Latest Updates
-
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா?
இந்த வாரம் இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிகளுக்கு கஷ்டமாவும் இருக்கப்போகுது...
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2025 பிப்ரவரி 02 ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 08 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரத்தில் தொழிலில் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலையை மாற்ற நினைத்தால், இந்த வாரம் சாதகமாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். குடும்ப சூழல் அமைதியாக இருக்கும். சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். இருந்தாலும், உடல் சோர்வைத் தவிர்க்க ஓய்வு எடுக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இந்த வாரம் தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் இந்த ராசிக்காரர்களின் கடின உழைப்பு நல்ல பாராட்டைப் பெறும். வியாபாரிகளுக்கு முக்கிய வேலை வெற்றிகரமாக நடக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். உறவுகள் வலுவடையும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். காதல் வலுவடையும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையில் தடைகளை சந்திக்கலாம். இருப்பினும் அதை புத்திசாலித்தனத்தால் சரிசெய்வீர்கள். நிதி ரீதியாக எந்த முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். குடும்பத்தில் மனக்கசப்புகள் அதிகரிக்கலாம். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் பொறுமை சோதிக்கப்படலாம். பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். காதல் உறவுகளில் சிறுசிறு பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு சற்று சவாலாக இருக்கும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications