Latest Updates
-
சனிக்கிழமையில் பிறந்தவர்களின் குணமும், எதிர்காலமும் எப்படி இருக்கும் தெரியுமா? -
100 ஆண்டுகள் கழித்து மீன ராசியில் உருவாகும் சதுர்கிரக யோகம்: கோடீஸ்வர யோகம் பெறும் 3 ராசிகள்! -
செட்டிநாடு கார அடை-தேங்காய் இஞ்சி சட்னி ரெசிபி காம்போ... இதை செஞ்சு கொடுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
தக்காளி சட்னியை ஒருடைம் இந்த பக்குவத்துல செய்யுங்க.. வீட்டுல 10 இட்லி கூட சாப்பிடுவாங்க... -
இன்றைய ராசிபலன் 14 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
குரு-சந்திர சேர்க்கையால் உருவாகும் கஜகேசரி ராஜயோகம்: மார்ச் 26 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்.. -
குருபகவானின் ராசிக்கு சூரியன் செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்..உங்க ராசி என்ன? -
காரடையான் நோன்பு ஸ்பெஷல் உப்பு அடை ரெசிபி... இதை செஞ்சு கொடுங்க... வீட்ல எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க...! -
உங்க முழங்கால் கருப்பா இருக்கா? வெள்ளையாக்க இந்த 5 வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...!
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்காரர்களுக்கு சிரமமாகவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் 2024 ஆகஸ்ட் 17 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்பட்டு, பணம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலதிபர்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். மொத்தத்தில் இந்த வாரம் அற்புதமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரமானது மிகவும் அற்புதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு அல்லது இடமாற்றம் கிடைக்கலாம். உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவு கிடைக்கும். அரசியலில் இருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தொழிலதிபர்ளுக்கு முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். இந்த வாரத்தின் இறுதியில் பயணம் மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல பலனைத் தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமான வாரமாக இருக்கும். நீண்ட கால கடின உழைப்புக்கான பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். மாணவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். படிப்பில் இருந்த தடைகள் நீங்கும். பணப் பிரச்சனைகள் தீரும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். செல்வாக்கு மிக்க நபரின் நட்பு இந்த வாரத்தில் கிடைக்கும். இந்த நட்பால் எதிர்காலத்தில் நல்ல பலன் கிடைக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் உறவுகளில் சிக்கல்களை சந்திக்கலாம். வீட்டின் சூழல் மிகவும் மோசமாக இருக்கும். இந்நிலையில் சீரான முறையில் நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. நிதி நிலையில் சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. வருமானத்தை விட செலவுகள் அதிகரிக்கும். இந்த வாரத்தில் பழைய கடன் தொந்தரவு செய்யலாம். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்கலாம். இதன் விளைவாக உங்களின் ஆரோக்கியம் மோசமாக பாதிக்கப்படலாம். ஆரோக்கிய விஷயத்தில் அலட்சியமாக இருக்காதீர்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகிவிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரமானது தொழில் ரீதியாக சற்று மோசமாக இருக்கும். எந்த முடிவுகளையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம். பாதகமான சூழ்நிலைகளில் பொறுமையாக இருக்க வேண்டும். மற்றவர்களின் பேச்சை கேட்டு நடப்பதைத் தவிர்க்க வேண்டும். குழந்தைகளால் பிரச்சனைகளை சந்திக்கலாம். தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சனையால் உங்களின் வேலைகளை முழுமையாக முடிக்க முடியாமல் போகலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வயிறு தொடர்பான பிரச்சனைகள் உங்களை தொந்தரவு செய்யலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணிச்சுமை அதிகமாக இருக்கும். அதிக மன அழுத்தத்தை உணர்வீர்கள். வியாபாரிகள் இந்த வாரத்தில் கலவையான பலன்களைப் பெறலாம். எதிர்பார்த்த எந்த காரியமும் நடக்காமல் போகலாம். இந்த சூழ்நிலையில் அவசரமாக எந்த முடிவையும் எடுக்காதீர்கள். இல்லாவிட்டால் வருத்தப்பட நேரிடும். வாழ்க்கைத் துணையுடனான உறவை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். உங்கள் துணையை கண்டுகொள்ளாமல் விட்டால் பின் இருவருக்கும் இடையேயான தூரம் அதிகரித்துவிடும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











