Latest Updates
-
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்காரர்களுக்கு கஷ்டமாவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 ஜூலை 28 ஆம் தேதி முதல் 2024 ஆகஸ்ட் 03 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சியானதாக இருக்கும். வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் எதிர்பார்த்த முடிவைப் பெறுவீர்கள். வேலை தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். மேலும் இந்த வாரத்தில் வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும். சொத்து தொடர்பான வழக்குகள் நடந்து கொண்டிருந்தால், இந்த வாரத்தில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். பணிபுரிவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சம்பளமும் உயர வாய்ப்புள்ளது. வியாபாரிகளின் அனைத்து வேலைகளும் எதிர்பார்த்தவாறு முடிவடையும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் முடிவடையும். உறவுகளைப் பொறுத்தவரை, இனிமையாக இருக்கும். வீட்டில் சுபகாரியங்கள் நடக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் நல்ல இனிமையான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உறவுகளைப் பொறுத்தவரை அற்புதமாக இருக்கும். கஷ்டமான சூழ்நிலைகளில் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தந்தையின் ஆரோக்கியம் இதுவரை மோசமாக இருந்தால், இந்த வாரத்தில் உடல்நிலை மேம்படும். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். கல்வி தொடர்பான முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். கடின உழைப்புக்கான பலனை இந்த வாரத்தில் பெறுவீர்கள்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இந்த வாரம் பண விஷயத்தில் அலட்சியமாக இருப்பதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அதிகமாக செலவு செய்வதையும் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனையில் சிக்கக்கூடும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். கடினமாக உழைத்தாலும் வெற்றி கிடைக்காமல் போனால், மனம் தளராமல் தொடர்ந்து முயற்சிக்க அறிவுறுத்தப்படுகிறது. ஏனெனில் இதற்கான பலன் நிச்சயம் வரக்கூடிய நாட்களில் கிடைக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பொறுமையை கடைப்பிடிப்பதோடு, புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும். அவசரமாக எந்த ஒரு முடிவுகளையும் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவே பெரிய பிரச்சனைகளை கொண்டு வரும். தொழிலதிபராக இருந்தால் இந்த வாரத்தில் எந்த முடிவுகளையும் எடுக்காமல் இருப்பது நல்லது. பணிபுரிபவர்களுக்கு இந்த வாரத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவதை பலவீனமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் உங்கள் எதிரிகள் சுறுசுறுப்பாக இருப்பார்கள் மற்றம் உங்கள் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிப்பார்கள். எனவே சற்று கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் கவனக்குறைவாக இருந்தால் உங்களின் முக்கியமான வேலைகள் முழுமையடையாமல் போகும். உழைத்து சம்பாதித்த பணத்தை சரியாக பயன்படுத்தினால் நல்லது. இல்லாவிட்டால், அந்த பணம் வீணாக செலவாகி, பெரிய நிதி நெருக்கடியை உண்டாக்கிவிடும். தேவையற்ற விஷயங்களை மனதில் நினைத்து கவலைப்படுவதைத் தவிர்த்திடுங்கள். இல்லாவிட்டால், உங்கள் ஆரோக்கியம் மோசமாகிவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications