Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
வார ராசிபலன் (18 August 2024 To 24 August 2024)- இந்த வாரம் இந்த ராசிக்காரங்க வேலை விஷயத்தில் கவனமா இருக்கணும்
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் 2024 ஆகஸ்ட் 24 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு உயர் அதிகாரிகளின் சகவாசம் கிடைக்கும். சக ஊழியர்களின் ஒருங்கிணைப்பும் சிறப்பாக இருக்கும். வேலை தொடர்பான முயற்சிகளை மேற்கொண்டால், நீங்கள் வெற்றி பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். உங்கள் வணிகம் இரண்டு மடங்கு வேகமாக வளரும். தனிப்பட்ட வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் தீரும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் காதல் வாழ்க்கையாக இருந்தாலும் சரி, திருமண வாழ்க்கையாக இருந்தாலும் சரி சிறப்பாக இருக்கும். மாணவர்களின் செயல்திறன் நன்றாக இருக்கும். வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் மிகவும் பிஸியாக இருக்கும். உங்களுக்கு அதிக பணிச்சுமை இருக்கலாம். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். தொழிலதிபர்கள் கடினமாக உழைத்தால், சிறந்த வெற்றியைப் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கையில் சூழ்நிலைகள் இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் சராசரியாக இருக்கும்
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் மனதளவில் வலுவாக இருப்பீர்கள். உங்கள் முடிவுகளை மிகவும் புத்திசாலித்தனமாக எடுப்பீர்கள். வேலையில்லாமல் நீண்ட நாட்களாக வேலை தேடிக்கொண்டிருந்தால், இந்த வாரத்தில் நீங்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். வணிகத்துடன் தொடர்புடையவர்கள் நல்ல நிதிப் பலன்களைப் பெறலாம், ஆனால் முதலீடுகள் போன்றவற்றைச் செய்வதற்கு முன் அனுபவசாலிகளிடம் ஆலோசனை பெற வேண்டும். உறவுகளில் இனிமை இருக்கும். கடினமான சூழ்நிலைகளில் உங்கள் அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.வாழ்க்கைத் துணையுடனான உறவு வலுவடையும். நிதி நிலை முன்னேற்றமடைவதால் பண பிரச்சனைகள் தீரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி பெறுவீர்கள். வீட்டில் உள்ள பெரியவர்களின் ஆசியும் ஆதரவும் கிடைக்கும். தொழில் வாழ்க்கையில் சில சவால்கள் இருக்கும். இருப்பினும், இம்மாதிரியான நேரத்தில் நேர்மறையாக இருக்க வேண்டும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் பரபரப்பாக இருக்கும். வேலை தொடர்பாக பயணம் செய்ய வேண்டி வரும். காதல் திருமணம் செய்து கொள்ள விரும்பினால், குடும்ப உறுப்பினர்களின் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த வாரம் உங்களுக்கு கலவையாக இருக்கும். போதுமான ஓய்வு எடுக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! நீங்கள் ஒரு தொழிலதிபராக இருந்து, கடந்த வாரம் வேலை தொடர்பான பயணத்தை மேற்கொண்டிருந்தால், இந்த வாரம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். நீங்கள் மிகவும் நேர்மறையாகவும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். புதிய வாகனம், வீடு, நிலம் போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த வாரம் சாதகமாக இருக்கும். உங்கள் துணைக்கு நீங்கள் போதுமான நேரத்தை கொடுக்க வேண்டும், இல்லையெனில் உங்கள் அன்புக்குரியவர் புறக்கணிக்கப்பட்டதாக உணரலாம். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும். உங்களுக்காக போதுமான நேரம் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் அனைத்து வேலைகளும் தடையின்றி முடிவடையும். வியாபாரத்தில் தொடர்புடையவர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்களின் வருமானமும் உயரும். வேலையை மாற்றத் திட்டமிடுபவர்கள் அவசரப்படுவதைத் தவிர்க்கவும். வீட்டின் பெரியவர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள். உங்கள் துணை உங்களுடன் சற்று மகிழ்ச்சியற்றவராக இருப்பார். சில விஷயங்களில் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அன்பான தம்பதிகளுக்கு இந்த வாரம் சற்று மந்தமாக இருக்கும். வேலையில் பிஸியாக இருப்பதால் ஒருவருக்கு ஒருவர் நேரம் கொடுக்க முடியாமல் போகும். ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை திருப்திகரமாக இருக்கும். பணிபுரிபவர்கள் புதிய பொறுப்புகளைப் பெறலாம். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் அவசர அவசரமாக நிதி பரிவர்த்தனைகளை செய்ய வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. பெரிய லாபம் சம்பாதிக்க விரும்பினால், உங்கள் வணிகத் திட்டங்களை சிந்தனையுடன் செய்யுங்கள். வீட்டில் சூழல் நன்றாக இருக்காது. குடும்ப உறுப்பினர்களுடன் உங்களுக்கு கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். காதலன்/காதலியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது. உங்களை நீங்களே கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் உங்கள் உறவு மோசமடையக்கூடும். உங்கள் வருமானம் நன்றாக இருக்கும், ஆனால் உங்கள் செலவுகளை நீங்கள் கவனிக்க வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையில் கவனமாக இருக்க வேண்டும். வேலை தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்கும்போது, கவனமாக சிந்தியுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்பட வாய்ப்புள்ளது. கடின உழைப்பு இருந்தபோதிலும், எதிர்பார்த்தபடி பலன் கிடைக்காமல் போகலாம். பண விஷயத்தில் அவசரம் வேண்டாம். உழைத்து சம்பாதித்த பணத்தை பயனற்ற விஷயங்களுக்கு வீணாக்குவதை தவிர்க்கவும். இந்த நேரத்தில் சேமிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். அன்புக்குரியவர்களின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். உங்கள் திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். திடீர் உடல்நலக் குறைவால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். இது தவிர, நீங்கள் எந்த பழைய முதலீட்டிலிருந்தும் சரியான பலன்களைப் பெறலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கூட்டுத் தொழில் செய்பவர்கள் நல்ல பணப் பலன்களைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். உங்களின் இந்த பயணம் மிகவும் அற்புதமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கலாம். ஏற்கனவே திருமணமானவராக இருந்தால், உங்கள் திருமண வாழ்க்கையில் புதிய திருப்பம் ஏற்படும். வாழ்க்கைத் துணையிடமிருந்து நல்ல செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வணிகர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். இருப்பினும், அவசரமாக முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்கள் கடின உழைப்பிற்கு நல்ல பலன்களைப் பெறுவார்கள். பதவி உயர்வு பெறலாம். வெளிநாடு சென்று வேலை செய்ய வேண்டுமென்ற என்ற கனவில் இருப்பவர்கள் கடினமாக உழைக்க வேண்டும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். சொத்து சம்பந்தமாக ஏதேனும் தகராறு இருந்தால், நீதிமன்றத்தை நாடாமல், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முயற்சித்தால் நல்லது. வேலையில் பிஸியாக இருப்பதால், உங்கள் துணை உங்களுக்கு அதிக நேரம் கொடுக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்கு இடையே சிறிது தூரம் ஏற்படலாம். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் அடிப்படையில் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். வணிகர்கள் தங்கள் வணிக முடிவுகளை சிந்தனையுடன் எடுத்தால், உங்கள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப முடிவுகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. உங்கள் பணம் நீண்ட நாட்களாக எங்காவது சிக்கியிருந்தால், அதையும் திரும்பப் பெறலாம். கல்வியில் உள்ள தடைகள் நீங்கும். உங்கள் அன்புக்குரியவர்களின் ஆதரவையும் பெறுவீர்கள். உங்கள் உடல்நிலை நன்றாக இருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் அரசியலில் இருப்பவர்களுக்கு சிறப்பாக இருக்கும். உங்களின் பதவி, கௌரவம் உயரும். வெளிநாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் சிறப்பான முன்னேற்றத்தைப் பெறலாம். வேலையுடன் சொந்தமாக சிறு தொழில் தொடங்க விரும்பினால், உங்கள் வழியில் வரும் தடைகள் நீங்கும். நீதிமன்றம் தொடர்பான எந்தவொரு விஷயத்திலும் வெற்றிக்கான வலுவான வாய்ப்பு உள்ளது. குடும்ப உறுப்பினர்களிடையே அன்பும், ஒற்றுமையும் நிலவும். பெற்றோரின் ஆசிகளைப் பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டால், உங்கள் அன்புக்குரியவர்களின் உதவியுடன் அதைத் தீர்ப்பீர்கள். தேவையற்ற விஷயங்களில் இருந்து விலகி இருக்க வேண்டும். வார இறுதியில் திடீர் நிதி ஆதாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











