Latest Updates
-
சனிப்பெயர்ச்சி 2026: இந்த 5 ராசிக்காரங்க ரொம்ப ரொம்ப கவனமாக இருக்கணுமாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
சுரைக்காயை இந்த மாதிரி பச்சடி செஞ்சு பாருங்க... இட்லி, தோசை, சாதம் எல்லாத்துக்குமே டக்கரான சைடிஷா இருக்கும்... -
'நிறங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் நிறம் எது தெரியுமா? உங்களுக்கு இந்த கலர் பிடிக்குமானு சொல்லுங்க...! -
தஞ்சாவூர் கல்யாண சாம்பார் ரெசிபி... இந்த மாதிரி சாம்பார் வைச்சு பாருங்க... வீட்ல எல்லாரும் ஊத்தி குடிப்பாங்க.. -
'சீனாவின் நோஸ்ட்ரடாமஸ்' கணிப்பின் படி அமெரிக்க-ஈரான் போரில் ஜெயிக்கப் போவது யார்? போர் இப்படித்தான் முடியுமாம் -
கவலையற்ற ஆன்மாவாக எப்போதும் மகிழ்ச்சியாக வாழ பிறந்த 4 ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
4 முட்டை இருந்தா இந்த முகலாய முட்டை குருமாவை செஞ்சு பாருங்க... பைவ் ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட மாதிரி இருக்கும்! -
சனிப்பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், எந்த ராசிக்கு ஆபத்தாகவும் இருக்கப்போகுது தெரியுமா? -
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...!
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க? உங்களோட போன ஜென்மம் எப்படி இருந்துச்சுனு நாங்க சொல்றோம்...!
எண்கணிதத்தின் படி ஒருவரின் கடந்த கால கர்ம வினைப் பற்றிய ரகசியங்களும், இந்த பிறவியின் எதிர்காலமும் அவர்களின் பிறந்த தேதியில் மறைந்துள்ளது. அவை கடந்த பிறவியிலிருந்து நீங்கள் உங்களின் தற்போதைய பிறவிக்குக் கொண்டு வந்த பூர்வ ஜென்ம செயல்கள், அனுபவங்கள் மற்றும் பாடங்களின் போன்றவற்றை உங்களின் பிறந்த தேதியை வைத்து தெரிந்து கொள்ளலாம்.
எண் கணிதம் 1 முதல் 9 வரையிலான பிறந்த எண்களை ஒரு ஆளும் கிரகத்துடன் தொடர்புபடுத்துகிறது. இது ஒவ்வொரு எண்ணுக்கும் உரிய கர்மக் கணக்குகள், பலங்கள் மற்றும் அவர்களின் பூர்வ ஜென்மத்தை வரையறுக்கிறது. இந்த பதிவில் ஒருவரின் பிறந்த தேதியின் அடிப்படையில் அவர்களின் கடந்த ஜென்மம் எப்படியிருந்தது என்று தெரிந்து கொள்ளலாம்.

எண் 1 (1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
எண் 1 சூரியனால் ஆளப்படுகிறது. இந்த தேதிகளில் பிறந்தவர்கள், கடந்த பிறவியில் ஆட்சியாளராக, தலைவராக, நிர்வாகியாக, குடும்பத் தலைவராக இருந்த கர்ம வரலாற்றைக் கொண்டிருப்பார்கள். அவர்களின் கர்மா என்பது அகங்காரம், கட்டுப்பாடு, அதிகாரம் மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றுடன் தொடர்புடையது. முற்பிறவியில் தவறாகப் பயன்படுத்தப்பட்ட அதிகாரத்தால், இந்த பிறவியில் பணிவைக் மீண்டும் கற்றுக்கொண்டு ஒரு தலைவராக, கருணையுடன் வழிநடத்தக் கற்றுக்கொள்வார்கள்.
எண் 2 (2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
எண் 2 சந்திரனால் ஆளப்படுகிறது, இது உணர்ச்சிகளையும் உறவுகளையும் நிர்வகிக்கிறது. எண் 2-ல் பிறந்தவர்கள் கடந்த பிறவியில் குடும்பம், பார்ட்னர்கள் அல்லது சேவை மற்றும் தியாகத்துடன் பிணைக்கப்பட்ட ஒரு வரலாற்றைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் மற்றவர்களுக்காகத் தங்கள் சொந்த வாழ்க்கை மற்றும் மகிழ்ச்சியில் தியாகங்களைச் செய்திருக்கலாம், அல்லது உணர்ச்சிரீதியாக மற்றவர்களைச் சார்ந்தவர்களாக இருந்திருக்கலாம்.
எண் 3 (3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
எண் 3 வளர்ச்சியின் கிரகமான குருபகவானால் ஆளப்படுகிறது. முந்தைய பிறவிகளில், அவர்கள் ஒரு அறிஞர், பூசாரி, குரு அல்லது அரச ஆலோசகராக இருந்திருக்கலாம். அவர்கள் கடந்த ஜென்மத்தில் அதிபுத்திசாலியாக இருந்திருக்கலாம். கடந்த ஜென்மத்தின் தொடர்ச்சியாக தற்போதும் அவர்கள் தங்கள் அறிவு மீது தற்பருமை கொண்டவர்களாக இருக்கலாம். இந்த வாழ்க்கை, அந்த அறிவை வெளிப்படையாக வெளிப்படுத்தவும், எழுதுவதற்கும், கற்பிப்பதற்கும், வழிகாட்டுவதற்கும் அவர்களை ஊக்குவிக்கிறது.
எண் 4 (4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
நிழல் கிரகமான ராகு அவர்களை ஆளும் கிரகமாக இருக்கிறது. அவர்களின் கடந்த பிறவிகள் திடீர் ஏற்றங்கள் நிறைந்ததாக இருக்கும். திடீர் வீழ்ச்சிகளும், விதிகளை மீறிய புத்திசாலித்தனமும், எப்போதும் நல்லவிதமாக முடியாமல் போன பரிசோதனைகளும் நிறைந்திருக்கும். அதன் தொடர்ச்சியாக இந்த பிறவியிலும் தாமதங்களாகவும், எதிர்பாராத திருப்பங்களாகவும், ஏக்கங்களாகவும் வெளிப்படும். விதிகளை மதித்து, ஒழுங்குமுறையை உருவாக்குவதே அவர்களின் கர்மப் பணியாகும்.
எண் 5 (5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள்)
கிரகங்களின் இளவரசரான புதன் எண் 5-யை ஆள்கிறார். கடந்த பிறவியில் அவர்கள் வணிகர், ராஜதந்திரி அல்லது சுதந்திரமான நாடோடியாக இருந்திருப்பார்கள். தங்களின் வார்த்தைகளை ஆயுதங்களாக பயன்படுத்தியவர்களாக இருப்பார்கள், அறிவு அவர்களின் மிகப்பெரிய வலிமையாக இருக்கும். இந்த பிறவியிலும் அவர்களின் பேச்சு வலிமையானதாக இருக்கும், அவர்களின் வார்த்தைகளில் தெளிவு, நேர்மை மற்றும் கருணை நிறைந்திருக்கும். இந்த பிறவியில் அவர்கள் தங்கள் ஆர்வத்தையும் புத்திசாலித்தனத்தையும் இழக்காமல் அர்ப்பணிப்பைக் கற்றுக்கொள்வார்கள்.
எண் 6 (6, 15, 24 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்)
அன்பு மற்றும் அழகின் கிரகமான சுக்கிரன் இந்த எண்ணை ஆள்கிறார். அவர்கள் கடந்த பிறவியில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்த செல்வந்தராக இருந்திருக்க வாய்ப்புள்ளது. அவர்களின் மிகப்பெரிய பிரச்சினை என்னவென்றால் இந்த பிறவியிலும் அவர்கள் அதே மனநிலையில் இருப்பார்கள். தங்களின் வரவுக்கு மீறி செலவு செய்பவர்களாகவும், ஆடம்பர வாழ்க்கை மீது அதிக ஆர்வம் கொண்டவர்களாவும் இருப்பார்கள். இது அவர்களுக்கு சில சமயங்களில் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
எண் 7 (7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
மற்றொரு நிழல் கிரகமான கேது இந்த எண்ணை ஆள்கிறது. அவர்கள் கடந்த ஜென்மத்தில் ஒருவித தீவிரத்தன்மையைக் கொண்டிருப்பார்கள். அவர்கள் கடந்த ஜென்மத்தில் போராளியாகவோ அல்லது புரட்சியாளராகவோ வாழ்ந்திருக்க வாய்ப்புள்ளது. இது அதிகாரப் போராட்டங்கள் மற்றும் ஆழமான உணர்ச்சிப்பூர்வமான காயங்கள் நிறைந்த முந்தைய பிறவிகளின் அனுபவங்களிலிருந்து உருவாகியிருக்கலாம். இந்த பிறவியில், அவர்களின் பயணம், கட்டுப்பாடு மற்றும் துரோகத்தின் இந்த நீடித்த காயங்களிலிருந்து வெளிவருவதை உள்ளடக்கியதாக இருக்கும். தங்களை உண்மையாகவே வலுப்படுத்திக்கொள்ள, அவர்கள் உணர்ச்சிப்பூர்வமான குணப்படுத்தும் பாதையில் பயணிக்க வேண்டும்.
எண் 8 (8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
இந்த எண்ணில் பிறந்தவர்கள் சனிபகவானால் ஆளப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் கடந்த பிறவியில் கடினமான உழைப்பாளியாகவும், வாழ்க்கையில் பல தடங்கல்களை சந்தித்தியவர்களாகவும் இருப்பார்கள். அவர்களின் முற்பிறவி பெரும்பாலும் மகிழ்ச்சியற்றதாக இருந்திருக்கும். அதற்கு கைமாறாக இந்த பிறவி அவர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சியும், ஆடம்பரமும் நிறைந்திருக்கும். அவர்களின் வாழ்க்கையில் உண்மையான வெற்றி அவர்களைத் தேடிவரும்.
எண் 9 (9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்)
எண் 9 கிரகங்களின் தளபதியான செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுகிறது. எண் 9 உடையவர்கள் தைரியமானவர்கள், செயல் திறமிக்கவர்கள் மற்றும் தியாக மனப்பான்மை கொண்டவர்கள். அவர்களின் முந்தைய பிறவி பெரும்பாலும் போர், பாதுகாப்பு, புரட்சி அல்லது பிற போராட்டங்கள் நிறைந்ததாக இருந்திருக்கலாம். அவர்களின் கர்மா மிகவும் சக்தி வாய்ந்தது. மனரீதியான அல்லது உடல்ரீதியான பல போராட்டங்களை அவர்கள் இந்த பிறவியில் முடிப்பார்கள். இந்த பிறவியில், இந்த எண்ணில் பிறந்தவர்கள் சேவை செய்பவர்களாகவும், தலைமை தாங்குபவர்களாகவும் இருப்பார்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications












