Weekly Love Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் திருமண வாழ்வில் இருந்த பிரச்சனை அகலும்...

Weekly Love Horoscope: ஒருவரது வாழ்க்கையில் இன்பம், துன்பம் அனைத்துமே அவர்களது கிரக நிலைகளை அடிப்படையாக கொண்டு நடக்கக்கூடியவை. அதிலும் திருமணம், காதல் என வரும் போது அதில் ஜாதகம் முக்கிய பங்கு வகிக்கிறது.

வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி, காதல் துணையாக இருந்தாலும் சரி, உங்கள் உறவைப் பற்றி உங்கள் மனதில் பல கேள்விகள் எழுவது இயல்பு தான். அந்த வகையில் இந்த வாரம் உங்கள் காதல் அல்லது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள, வாராந்திர காதல் ராசிபலனை உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம்.

Weekly Love Horoscope From 29 July To 04 August 2024 In Tamil

இந்த வாரம் ஜூலை 29 முதல் ஆகஸ்டு 04ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், கிரகங்களின் சேர்க்கை மற்றும் இயக்கம் காரணமாக, 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்...

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, காதல் அல்லது திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கும். உங்கள் மனதில் ஒரு விசித்திரமான அமைதியின்மை இருக்கும். மேலும், நீங்கள் எந்த வேலையும் செய்ய விரும்ப மாட்டீர்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும். உங்கள் துணையின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும். உங்கள் கருத்து வேறுபாடுகளை அதிகரிக்கும் எதையும் செய்யாதீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, உங்களின் காதல் உறவு மோசமடையக்கூடும். உங்கள் உறவைப் பற்றி மனதில் சில குழப்பங்கள் உண்டாகலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் உங்கள் துணையுடன் வெளிப்படையாக பேசுவது நல்லது. இல்லையெனில், உங்களுக்கு இடையே பதற்றம் மேலும் அதிகரித்து விடும். உங்கள் பிரச்சனையில் மூன்றாம் நபர்கள் தலையிடாதபடி பார்த்து கொள்ள வேண்டியது அவசியம்.

மிதுனம்

மிதுனம் ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். அன்பும் பாசமும் உங்களிடையே அதிகரிக்கும். பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். காதல் உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் துணையும் உங்களுக்கு திருமணத்திற்கு முன்மொழியலாம். தனிமையில் இருக்கும் மிதுன ராசிக்காரர்களுக்கு, காதல் கதவைத் தட்டலாம்.

கடகம்

கடக ராசிக்காரர்களே, நீங்கள் திருமணமாகாதவர் மற்றும் உங்கள் திருமணத்தில் சில தடைகள் இருந்தால், இந்த வாரம் அந்த பிரச்சனை தீர்க்கப்படும். நீங்கள் விரும்பியவரே வாழ்க்கைத் துணையாக கிடைக்கவும் வாய்ப்புள்ளது. நீங்கள், ஏற்கனவே திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் உறவில் காதல் அதிகரிக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, இந்த காலக்கட்டத்தில் உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். நீங்கள் ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை ஒதுக்க முடியும். திருமணமானவர்களின் வாழ்க்கையில் மனஅழுத்தம் இருக்கும். உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். இல்லையெனில், உங்கள் வாழ்க்கைத் துணை உங்களை விட்டு விலகிச் செல்லலாம். உங்களுக்கிடையில் இருக்கும் மனகசப்பு உங்கள் குழந்தைகளிடமும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, இந்த நேரம் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிப்பீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பில் தொலைந்து போவீர்கள். எதிர்காலத்திற்கான சில திட்டங்களையும் நீங்கள் தீட்டலாம். இந்த வாரம் காதல் ஜோடிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தரும். குறிப்பாக நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், உங்கள் விருப்பம் நிறைவேறும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, இந்த வாரம் காதல் ஜோடிகளுக்கு மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். உங்கள் உறவு மேலும் வலுவடையும். திருமண வாழ்வில் நிலவும் பிரச்சனைகளைத் தீர்க்க இருவரும் முயற்சி செய்ய வேண்டும். எல்லா வெறுப்பையும் மறந்துவிட்டு ஒரு புதிய தொடக்கத்தை உருவாக்க முயற்சிக்கவும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம் காதல் விஷயத்தில் சாதகமாக இருக்கும். நீங்கள் சமீபத்தில் ஒருவரிடம் காதலை முன்மொழிந்திருந்தால், நீங்கள் நேர்மறையான பதிலைப் பெறலாம். திருமணமானவர்களுக்கு இந்த வாரம் சற்று கடினமானதாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணையைப் பற்றி நீங்கள் ஏதாவது மோசமான அபிப்ராயத்தை கொண்டிருந்தால், அதைப் புறக்கணிக்க முயற்சி செய்யுங்கள். இல்லையெனில் உங்களுக்கிடையேயான கருத்து வேறுபாடுகள் ஆழமாகலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத் துணைக்கு அதிக நேரம் கொடுப்பீர்கள். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களுக்கிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். இந்த நேரத்தில், நீங்கள் ஒன்றாக பயணம் மேற்கொள்ளவும் திட்டமிடலாம். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும். உங்கள் காதல் தொடர்ந்தால் உங்களிடையே அன்பும் நம்பிக்கையும் அதிகரிக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் நடக்கும் பிரச்சனைகள் உங்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும். சில விஷயங்களில் உங்களுக்குள் வாக்குவாதம் ஏற்படலாம். நீங்கள் அமைதியாக உட்கார்ந்து உங்களுக்கு இடையே உள்ள பிரச்சனையைப் பேசி தீர்க்க முயற்சி செய்தால் நல்லது. காதல் ஜோடிகள் சில சவால்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். ஈகோ மற்றும் மோதலைத் தவிர்க்கவும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே,திருமண வாழ்க்கையில் அன்பும் உற்சாகமும் இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடன் செலவழித்த தருணங்கள் உங்களுக்கு மறக்கமுடியாததாக இருக்கும். தனிமையில் இருப்பவர்களின் வாழ்க்கையில் ஒரு புதிய நபர் நுழையலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் காதல் வாழ்க்கை விரைவில் தொடங்கும். உங்கள் காதல் விவகாரம் ஏற்கனவே நடந்து கொண்டிருந்தால், உங்கள் துணையிடமிருந்து அழகான ஆச்சரியத்தை நீங்கள் பெறலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால், அதைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். இந்த நேரத்தில், உங்கள் உறவை மேம்படுத்த நல்ல வாய்ப்பு கிடைக்கும். கிடைக்கும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் நல்லது. காதலில் புரிதல் மேலோங்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் சில அழகான இடத்தில் நேரத்தை கழிக்கலாம்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, July 30, 2024, 6:30 [IST]
Desktop Bottom Promotion