகள் பெரிய பெரிய ஹோட்டல்களில் எண் 13 இருக்காது.. அந்த அளவுக்கு எண் 13 மிகப்பெரிய எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இவை எல்லாம் எந்த அளவுக்கு உண்மை? எண் 13 பற்றி கூறப்படும் கதைகள், ரகசியங்கள் என்னென்ன?

1. நம்பர் 13ன் கூட்டுத்தொகை 4. இது ராகுவின் ஆதிக்கத்தைக் கொண்ட எண்ணாகும். எனவே இந்த எண்ணில் பிறந்தவர்கள் ராகுவின் தன்மைகளைப் பிரதிபலிப்பார்கள். நேரடியாக 13 என்ற எண்ணில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டம் பெரிய அளவில் இருக்காது.

2. 13ஆம் தேதியில் பிறந்தவர்கள் மிக மிக எச்சரிக்கையாக செயல்படுவார்கள். இவர்களிடம் பிடிவாத குணம் அதிகமாக இருக்கும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் முழு விவரங்களையும் தெரிந்து கொள்வதில் மிகவும் ஆர்வம் காட்டுவார்கள்.

3. கிறிஸ்தவர்களின் நம்பிக்கை படி, இயேசுவின் கடைசி விருந்து (Last Supper) சாப்பிட்ட நபர்களின் எண்ணிக்கை 13 என கூறப்படுகிறது. மேலும் ஏசு மரித்த ஆள் 13ம் தேதி வெள்ளிக்கிழமை என கூறப்படும் நிலையில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 13ஆம் எண்ணை பார்த்தாலும், கேட்டாலும், மக்கள் பயந்து நடுங்கி விடுவார்கள்..

4. இந்தியாவிலும் சில இடங்களில் உள்ள கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்களில் 13ம் எண்ணை பார்க்க்கவே முடியாது. அதே போல் பல பெரிய ஹோட்டல்கள் அல்லது கட்டிடங்கள் எண் 13வது மாடி, 13ம் எண் கொண்ட அறைகள் என எண 13ல் எதையும் கட்டி இருக்க மாட்டார்கள்.. சண்டிகர் நகரத்தில் கூட, செக்டர்-13 உருவாக்கப்படவில்லை ...

5. ஏன் இன்றும் மக்கள் வீடு பார்க்கும் போதோ அல்லது வாகனம் வாங்கும் போது கூட 13 ஆம் எண்ணை தவிர்ப்பதை நாம் அன்றாட வாழ்க்கையில் பார்க்கலாம். இந்த எண் பற்றிய மூடநம்பிக்கை பல நூற்றண்டுகளாக கிட்டதட்ட அனைத்து கலாச்சாரங்களிலும் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது..

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Thursday, September 26, 2024, 23:10 [IST]
Desktop Bottom Promotion