Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
Weekly Numerology: இந்த வாரம் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களின் நிதி நிலையில் உயர்வு ஏற்படப்போகுது..
Weekly Numerology: நம் வாழ்வில் எண்களுக்கு அதிக முக்கியத்துவம் உண்டு. அப்படி எண்களை மையமாக கொண்டு கணிக்கப்படும் ஜோதிடத்திற்கு எண் கணிதம் என்று பெயர். ஒருவரின் எதிர்காலத்தை இந்த எண் கணிதத்தைக் கொண்டு தெரிந்து கொள்ள முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில், இந்த எண் கணிதம் மிகவும் பிரபலமான ஒன்றாகிவிட்டது. ஜோதிடர்களும் எண்களைக் கொண்டு ஒருவரது எதிர்காலத்தைப் பற்றி கணிக்க முடியும் என்று நம்புகிறார்கள். எதிர்காலத்தை மட்டுமின்றி, ஒருவரின் பலம் மற்றும் பலவீனத்தைப் பற்றியும் இந்த கண்களைக் கொண்டு கண்டறிய முடியும்.

ஒருவரின் பிறந்த தேதியிலிருந்து விதி எண் பெறப்படுகிறது. எண் கணிதத்தில் மொத்தம் 1 முதல் 9 வரையிலான எண்கள் உள்ளன. இந்த ஒவ்வொரு எண்ணும் ஒரு கிரகத்திற்கு சொந்தமானது என கூறப்படுகிறது. எனவே, அது ஒவ்வொரு மனிதருக்கும் வித்தியாசமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. சரி, இப்போது 04 ஆகஸ்ட் 2024 முதல் 10 ஆகஸ்ட் 2024 வரையிலான காலகட்டத்திற்கான எண் கணித பலன்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
எண் 1
1,10,19,28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 1. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு தொழில் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். புதிதாக ஏதாவது செய்ய திட்டமிட்டால், உங்கள் முடிவை சிறிது காலத்திற்கு ஒத்திவைக்க அறிவுறுத்தப்படுகிறது. நிதி ரீதியாக சுமாராக இருக்கும். பண வரவு இருந்தாலும், தொடர்ச்சியான செலவுகள் உங்கள் பிரச்சனைகளை அதிகரிக்கலாம். வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். ஆரோக்கியம் குறித்து கவலையுடன் இருப்பீர்கள்.
எண் 2
2,11,20,29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 2. இந்த வார தொடக்கம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு சற்று மோசமாகவே இருக்கும். வேலை சம்பந்தமாக நிறைய அலைய வேண்டியிருக்கும். இருப்பினும், கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைக்காததால் உங்கள் தன்னம்பிக்கை குறையும். அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் பொறுமையாக இருக்க வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம். நீங்கள் கோபம் மற்றும் ஈகோவிலிருந்து விலகி இருக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் தற்போதைய வேலையும் கெட்டுவிடும். திருமண வாழ்க்கையில் டென்ஷன் அதிகரிக்கலாம். ஒழுக்கமாக இருங்கள் இல்லையெனில் உங்களுக்கிடையே பிரிவு ஏற்படலாம். ஆரோக்கியம் பலவீனமாகவே இருக்கும்.
எண் 3
3,12,21,30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 3. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு மிகவும் அருமையாக இருக்கும். நிதி நிலையில் உயர்வு ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வருமானம் கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும். நீங்கள் ஏற்கனவே வேலை செய்து கொண்டிருந்தால், உங்களுக்கு பிடித்த வேலையைச் செய்ய உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். தொழிலதிபர்கள் தடைப்பட்ட வேலையைத் தொடர வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரத்தில், நீங்கள் சில செல்வாக்கு மிக்க நபரின் ஆதரவையும் பெறுவீர்கள்.
எண் 4
4,13,22,31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 4. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் நிதி நிலை மேம்படும். உங்கள் முடிவுகளை சிந்தனையுடன் எடுப்பீர்கள். வேலை தொடர்பான பிரச்சனைகள் தீரும். அனைத்து வேலைகளும் திட்டமிட்டபடி முடிவடையும். உங்கள் முழு கவனமும் உங்கள் இலக்கில் மட்டுமே இருக்கும். பரம்பரை தொழிலில் தொடர்புடையவராக இருந்தால், உங்கள் தந்தையின் ஆதரவைப் பெறுவீர்கள். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், பெற்றோரின் ஒப்புதல் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமாக இருக்கும்.
எண் 5
5,14,23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 5. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் குடும்பத்தினருடன் நிறைய நேரத்தை செலவிடுவார்கள். நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை யோசிக்காமல் செலவு செய்யாதீர்கள். பெரிய முதலீடுகளைச் செய்ய இது சரியான நேரம் அல்ல. வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். உங்கள் ஆற்றல் மட்டம் அதிகரிக்கும் மற்றும் நீங்கள் மிகவும் நேர்மறையாக இருப்பீர்கள்.
எண் 6
6,15,24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 6. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு பணியிடத்தில் முன்னேற்றம் ஏற்படும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் வேலை தொடர்பாக பயணம் செய்யலாம். மாணவர்கள் தங்கள் படிப்பு தொடர்பான நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டால் வெற்றி கிடைக்கும். உங்கள் துணையின் அன்பும் ஆதரவும் உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும். வார இறுதியில் திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
எண் 7
7,16,25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்க உரிய எண் தான் 7. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தொழிலில் பெரிய வெற்றியைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதுடன் சம்பள உயர்வும் கிடைக்கும். இந்த வாரம் தேவையில்லாத விஷயங்களில் நேரத்தை வீணாக்காதீர்கள். திருமணமானவர்களுக்கு வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதங்களை சந்திக்கலாம். எதிர்காலத்தில் நிதி நெருக்கடியைத் தவிர்க்க, சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்கள் நிதி திட்டங்களை சிந்தனையுடன் செய்யுங்கள்.
எண் 8
8,17,26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 8. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவராக இருந்தால், நல்ல வரன் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்கள் வருமானம் கூடும். கடனில் இருந்து விரைவில் விடுதலை பெறுவீர்கள். இந்த வாரத்தில், வேலை தொடர்பான பயணங்கள் நல்ல பலனைத் தரும். நீங்கள் வேலை தேடுகிறீர்களானால், உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும்.
எண் 9
9,18,27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு உரிய எண் தான் 9. இந்த வாரம் இந்த தேதிகளில் பிறந்தவர்களுக்கு வழக்கத்தை விட பண விஷயத்தில் சிறப்பாக இருக்கும். உங்கள் சேமிப்பு அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தேங்கி கிடந்த பணம் திரும்ப கிடைக்க வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே பிரச்சனை இருந்தால் பேசி தீர்க்க முயற்சிக்கும் போது, பிரச்சனை சரியாகும். ஆரோக்கியத்தை புறக்கணிப்பதில் தவறு செய்யாதீர்கள், இல்லையெனில் சில கடுமையான பிரச்சனைகள் ஏற்படலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











