Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமாவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 ஜூலை 21 ஆம் தேதி முதல் 2024 ஜூலை 27 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வீட்டின் சூழல் இனிமையாக இருக்கும். குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். இந்த வாரத்தில் உங்களின் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான பாதை திறக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இந்த வாரத்தில் நீங்கள் நேர்மறையாகவும், மிகுந்த ஆற்றலுடனும் இருப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். காதல் வாழ்க்கை மற்றும் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் திருமணம் செய்து கொள்ள நினைத்தால், இந்த வாரத்தில் பெற்றோரின் சம்மதம் கிடைக்கும். தன்னம்பிக்கை இந்த வாரம் அதிகரிக்கும். வணிகர்களுக்கு இந்த வாரம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நிதி நிலை வலுவடையும். சொத்துக்களில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும் வாயப்புள்ளது. காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக சாதகமாக இருக்காது. பண விஷயங்களில் அவசரப்பட வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. அலுவலகத்தில் வேலைப்பளு அதிகமாக இருக்கும். தம்பதிகளுக்கு இடையே தவறான புரிதல்கள் அதிகரிக்கும். இதனால் உங்களின் மன அழுத்தம் அதிகரிக்கும். மன ரீதியாக அதிகம் பாதிக்கப்படுவீர்கள் மற்றும் உடல் ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும். இந்த வாரத்தில் ஆரோக்கியம் மற்றும் பணம் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திப்பீர்கள். ஆரோக்கியம் பாதிக்கப்படுவதால் உங்களின் வேலையும் பாதிக்கப்படும். இதன் விளைவாக பல முக்கியமான வேலைகளை முடிக்க முடியாமல் போகும். இந்த வாரத்தில் வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். பட்ஜெட்டை மனதில் வைத்து செலவழிக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் பெரிய பண பிரச்சனையை சந்திக்க நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் தனிப்பட்ட வாழ்க்கையாக இருந்தாலும் சரி, தொழில் வாழ்க்கையாக இருந்தாலும் சரி சவால் நிறைந்ததாக இருக்கும். இதனால் உங்களின் நம்பிக்கை சற்று குறையக்கூடும். பணியிடத்தில் உங்கள் திறனை விட அதிகமாக வேலை செய்யாதீர்கள். இல்லாவிட்டால், அது உங்கள் செயல்திறனை பாதிக்கும். மேலும் உங்களின் ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படும். முக்கியமாக இந்த வாரத்தில் முதலீடுகள் செய்வதைத் தவிர்க்க வேண்டும். அதோடு எந்த ஒரு முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் நன்கு சிந்தித்து எடுக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications