Latest Updates
-
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...!
Weekly Numerology:இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு வெற்றிகள் குவியப்போகுது..
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 30 ஜூன் 2024 முதல் 06 ஜூலை 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தந்தையிடமிருந்து முழு ஆதரவைப் பெறுவார்கள். திடீரென்று எங்கிருந்தோ உங்களுக்கு பணம் வருவதற்கான வழி திறக்கும், மேலும் உங்கள் நிதி நிலை வலுவடையும். சொத்து சம்பந்தமாக ஏதேனும் தகராறு இருந்தால் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சி செய்யுங்கள். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். ஏதேனும் போட்டித் தேர்வில் கலந்து கொள்ள விரும்பினால் அதற்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும். காதல் உறவு ஆழமாகும்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு தொழில் ரீதியாக மிகவும் அருமையாக இருக்கும். அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டப்படுவதோடு, பதவி உயர்வும் பெறலாம். சொந்தமாக தொழில் செய்தால், உங்கள் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் அடிப்படையில், உங்கள் வணிகத்தை முன்னேற்றுவதில் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் சுமுகமாக தீர்த்து வெற்றி பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் கோபத்தையும் ஈகோவையும் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் அது உங்கள் வேலையைக் கெடுக்கும். இது தவிர விமர்சனங்களையும் சந்திக்க வேண்டி வரும். தொழில் ரீதியாக இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்ததை விட சிறந்த பலன்களைப் பெறுவீர்கள். வளிநாட்டில் வியாபாரத்தை விரிவுபடுத்த நினைத்தால், உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் கவனமாக முடிவுகளை எடுக்க வேண்டும். எந்த வேலையையும் யோசிக்காமல் செய்யாதீர்கள். உங்கள் தந்தையின் உடல்நிலை குறித்த கவலைகள் அதிகரிக்கலாம். வாழ்க்கைத் துணையுடன் சுமூகமான உறவைப் பேணுவதில் சில சிரமங்கள் இருக்கலாம். நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்தால், உங்கள் போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுக்க சில ஆபத்தான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் வேலைப்பளுவை அனுபவிக்கலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் பல தவறுகளை செய்யலாம். இந்த வாரம் உடல்நலம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மிகவும் இனிமையாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும், மேலும் நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் இருப்பீர்கள். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த காலகட்டத்தில் நீங்கள் மகத்தான வெற்றியைப் பெறுவீர்கள். அன்பான தம்பதிகளுக்கு இந்த வாரம் மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் காதல் மனநிலை உங்களை உங்கள் துணையுடன் நெருக்கமாக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் சிறப்பாக இருக்கும்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் உங்கள் உறவை நன்றாக வைத்திருக்க முயற்சி செய்யுங்கள். தொழில் ரீதியாக பணிச்சுமை அதிகமாக இருக்கும். சில புதிய யுக்திகளையும் புதிய முறைகளையும் கடைப்பிடிக்க வேண்டும். வியாபாரிகள் அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். புதிய வேலைகளைத் தொடங்க இது சரியான நேரம் அல்ல. உங்களுக்கு நீரிழிவு நோய் இருந்தால், இந்த நேரத்தில் உங்கள் உடல்நிலை குறித்து நீங்கள் மிகவும் கவலைப்படுவீர்கள்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சாதகமாக இருக்கும். எல்லா வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்பு பாராட்டும், நம்பிக்கையும் அதிகரிக்கும். நீங்கள் வியாபாரம் செய்து, புதிய தொழிலில் முதலீடு செய்ய திட்டமிட்டிருந்தால், இதுவே சரியான நேரம். மாணவர்கள் படிப்பில் கவனக்குறைவை தவிர்க்க வேண்டும். உங்கள் செயல்திறனை மேலும் மேம்படுத்த, தினமும் யோகா மற்றும் தியானம் செய்யுங்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் சில புதிய சவால்களை எதிர்கொள்வீர்கள். ஆனால் அவற்றை சமாளித்து உங்கள் இலக்கை நோக்கி செல்வீர்கள். பணியிடத்தில் உணர் அதிகாரிகளின் ஆதரவு குறையும். இருப்பினும் பொறுமையாக இருக்க வேண்டும். மாணவராக இருந்தால், வெற்றியை அடைய கடினமாக உழைக்க வேண்டும். வீட்டில் பணம் சம்பந்தமாக வாக்குவாதங்கள் வரலாம். இந்த வாரம் உங்கள் மன அழுத்தம் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்வர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு தொழில் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் வேலையை கடின உழைப்புடனும் நம்பிக்கையுடனும் செய்வீர்கள். வியாபாரிகளின் பொருளாதார நிலை வலுவடையும். நீங்கள் சிக்கிய பணத்தை திரும்பப் பெறலாம். அதுமட்டுமின்றி, போட்டியாளர்கள் முன் உங்கள் நற்பெயரும் உயரும். குடும்பத்தினருடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











