Weekly Numerology: இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப்போகுது...

Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.

இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

Weekly Numerology Prediction From 21 July 2024 To 27 July 2024 In Tamil

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 21 ஜூலை 2024 முதல் 27 ஜூலை 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

எண் 1

1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் காதல் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பணிபுரிபவர்கள் இந்த வாரத்தில் பிஸியாக இருப்பதால், வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிட முடியாமல் போகும். இந்த வாரத்தில் தொழில் தொடர்பான எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். மாணவர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும்.

எண் 2

2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரத்தின் தொடக்கத்தில் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் பிரச்சனைகள் நீடிக்கும். இருப்பினும் படிப்படியாக பிரச்சனைகள் குறையும். இந்த வாரத்தில் நிலுவையில் உள்ள வேலைகள் முடிக்கப்படும். நிதி நிலை நன்றாக இருக்கும். தொழில் ரீதியான பிரச்சனைகள் தீரும். புதிதாக ஏதாவது செய்ய நினைத்தால், உங்கள் திட்டம் வெற்றிகரமாக நடக்கும். குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

எண் 3

3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பணம் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். அதுவும் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருப்பதால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பணியிடத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். வேலையுடன், உங்கள் ஆரோக்கியமும் முக்கியம் என்பதை மறவாதீர்கள். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். மாணவர்கள் படிப்பில் இடையூறுகளை சந்திக்கலாம். இந்த வாரத்தில் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும்.

எண் 4

4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். குறைவான முயற்சியிலேயே நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். உங்கள் வேலைகள் அனைத்தும் சுமூகமாக முடிவடையும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். வியாபாரிகள் சிக்கிய பணத்தைப் பெறுவார்கள். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். முக்கியமாக வார இறுதியில் நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும்.

எண் 5

5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்த வியாபாரிகளுக்கு சற்று கடினமாக இருக்கும். அவசரப்பட்டு செய்யும் வேலைள் கெட்டுப் போக வாய்ப்புள்ளது. காதலித்து வந்தால் இந்த வாரத்தில் புதிய திருப்பம் ஏற்படலாம். திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த வேண்டும். இந்த வாரத்தில் முதலீடு செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

எண் 6

6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும். பண விஷயத்தில் இந்த வாரம் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். சிலருக்கு புதிய வருமானம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வார இறுதியில் பயணத்தை மேற்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். இந்த பயணம் உங்கள் மனதை நன்றாக உணர வைக்கும்.

எண் 7

7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பாதகமான சூழ்நிலைகளில் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரத்தில் எடுக்கும் எந்த ஒரு முடிவும் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்காது. நிதி இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. முதலீடு செய்ய நினைத்தால், இந்த வாரத்தில் தவிர்ப்பது நல்லது. வேலையில் அலட்சியமாக இருந்தால், அது உங்கள் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும். வேலைப்பளு உங்கள் நடத்தையை மோசமாக பாதிக்கும். இப்படி நடத்தை பாதிக்கப்படுவதால், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் வருத்தப்படுவார்கள்.

எண் 8

8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் ஒரு பெரிய திட்டத்தில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் சவாலாக இருக்கும். தவறான புரிதல்கள் அதிகரிக்கலாம். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களின் பேச்சைக் கேட்டு பணம் தொடர்பான முடிவுகளை எடுக்காதீர்கள். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பழைய நோய் மீண்டும் வரக்கூடும்.

எண் 9

9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் மிகவும் தனிமையாக உணர்வார்கள். பிரச்சனையை சந்தித்தால், அதை அன்புக்குரியவர்களிடம் மனம் திறந்து பேசி தீர்வு காண முயற்சி செய்யுங்கள். அமைதியாக இருந்தால், அது பிரச்சனையை இன்னும் தான் அதிகரிக்கும். வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். சிலர் நல்ல செய்திகளைப் பெறும் வாய்ப்புள்ளது. நிதியைப் பொறுத்தவரை, அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். இப்படி அதிகரிக்கும் செலவுகளை கட்டுப்படுத்தாவிட்டால், பின் சிரமப்பட வேண்டியிருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். காலநிலை மாற்றத்தால் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, July 21, 2024, 7:30 [IST]
Desktop Bottom Promotion