Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்காரர்களுக்கு வேதனையாவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 ஆகஸ்ட் 25 ஆம் தேதி முதல் 2024 ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல வெற்றியைக் காண்பார்கள். இந்த வாரத்தில் முன்னேற்றத்திற்கான சில நல்ல வாய்ப்புக்களும் கிடைக்கும். செலவுகள் அதிகரிக்கும். இருந்தாலும், வருமானத்தில் உயர்வு ஏற்படும். குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையாக நேரத்தை கழிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். மாணவர்கள் படிப்பில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வேலை தேடிக் கொண்டிருந்தால், இந்த வாரத்தில் விரும்பிய வேலை கிடைக்கும். ஏற்கனவே பணிபுரிந்து கொண்டிருப்பவர்களுக்கு பதவி உயர்வு அல்லது வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்கள் வேலைகளில் இருந்த தடைகள் நீங்கும். தம்பதிகளுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். காதல் திருமணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்தால், இந்த வாரத்தில் அது நிறைவேறும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல முன்னேற்றத்தையும், நிதி ஆதாயத்தையும் தருவதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. தொழிலதிபர்கள் இந்த வாரத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம். தம்பதிகள் அவசரப்பட்டு எந்த முடிவு எடுப்பதையும் தவிர்க்க வேண்டும். திருமணமாகாதவர்கள் தங்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆரோக்கியமானது சற்று பலவீனமாக இருக்கும். உங்களின் முக்கியமான வேலைகள் முழுமையடையாமல் போகலாம். பணிபுரிபவர்கள் இந்த வாரத்தில் பணிச்சுமையை சந்திக்கலாம். வேலையை மாற்ற நினைத்தால், அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெற வேண்டும். இந்த வாரத்தில் அதிக செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். வருமானத்தை விட செலவு அதிகமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களின் உறவுகளில் சில மனக்கசப்புகள் அதிகரிக்கலாம். அன்புக்குரியவர்களின் நடத்தை உங்கள் மனதை மோசமாக பாதிக்கலாம். இந்த வாரம் தனிப்பட்ட வாழ்க்கை சற்று மோசமாக இருக்கும். எதிலும் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவீர்கள். கவனக்குறைவு எதிர்மறையான விளைவுகளுக்கு வழிவகுக்கும். பணப் பிரச்சனைகளைத் தவிர்க்க, செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்துங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கலவையான பலன்கள் கிடைக்கும். வேலைகளில் சில தடைகளை சந்திக்கலாம். இருப்பினும் பொறுமையை கடைப்பிடிக்க வேண்டும். உங்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். வேலையில் பிஸியாக இருப்பதால், உங்களால் அன்பானவர்களுடன் அதிக நேரம் செலவிட முடியாமல் போகும். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் வாழ்க்கைத் துணைக்கு உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு தேவைப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications