Latest Updates
-
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
வார ராசிபலன் (21 July 2024 To 27 July 2024)- இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு பண மழை பொழியப்போகுது..
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 ஜூலை 21 ஆம் தேதி முதல் 2024 ஜூலை 27 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். பணம் தொடர்பான விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். வேலையைப் பொறுத்தவரை பிஸியாக இருப்பீர்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இருப்பினும் வேலையுடன் உங்கள் ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. உறவுகளைப் பொறுத்தவரை சுமாராகவே இருக்கும். இந்த வாரத்தில் நிதானமாகவும் புத்திசாலித்தனமாகவும் செயல்பட வேண்டும். மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் மோசமாக இருப்பதால், உங்களின் நடத்தையும் மோசமாக இருக்கும். இந்த வாரத்தில் அதிகம் எரிச்சலடைவீர்கள். முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல் அவதிப்படுவீர்கள். உங்களின் வேலைகள் முழுமையடையாமல் பாதியுடன் நிற்கும். பணத்தைப் பொறுத்தவரை, செலவுகள் அதிகமாக இருக்கும். பாதகமான சூழ்நிலைகளில் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால், நல்ல வேலை கிடைக்கும். இருப்பினும் கடினமாக உழைக்க வேண்டும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதலைப் பொறுத்தவரை சிறப்பானதாக இருக்கும். உங்களின் சில பிரச்சனைகள் இந்த வாரத்தில் தீர்க்ககப்படும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் இனிமையாக இருக்கும். உங்கள் முன்னேற்றத்தில் இருந்த தடைகள் நீங்கும். வெளியூர் சென்று வேலை செய்ய நினைத்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். எந்த ஒரு முக்கிய முடிவையும் உங்கள் நிதி நிலைமையை மனதில் கொண்டு எடுக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அதற்காக அலட்சியமாக இருக்காதீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். தேவையற்ற விஷயங்களை ஒதுக்கி வைத்துவிட்டு முக்கியமான வேலைகளில் கவனம் செலுத்துவீர்கள். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இருப்பினும் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். வணிக திட்டங்களை ரகசியமாக வைத்துக் கொள்ள வேண்டும். பணிபுரிபவர்கள் சோம்பலை கைவிட்டு வேலையில் கவனம் செலுத்த வேண்டும். திருமண வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் பண விஷத்தில் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். இந்த வாரத்தில் புதிய வருமான ஆதாரங்களைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கும். உயர் அதிகாரிகளுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். வணிகர்கள் தங்கள் முடிவுகளை மிகவும் கவனமாக எடுக்க வேண்டும். சில புதிய வேலைகளைத் தொடங்கப் போகிறீர்கள் என்றால், அவசரப்பட வேண்டாம். குடும்ப வாழ்க்கையில் சில பிரச்சனைகள் ஏற்படும். உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், இந்த வாரத்தில் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் குடும்ப உறுப்பினர்களுடனான உறவு நன்றாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த பிரச்சனைகள் தீரும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். உங்கள் வருமானத்தை மட்டும் மனதில் வைத்து செலவு செய்யுங்கள். உழைத்து சம்பாதித்த பணத்தை சரியாக பயன்படுத்தினால், உங்கள் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் நீங்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரத்தில் நல்ல செய்திகள் வரலாம். தொழிலதிபர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் சுமாராக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் எதிர்மறை எண்ணங்களை மனதில் அதிகரிக்க விடாமல், நேர்மறையான விஷயங்களில் கவனத்தை செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. தொழில் சம்பந்தமான கவலைகள் நீங்கும். வீட்டில் திருமணமாகாதவர்கள் இருந்தால் மற்றும் அவர்களின் திருமணத்தில் தடைகள் இருந்தால், இந்த வாரத்தில் அது நீங்கும். பண விஷயங்களில் அவசரப்பட வேண்டாம். வருமானம் மற்றும் செலவுகளுக்கு இடையில் சமநிலையை பராமரிக்க அறிவுறுத்தப்படுகிறது. தேவையற்ற செலவுகளுக்கு முற்றுப்புள்ளி வையுங்கள். வேலைப்பளுவால் உடல்நலம் மோசமடையக்கூடும். எனவே மன அமைதியை பராமரிக்க, தினமும் தியானம் செய்யுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரத்தில் தொடககம் சற்று மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கும். வேலை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளால் அதிகம் கவலைப்படுவீர்கள். ஒரே நேரத்தில் பல சவால்களை திடீரென எதிர்கொள்வதால் நீங்கள் அழுத்தத்தை உணர்வீர்கள். உங்கள் கடுமையான பேச்சு காரணமாக உங்கள் உறவுகள் மோசமடையக்கூடும். வேலை செய்பவர்கள் தங்கள் திறனை விட அதிகமாக வேலை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. வணிகர்கள் பெரிய முதலீடுகளைச் செய்யும்போது அவசரப்படுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டம் ஏற்படலாம். நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் வலுவாக இருக்க, யோகா மற்றும் தியானம் செய்வது நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு நன்றாக இருக்கும். நின்று போன வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இந்த வாரம் நேர்மறை ஆற்றலால் நிறைந்திருப்பீர்கள். வியாபாரிகளு க்கு இந்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும். பணிபுரிபவர்கள் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். சொத்து போன்றவற்றில் முதலீடு செய்வது உங்களுக்கு சாதகமாக இருக்கும். காதலிப்பவர்களுக்கு இந்த வாரம் ரொமான்டிக்காக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொந்தமாக தொழில் செய்ய விரும்பினால், உங்களுடைய இந்த திட்டமும் வெற்றி பெறும். வேலை அல்லது வியாபாரம் செய்து கொண்டிருந்தால், உங்களுக்கு சில புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வேலையில் பிஸியாக இருப்பதால், குடும்ப வாழ்க்கையில் சரியான கவனம் செலுத்த முடியாது. நிதி நிலைமையை மேம்படுத்த நீங்கள் கடினமாக உழைத்தால், இந்த வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூட அலட்சியமாக இருக்காதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு நன்றாக இருக்காது. குடும்ப வாழ்க்கையில் சில குழப்பங்கள் இருக்கும். ஆனால் பணம் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். நீண்ட நாட்களாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். இந்த வாரத்தில் வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும். உங்களுக்கு இடையேயான பிணைப்பு அதிகரிக்கும். இந்த வாரம் ரொமான்டிக்காக இருக்கும். இதய நோய் உள்ளவர்கள், கோபத்தையும் மன அழுத்தத்தையும் தவிர்க்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு கடினமான வாரமாக இருக்கும். பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் தங்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவார்கள். உங்கள் நிதி நிலை நன்றாக இருக்கும். அதிக பணம் செலவழிக்க நேரிடும். திருமணமாகாதவர்கள் வாழ்க்கைத் துணையை சந்திக்கலாம். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, நன்றாக இருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











