Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
Weekly Love Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்களின் காதலில் இருந்த பிரச்சனை விலகி நம்பிக்கை அதிகரிக்கும்..
Weekly Love Horoscope: ஒருவரது வாழ்க்கையில் இன்பம், துன்பம் அனைத்துமே அவர்களது கிரக நிலைகளை அடிப்படையாக கொண்டு நடக்கக்கூடியவை. அதிலும் திருமணம், காதல் என வரும் போது அதில் ஜாதகம் முக்கிய பங்கு வகிக்கிறது.
வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி, காதல் துணையாக இருந்தாலும் சரி, உங்கள் உறவைப் பற்றி உங்கள் மனதில் பல கேள்விகள் எழுவது இயல்பு தான். அந்த வகையில் இந்த வாரம் உங்கள் காதல் அல்லது திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைத் தெரிந்துகொள்ள, வாராந்திர காதல் ராசிபலனை உங்களுக்காக இங்கே தொகுத்துள்ளோம்.

இந்த வாரம் ஜூலை 22 முதல் ஜூலை 28ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், கிரகங்களின் சேர்க்கை மற்றும் இயக்கம் காரணமாக, 12 ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை எப்படி இருக்க போகிறது என்பதை இப்போது தெரிந்து கொள்வோம்...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, காதல் உறவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நீங்கள் அவசரத்தைத் தவிர்க்க வேண்டும். புத்திசாலித்தனமாக செயல்பட்டால், வரவிருக்கும் பல சிக்கல்களைத் தவிர்க்கலாம். வாழ்க்கைத் துணையாக இருந்தாலும் சரி, காதல் துணையாக இருந்தாலும் சரி, ஒருவருக்கொருவர் நம்பிக்கையை அதிகரிக்க வேண்டும். உங்கள் உறவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். காதல் வாழ்க்கையில் உங்களுக்கு இடையே காதல் அதிகரிக்கும். கடினமான சூழ்நிலைகளில் உங்கள் துணையின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். இந்த நேரம் உங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நீங்கள் ஒருவரையொருவர் பெற்றதில் மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணருவீர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உங்கள் திருமண வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து சில நல்ல செய்திகளைப் பெறலாம். நீங்கள் தனிமையிலிருந்தால் விரைவில் யாராவது உங்கள் வாழ்க்கையில் நுழையலாம். உங்கள் காதல் உறவு வலுவாக இருக்கும். உங்களுக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். இந்த நேரத்தில், நீங்கள் உங்கள் துணைக்கு ஒரு வாக்குறுதி அளிக்கலாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களே, உங்கள் காதல் உறவில் இனிமை இருக்கும். உங்கள் பரஸ்பர புரிதல் மேம்படும். உங்கள் இல்லற வாழ்க்கை சீராக முன்னேறும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வெளியூர் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதனால், நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையின் பழைய நினைவு மீண்டும் புதுப்பிக்கப்படும். உங்கள் காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். உங்கள் துணை உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பார்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, வேலை அழுத்தம் உங்கள் திருமண வாழ்க்கையைப்ள பாதிக்கும். வெளி பிரச்சனைகளை வீட்டிற்குள் கொண்டு வர வேண்டாம். இல்லையெனில், உங்களுக்குள் இடைவெளி அதிகரிக்கலாம். நீங்கள் வீண் விவகாரங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்த வாரம் காதல் வாழ்க்கையில் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் சந்தித்து கொள்ள வாய்ப்பு குறைவு. உங்கள் துணை உங்களைப் புறக்கணிக்கக் கூடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் நிலவும் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து உங்கள் உறவு மேம்படும். இந்த நேரத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் அதிகபட்ச நேரத்தை ஒதுக்க முடியும். எதிர்காலத்திற்கான சில திட்டங்களையும் நீங்கள் செய்யலாம். காதல் ஜோடிகளுக்கு இந்த வாரம் மிகவும் காதல் நிறைந்ததாக இருக்கும். உங்கள் உறவு தொடர்பான பெரிய முடிவையும் நீங்கள் எடுக்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, நீங்கள் பல பிரச்சனைகளால் சூழப்பட்டிருப்பீர்கள். அதனால், உங்கள் திருமண வாழ்க்கையில் நீங்கள் சரியான கவனம் செலுத்த முடியாமல் போகலாம். உங்களுக்கிடையில் நல்ல புரிதல் காரணமாக எந்த பிரச்சனையும் இருக்காது. இருப்பினும், உங்கள் துணையைப் புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும். நீங்கள் திருமணமாகாதவராகவும், நீங்கள் விரும்பும் வாழ்க்கைத் துணையைத் தேடுபவர்களாகவும் இருந்தால், உங்கள் தேடல் முடிவடையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் பேச்சில் கடுமை தன்மை இருக்கும். இது உங்கள் உறவில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். உங்கள் வார்த்தைகளை மிகவும் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். இந்த காலகட்டத்தில் உங்களுக்கு ஏதேனும் காதல் திட்டம் வந்தால், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காதீர்கள். நீங்கள் ஏற்கனவே ஒரு உறவில் இருந்தால், இந்த நேரம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, பாதகமான சூழ்நிலைகளில் உங்கள் வாழ்க்கைத் துணை உங்கள் மன உறுதியை அதிகப்படுத்துவார். இந்த நேரத்தில் நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பில் தொலைந்து போவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணை மீது உங்களுக்கு அன்பும் பாசமும் அதிகரிக்கும். காதல் உறவுகளில் நெருக்கம் அதிகரிக்கும். உங்கள் துணையைத் திருமணத்திற்கு முன்மொழிய விரும்பினால், இந்த நேரம் அதற்கு சாதகமானது. நேர்மறையான பதிலைப் பெறுவீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே, உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகிறீர்களோ, அந்த அளவுக்கு உங்கள் உறவு வலுவாகவும், ஆழமாகவும் இருக்கும். உங்கள் கவனக்குறைவால் உங்கள் வாழ்க்கைத் துணை கோபப்படலாம். உணர்ச்சி ரீதியாக உங்கள் அன்புக்குரியவர் மிகவும் பலவீனமாக உணருவார். உங்கள் உறவின் இனிமையைத் தக்கவைக்க, அவர்களின் உணர்வுகளை மதிக்க வேண்டும். காதல் வாழ்க்கையில் சற்று மனஅழுத்தம் இருக்கும். உங்களுக்கிடையே பரஸ்பர புரிதல் குறையும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். இந்த நேரத்தில் உங்கள் உறவில் புதுமையை உணர்வீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையிடமிருந்து நீங்கள் ஒரு பெரிய ஆச்சரியத்தையும் பெறலாம். காதல் வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகி உங்களிடையே நம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் நண்பர்களும் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாக உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே, நீங்கள் திருமணமாகாதவராக இருந்தால், விரும்பிய வாழ்க்கைத் துணையைப் பெறலாம். நீங்கள் திருமணமானவராக இருந்தால், உங்கள் உறவில் நல்லிணக்கம் இருக்கும். இதன் மூலம் உங்கள் வீட்டின் சூழ்நிலையும் இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், உங்கள் காதலுக்கும் குடும்பத்தாரின் ஒப்புதலைப் பெறலாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











