Latest Updates
-
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன? -
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம்
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்காரர்களுக்கு மோசமாகவும் இருக்க போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 செப்டம்பர் 08 ஆம் தேதி முதல் 2024 செப்டம்பர் 14 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் பணியிடத்தில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் நல்ல சாதகமான பலனைத் தரும். திருமணமாகாதவர்கள் இந்த வாரம் தங்கள் வாழ்க்கைத் துணையைக் காணலாம். ஏற்கனவே திருமணமாகி இருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி ரீதியாக இந்த வாரம் சுமாராக இருக்கும். இந்த வாரம் பட்ஜெட் போட்டு செலவு செய்து வந்தால், எந்த பிரச்சனையையும் சந்திக்காமல் தப்பிக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு அற்புதமான வாரமாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்ய வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது இந்த வாரத்தில் நிறைவேறும். உடன் பிறந்தவர்களின் திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கும். நிதி ரீதியாக இந்த வாரம் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். உங்களின் வசதிகளும், ஆடம்பரமும் அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் நிதி நிலைமை மேம்படும். கடன் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். இந்த வாரத்தில் அலுவலகத்தில் வேலைப்பளுவை சந்திக்கலாம். இருப்பினும், கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையால் வெற்றி பெறுவீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் நன்றாக இருக்கும். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சிறப்பாக உணர்வீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல மகிழ்ச்சியான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். மோசமான சூழ்நிலைகளில் பொறுமையாக இருக்க வேண்டும். இந்த வாரத்தில் உங்கள் சிரமங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருக்க வேண்டும். அலட்சியமாக இருந்தால், தேர்வுகளில் மோசமான முடிவுகளைப் பெறக்கூடும். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும். ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனை இருந்தால், இந்த வாரத்தில் அது மோசமடையும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சுமாராக இருக்கும். எந்த முடிவுகளையும் கவனமாக எடுத்தால், பல பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். வருமானத்திற்கு அதிகமாக செலவழிப்பதைத் தவிர்க்க வேண்டும். சம்பாதித்த பணத்தை கவனமாக பயன்படுத்த வேண்டும். உங்களின் சோம்பேறித்தனம் மற்றும் மந்தம் உங்களின் முக்கியமான வேலைகளை முடிப்பதில் தாமதத்தை ஏற்படுத்தும். சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்க யோகா, தியானத்தை ஈடுபட அறிவுறுத்தப்படுகிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை தொடர்பான கவலைகள் சற்று அதிகரிக்கும். எவ்வளவு உழைத்தாலும் எதிர்பார்த்த பலன் கிடைக்காமல் போகும். வேலைப்பளு அதிகமாக இருப்பதால், மிகவும் எரிச்சலடைவீர்கள். உங்கள் வேலையில் நல்ல பலனைப் பெற ஓய்வு சற்று அவசியம். போதுமான ஓய்வைப் பெற்றால், வேலைகளை வெற்றிகரமாக முடிக்கலாம். நிதி ரீதியாக இந்த வாரம் சற்று மோசமாக இருக்கும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
