Latest Updates
-
செவ்வாய்-ராகுவால் உருவான அங்காரக யோகம்: செப்டம்பர் 02 வரை இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
குருபகவானின் நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் மாதம் வரை ராஜவாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
முகம் கருப்பா இருக்குதா? அப்ப மஞ்சளைக் கொண்டு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
ஆந்திரா புதினா தொக்கு ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - சாதம், தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
1/4 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்வீட் வடை ட்ரை பண்ணுங்க.. -
Avani 2026 Rasipalan: ஆவணி மாதத்தில் துரதிர்ஷ்டத்தால் அவதிப்படப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
Avani Matha Rasipalan 2026: ஆவணி மாதம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும் தெரியுமா? -
அணுகுண்டு வெடித்து உலகமே அழிந்தாலும் இந்த உயிரினங்கள் அழியாதாம் - எந்தெந்த உயிரினங்கள் தெரியுமா? -
செஃப் தீனா ஸ்டைல் பீன்ஸ் பருப்பு பொரியல் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நாக பஞ்சமி அன்று சூரியன்-கேது இணைவதால் நஷ்டத்தையும், தோல்விகளையும் சந்திக்கப்போகும் 4 ராசிகள்
இந்த 4 ராசிக்காரங்க வயதானாலும் குழந்தையாதான் நடந்துக்குவாங்களாம்... இவங்கள சமாளிக்கிறது ரொம்ப கஷ்டம்...!
ஜோதிட சாஸ்திரம் ஒருவரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை அறிந்து கொள்ள பல நூற்றாண்டுகளாக நம் மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. ஜோதிடம் முதிர்ச்சியின் அளவு உட்பட ஒருவரின் பல்வேறு ஆளுமைப் பண்புகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
சில ராசிக்காரர்கள் எவ்வளவு வயதானாலும் மனதளவில் குழந்தைகளாக இருப்பார்கள். அவர்களின் செயல்பாடுகளும் முதிர்ச்சி இல்லாமல் குழந்தைத்தனம் நிறைந்ததாக இருக்கும். அவர்கள் தங்களுக்குள் இருக்கும் குழந்தைகளை எப்போதும் மறைய அனுமதிக்க மாட்டார்கள். இந்த பதிவில் எந்த ராசிக்காரர்கள் எப்போதும் குழந்தைத்தனம் நிறைந்தவர்களாக இருப்பார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு வயதில் முதிர்ந்தவர்கள் போல நடந்து கொள்வது பிடிக்காது. அவர்கள் தங்கள் வாழ்க்கையை குழந்தைத்தனமாக வைத்திருப்பது போன்ற உணர்வைத் தருகிறார்கள். அவர்கள் நடிப்பில் மிகவும் திறமையானவர்களாக இருப்பார்கள், எனவே தாங்கள் மனதளவில் குழந்தையாக இருப்பதாக தன்னையே நம்ப வைப்பார்கள்.
இவர்கள் குழந்தைகள் போல அடிக்கடி கோபப்படுவார்கள். அவர்கள் தங்கள் வாதங்கள், சண்டைகள் மற்றும் பிடிவாதங்களில் உண்மையிலேயே மகிழ்ச்சி அடைகிறார்கள். ஆனால் அவர்களின் வாதத்துடன் ஒத்துப்போவதவர்களை குழந்தைகள் என்று அழைக்கிறார்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களின் விருப்பம், அவர்கள் எப்போதும் நேசிக்கப்பட வேண்டும் என்பதுதான். அவர்கள் நிராகரிக்கப்படுவதைத் தவிர்க்க அவர்கள் எதையுமே நிறுத்த மாட்டார்கள், ஏனென்றால் அவர்கள் அதைப் பற்றி பயப்படுகிறார்கள். அவர்கள் பொய் சொல்வார்கள், கெஞ்சுவார்கள், அழுவார்கள், உங்கள் கவனத்தை ஈர்க்க கோபப்படுவார்கள். உங்கள் முழுமையான கவனத்தை அவர்கள் பெறும் வரை, அவர்கள் நிறுத்த மாட்டார்கள்.
கூடுதலாக, துலாம் ராசிக்காரர்கள் தாங்கள் விரும்பும் ஒருவர் மற்றொருவரைத் தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் அதை வெறுக்கிறார்கள். நிராகரிக்கப்பட்ட சூழலில் வாழ அவர்கள் ஒருபோதும் விரும்ப மாட்டார்கள், ஆனால் அவர்கள் சந்தேகத்திற்கு இடமின்றி முற்றிலும் வித்தியாசமாக அணுகுவார்கள். தாங்கள் விரும்பியதை அடைய அவர்கள் வஞ்சகத்தையும், தந்திரத்தையும் பயன்படுத்துவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் எப்போதும் கனவுலகத்தில் வாழ்பவர்கள். பெரும்பாலான நேரங்களில், அவர்கள் தங்கள் கற்பனை உலகில் இருக்க விரும்புவதால், அவர்கள் யதார்த்தத்திலிருந்து முற்றிலும் பிரிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்கள் கற்பனைக்கு வெளியே உள்ள உலகத்தை கடுமையானதாகவும், சலிப்பானதாகவும், மந்தமானதாகவும் கருதுகின்றனர்.
முதிர்ச்சியடையாதவர்களாக இருப்பது அவர்களுக்கு இயற்கையாகவே வருகிறது, ஏனெனில் அவர்கள் உண்மையான உலகம் எவ்வாறு இயங்குகிறது என்பதை அறிய முயற்சி செய்வதில்லை.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வயது வந்த குழந்தை என்ற அடைமொழிக்கு பொருத்தமானவர்கள். அவர்களின் முதிர்ச்சியற்றத்தன்மை வெளிப்படையாகத் தெரியாது. அவர்கள் கோபமாக இருக்கும்போது, அவர்களின் குழந்தைத்தனம் வெளிவருகிறது. எந்தவித நியாயமும் இல்லாமல் உணர்ச்சிவசப்படுவார்கள், அனைத்து சூழ்நிலையையும் நகைச்சுவையாக நினைக்கிறார்கள். எந்த விஷயத்தையும் அவர்கள் தீவிரமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள்.
உண்மையில், உங்களுக்கு மிதுன ராசி நண்பர் இருந்தால், நீங்கள் ஒரு நண்பராக இருப்பதை விட குழந்தை பராமரிப்பாளராக இருக்க வேண்டியிருக்கும். அவர்கள் தங்களுடைய ஆசைகளை உங்களிடம் நேரடியாக வெளிப்படுத்தாவிட்டாலும், அவற்றை தெளிவாக வெளிப்படுத்துவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
