இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்காரர்களுக்கு சவாலாகவும் இருக்கப்போகுது...

Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 ஜூலை 07 ஆம் தேதி முதல் 2024 ஜூலை 13 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.

அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

Weekly Lucky And Unlucky Zodiac Signs From 07 July - 13 July 2024 In Tamil

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். உறவுகள் சிறப்பாக இருக்கும். அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இந்த வாரத்தில் அதிலிருந்து தீர்வு கிடைக்கும். நீண்ட காலமாக தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். சொத்துக்களை விற்க முயற்சித்துக் கொண்டிருந்தால், இந்த வாரத்தில் அதை முடிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் உங்களுக்கு சாதகமாக வரும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கும். புதிய வேலைகளைத் தொடங்க நினைத்தால், இந்த வாரத்தில் தொடங்கினால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான ஒருங்கிணைப்பு மேம்படும் மற்றும் அவர்களின் உதவியால் வேலைகளை எளிதில் செய்து முடிப்பீர்கள். வாரத்தின் நடுப்பகுதியில் வீட்டில் சுபகாரியங்கள் நடக்கலாம். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். காதலித்து வருபவர்கள் இந்த வாரத்தில் திருமணத்திற்கு பெற்றோரின் ஒப்புதலைப் பெறலாம்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரமானது சாதகமாக இருக்கும். இந்த வாரத்தில் பெரிய சாதனைகளை புரிவார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறி மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கும். இதுவரை வாழ்வில் சந்தித்து வந்த பிரச்சனைகள் இந்த வாரத்தில் நீங்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். தம்பதிகளுக்கு இடையே பிணைப்பு அதிகரிக்கும்.

இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சவாலானதாக இருக்கும். தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்த்திடுங்கள். உங்களின் சில முக்கியமான வேலைகளில் தடைகளை சந்திக்க நேரிடும். உங்கள் பிரச்சனைகள் இந்த வாரத்தில் அதிகரிக்கும். சுயநலவாதிகளிடம் இருந்து விலகி இருங்கள். இல்லாவிட்டால் உங்கள் பெருந்தன்மையை அவர்கள் பயன்படுத்திக் கொள்வார்கள். இந்த வாரத்தில் காரணமின்றி மிகுந்த மன அழுத்தத்த சந்திப்பீர்கள். எதிர்மறை எண்ணங்களால் நிரம்பியிருப்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் கடுமையான பேச்சு மற்றும் பிடிவாத குணத்தால் விமர்சனங்களை சந்திக்க நேரிடும். உங்களின் சில முக்கியமான வேலைகள் பாதியிலேயே தடைபடலாம். இதனால் உங்களுக்கு பெரிய இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களின் நண்பர்கள் உங்களிடம் இருந்து விலகி இருக்க நினைப்பார்கள். இது உங்களுக்கு பிரச்சனைகளை உண்டாக்கும். உங்கள் உணர்ச்சிகளை இந்த வாரம் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கையில் ஏற்படும் குழப்பங்களால் மன அழுத்தத்தை அனுபவிப்பீர்கள். இதனால் உங்கள் ஆரோக்கியமும் மோசமாக பாதிக்கப்படும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் எதிரிகள் உங்கள் மீது அதிக ஆதிக்கம் செலுத்துவார்கள். இது உங்களுக்கு சிக்கல்களை அதிகரிக்கும். முன்னேற்றத்தில் தடைகளை சந்திக்க நேரிடும். இந்த வாரத்தில் அவசரத்தை தவிர்க்க வேண்டும். வியாபாரிகளுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. எந்த முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. மற்றவர்களின் பேச்சைக் கேட்டு எந்த வேலையையும் செய்யாதீர்கள். உறவுகளில் சில விரிசல் ஏற்படலாம். இந்த வாரம் உங்கள் பேச்சு மற்றவர்களை அதிகம் காயப்படுத்தும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, July 8, 2024, 9:22 [IST]
Desktop Bottom Promotion