Latest Updates
-
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
இந்த 4 ராசிக்காரர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செஞ்சுக்க வாய்ப்பிருக்காம்... உங்க ராசி இதுல இருக்கா?
திருமணம் அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு திருப்பு முனையாகும். திருமண வாழ்க்கை என்பது அனைவரது வாழ்க்கையிலும் மிகவும் முக்கியமான மற்றும் மகிழ்ச்சியான காலகட்டமாகும். ஆனால் அனைவருக்கும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைகிறதா என்றால் நிச்சயம் இல்லை என்றுதான் கூறவேண்டும்.
சிலர் தங்கள் வாழ்க்கைத்துணையுடன் திருமணம் செய்து கொண்டாலும் முழுமையற்றவர்களாக உணர்கிறார்கள். அவர்கள் தங்கள் மனைவியிடமிருந்து உணர்ச்சிரீதியாகவும், மனரீதியாகவும் தொலைவில் இருப்பதாக உணரலாம் மற்றும் ஒரு கட்டத்தில் தூரமும், தனிமையும் தாங்க முடியாததாக மாறும் போது, விவாகரத்து கடைசி நிலையாக இருக்கும்.

அதன்பின் ஆறுதல் தேட, அவர்கள் இரண்டாவது முறையாக காதலைத் தேடுகிறார்கள். அவர்கள்இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொள்ளத் தயாராக உள்ளனர். ஜோதிட சாஸ்திரத்தின் படி சில ராசிக்காரர்கள் இரண்டாவது திருமணத்தில் ஆர்வம் உள்ளவர்களாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த ராசிக்காரர்கள் இரண்டாவது திருமணம் செய்ய வாய்ப்புள்ளது என்று தெரிந்து கொள்ளலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் உறவுகளில் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கான விருப்பத்திற்காக அறியப்படுகிறார்கள். அவர்கள் தங்களின் முதல் திருமணத்தில் மகிழ்ச்சியாக இல்லையென்றாலோ அல்லது அவர்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றாலோ, அவர்கள் விரும்பும் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பை வழங்கக்கூடிய, அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் ஒரு துணையைத் தேடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அவர்கள் திருப்தி இல்லாத உறவில் நீண்ட காலம் இருக்க மாட்டார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் தங்கள் உறவுகளில் நல்லிணக்கத்தையும் சமநிலையையும் மதிக்கிறார்கள். அவர்களின் முதல் திருமணம் அவர்கள் விரும்பும் சமநிலையையும் நல்லிணக்கத்தையும் அவர்களுக்கு வழங்கவில்லை என்றால், அவர்கள் இரண்டாவது திருமணத்தில் அவற்றை வழங்கக்கூடிய ஒரு துணையைத் தேடிச் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தீவிர உணர்ச்சி ஆழம் மற்றும் ஆர்வத்திற்காக அறியப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் முதல் திருமணத்தில் பாராட்டப்படவில்லை என்று உணர்ந்தால், அவர்கள் நிச்சயமாக இரண்டாவது திருமணத்திற்காக தங்கள் தீவிரம் மற்றும் ஆர்வத்துடன் பொருந்தக்கூடிய ஒரு துணையைத் தேடுவார்கள். ஒருபோதும் தவறான திருமணத்தில் அவர்கள் தொடர மாட்டார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரம் மற்றும் தனிப்பட்ட ஆசைகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் மற்றும் பாரம்பரிய திருமணம் அவர்களின் சிறகுகளை உடைப்பது போல அவர்கள் உணரலாம். அவர்கள் தங்கள் முதல் திருமணம் தங்களின் சுதந்திரத்திற்கு தடையாக இருப்பதாக உணர்ந்தால், அவர்கள் சுதந்திரமாக உணரக்கூடிய மற்றொரு துணையைத் தேடுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications

