Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
இந்த வாரம் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமாகவும், இந்த 3 ராசிக்கு துரதிர்ஷ்டமாகவும் இருக்கப்போகுது..
Weekly Lucky And Unlucky Zodiac Signs: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் நிலைகளின் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் நிலைகளுக்கு ஏற்ப மனித வாழ்க்கையிலும் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2024 செப்டம்பர் 01 ஆம் தேதி முதல் 2024 செப்டம்பர் 07 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், 12 ராசிக்காரர்களின் நிதி நிலை, குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்படும்.
அதில் சில ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மிகவும் அதிர்ஷ்டமானதாவும், இன்னும் சிலருக்கு பிரச்சனைகள் நிறைந்ததாகவும் இருக்கும். இப்போது இந்த வாரத்தின் அதிர்ஷ்டமான மற்றும் துரதிர்ஷ்டமான ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

இந்த வாரத்தின் அதிர்ஷ்ட ராசிகள்...
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். உங்கள் கடின உழைப்புக்கன் முடிவுகளை இந்த வாரத்தில் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்களால் உங்களின் பண பிரச்சனைகள் தீரும். உறவுகள் இனிமையாக இருக்கும். கடினமான சூழ்நிலைகளில் அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். திருமணமாகாதவர்கள் தங்கள் துணையை சந்திக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் உங்களின் வெற்றியானது நம்பிக்கையை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வு பெறும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. பழைய கடன்களை அடைத்துவிடுவீர்கள். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது. இந்த வாரம் நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும் தேவையில்லாத செலவு உங்களுக்கு தீங்கை விளைவிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் நம்பிக்கை அதிகரிக்கும். நேர்மறையாக உணர்வீர்கள். வேலை தொடர்பான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். எந்த ஒரு வேலையை தொடங்கினாலும் வெற்றி கிடைக்கும். முக்கியமான பிரச்சனைகளைத் தீர்க்க அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். செலவுகளை எளிதில் கட்டுப்படுத்துவீர்கள்.
இந்த வாரத்தின் துரதிர்ஷ்ட ராசிகள்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தனிப்பட்ட மற்றும் தொழில் வாழ்க்கை என இரண்டிலும் பாதகமான சூழ்நிலைகளை சந்திக்க நேரிடும். அதிக செலவுகள் காரணமாக பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மன அழுத்தம், பதட்டம் போன்றவற்றால் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இந்த வாரத்தில் பிரச்சனைகளைக் கண்டு பயப்படாமல், தைரியமாக அதை எதிர்கொள்ள முயற்சிக்க வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அலட்சியமாக இருந்தால் அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். எனவே சற்று கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் கவனத்தை செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கையில் பிரச்சனைகள் அதிகரித்து, உங்களுக்கும், உங்கள் துணைக்கும் இடையே அன்பும் நம்பிக்கையும் இல்லாமல் போகலாம். போதுமான ஓய்வு இல்லாதது உங்கள் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தனிப்பட்ட வாழ்க்கையில் உள்ள பிரச்சனைகள் உங்கள் மன அழுத்தத்தை அதிகரிக்கும். இதன் விளைவாக உங்களால் வேலையில் கூட கவனம் செலுத்த முடியாமல் போகலாம். மேலும் இந்த வாரத்தில் நிதி இழப்புகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. இந்த வாரத்தில் அவசர முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications