Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Weekly Numerology: இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் பண விஷயங்களில் கவனமாக இருக்கணும்..
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 14 ஜூலை 2024 முதல் 20 ஜூலை 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் நிதி ரீதியாக நன்றாக இருக்கும். உங்கள் வேலைகளில் தடைகளை சந்தித்தாலும், அது தற்காலிகமானது, எனவே நீங்கள் அவசரப்படுவதைத் தவிர்க்கவும். உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வீட்டில் நேர்மறையான சூழ்நிலை இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் வேலையைத் தேடிக் கொண்டிருந்தால், நல்ல வெற்றி கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். சில சுப காரியங்களை வீட்டில் திட்டமிடலாம். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். அவசர முடிவினால் தவறான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். வார இறுதியில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். இந்த வாரம் ஆரோக்கியத்திற்கு போதுமான நேரத்தை ஒதுக்க அறிவுறுத்தப்படுகிறது.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு இந்த வாரம் நிதி ரீதியாக கடினமாக இருக்கும். வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் நடத்தையில் மாற்றம் ஏற்படும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். கல்வி தொடர்பான பிரச்சனைகள் தீரும். காதலிப்பவர்கள் பாதகமான சூழ்நிலைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் மிகவும் சிந்தனையுடன் எடுக்க வேண்டும். வார இறுதியில் உடல்நலம் தொடர்பான பிரச்சனைகள் வரலாம்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த தேதிகளில் பிறந்தவர்கள் இந்த வாரம் நன்றாகவும் புத்துணர்ச்சியுடனும் உணர வைக்கும். காதல் வாழ்க்கையில் காதல் நிறைந்திருக்கும். காதல் உறவை திருமணமாக மாற்ற விரும்பினால், உங்கள் துணையின் ஒப்புதல் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்களின் எந்த விருப்பமும் நிறைவேறும். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணியிடத்தில் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் பணியில் தடைகளை சந்திப்பீர்கள். முக்கியமான முடிவுகளை எடுப்பதில் சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்கள் திறமை மற்றும் செயல்திறனில் நம்பிக்கை வைத்து கடினமாக உழைக்க வேண்டும். இந்த வாரம் உங்கள் பிரச்சனை கண்டிப்பாக தீரும். எங்காவது பயணம் செய்ய திட்டமிடலாம். நிதி நிலைமை நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பார்கள். வேலை தொடர்பான எந்த புதிய திட்டமும் உருவாக்கப்படலாம். வணிகர்களுக்கு சாதகமாக இருக்கும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். காதல் விஷயத்தில் இந்த வாரம் சிறப்பானதாக இருக்கும். திருமணமாகாதவர்கள் துணையை கண்டுபிடிப்பார்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 7. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் உறவுகளில் இனிமை அதிகரிக்கும். உங்கள் துணைக்கு போதுமான நேரத்தை வழங்குவீர்கள். நிதி விஷயங்களில் நீங்கள் விரும்பிய முடிவுகளைப் பெறுவீர்கள். வருமானத்தைப் பெருக்க எடுக்கும் முயற்சிகள் வெற்றி கிடைக்கும். வேலை விஷயத்தில் அலட்சியமாக இருக்க வேண்டாம். முக்கியமான பணிகளை சரியான நேரத்தில் முடிக்க முயற்சி செய்யுங்கள். தொழிலதிபர்கள் பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு சாதகமாக இருக்கும். முன்னேற்றத்திற்கான உங்கள் கனவு விரைவில் நிறைவேறும். வணிகத்தை விரிவுபடுத்த நீங்கள் திட்டமிட்டால், அதை மறுபரிசீலனை செய்வது முக்கியம். பணம் சம்பந்தமாக பிரச்சனை வரலாம். அதிக கவலை உங்கள் பிரச்சனைகளை மேலும் அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துங்கள். மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வை தவிர்த்திடுங்கள். நேர்மறையான நபர்களுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் மாணவர்கள் படிப்பில் கவனக்குறைவாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும் இல்லையெனில் அது உங்கள் தேர்வு முடிவுகளில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். முக்கிய வணிக முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமை இருக்கும், ஆனால் உங்கள் வேலையை முழு உழைப்புடனும் நம்பிக்கையுடனும் செய்வீர்கள். இந்த வாரம் வாழ்க்கைத் துணையுடன் சிறப்பாக இருக்கும். ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியத்தைப் பற்றி அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications