Latest Updates
-
பொட்டுக்கடலை இருந்தா இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு சூப்பரான சைடிஷா இருக்கும் -
சப்பாத்திக்கு இப்படி உருளைக்கிழங்கு சைடு டிஷ் பண்ணுங்க.. கறிக்குழம்பு சுவையில் செமயா இருக்கும்.. -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் நீண்ட தூரம் பயணிக்கும் ரயில் எது? இதன் கடைசி ஸ்டாப் தமிழ்நாடுதானாம் -
மின்சாரமே இல்லாத காலத்தில் முகலாய மன்னர்களுக்கு எப்படி ஐஸ்கட்டிகள் கிடைத்தது தெரியுமா? இப்படித்தானாம் -
பால் போன்ற வெள்ளையான சருமம் வேண்டுமா? அப்ப இந்த பால் ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
உடுப்பி ஸ்டைலில் சாம்பார் சாப்பிட்ருக்கீங்களா? இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் பணம் சம்பாதிக்க கஷ்டப்படுவாங்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
பூண்டும், கறிவேப்பிலையும் இருந்தா.. இப்படி தொக்கு செய்யுங்க.. 3 மாதம் வரை வெச்சு சாப்பிடலாம்.. -
சுக்கிரன் சனிபகவான் ஆளும் நட்சத்திரத்திற்கு செல்வதால் இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுதாம் -
எந்த ஆரோக்கிய பிரச்சனைக்கு எந்தப் பழம் சிறந்தது? விளக்கும் டாக்டர்.சிவகுமார்!
வார ராசிபலன் (10 August 2025-16 August 2025)- இந்த வாரம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ராஜயோகம் வரப்போகுதாம்...!
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 16 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்காரர்களுக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இந்த வாரம் நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பணியிடத்தில் உடன் வேலை செய்வோருடனான ஒருங்கிணைப்பு அதிகரிக்கும். இதன் மூலம் வேலை வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். இந்நிலையில் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இந்த வாரம் உறவுகளுக்கு மிகவும் முக்கியமான வாரமாக இருக்கும். உங்கள் அன்புக்குரியவர்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். வேலையில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு வெற்றியைத் தரும். மேலும் நிதிரீதியாக, எதிர்பாராத செலவுகளைக் கையாள முன்கூட்டியே திட்டமிடுங்கள். நன்றாக சாப்பிடுவதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். உங்கள் குடும்பத்தினர் ஆரோக்கியத்திலும் கூடுதல் கவனம் அவசியம்.
மிதுனம்
இந்த வார தொடக்கத்தில் பெரிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். பணியிடத்தில் இந்த சிரமங்கள் நீங்கும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பையும், ஆதரவையும் பெறுவீர்கள். உங்களின் சிறப்பான செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக வரும். சொத்து தொடர்பான பிரச்சனைகள் தீர்க்கப்படும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு வாரத்தின் கடைசி சில நாட்கள் லாபகரமாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் பணியிடத்தில் கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். உயர் அதிகாரிகள் உங்கள் திறமையால் ஈர்க்கப்படுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தாலும், முதலீடு செய்யும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறபாடுகுள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிர்ஷ்டமானதாக இருக்கும். வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமும் முன்னேற்றமும் காணப்படும். பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். வணிகர்களுக்கு இந்த வாரம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தைப் பெறுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இந்த வாரத்தில் முதல் பாதியில் சில தடைகளை சந்தித்தாலும், இறுதியில் எதிர்பார்த்த வெற்றியையும் லாபத்தையும் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து சிறப்பு ஆதரவைப் பெறுவீர்கள், இது உங்கள் துணிச்சலையும் தைரியத்தையும் அதிகரிக்கும். வாரத்தின் நடுப்பகுதி தொழில்ரீதியாக மிகவும் இலாபகரமானதாக இருக்கும். வணிகத் திறன்கள் மேம்படும். தொழிலில் முதலீடு செய்ய திட்டமிடலாம். இருப்பினும், ஆபத்தான முதலீடுகளைத் தவிர்க்கவும். ஆரோக்கியம் மற்றும் உறவுகளின் அடிப்படையில் இந்த வாரம் சாதகமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த வாரம் நீங்கள் திட்டமிட்ட வேலை செய்தால் மட்டுமே விரும்பிய வெற்றியை அடைய முடியும். எந்த வேலையையும் மற்றவரை நம்பி ஒப்படைப்பதைத் தவிர்க்க வேண்டும், இல்லையெனில் உங்கள் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வாய்ப்புள்ளது. வாரத்தின் நடுப்பகுதியில் சில பெரிய செலவுகள் திடீரென்று ஏற்படக்கூடும். இதன் காரணமாக உங்கள் பட்ஜெட் பாதிக்கப்படலாம். இந்த வாரம் பெரிய முதலீடுகளைத் தவிர்க்க வேண்டும். இந்த வாரம் பேசும் போது கவனமாக இருக்க வேண்டும். சொத்து தொடர்பாக உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இந்த வாரத்தின் தொடக்கத்தில் வேலையில் பிரச்சனைகளை எதிர்கொள்ள வேண்டிருக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் உதவி கிடைக்காமல் மன வருத்தத்தில் இருப்பீர்கள். குடும்ப உறுப்பினருடன் கருத்து வேறுபாடு ஏற்படும் வாய்ப்புள்ளது. வாரத்தின் தொடக்கத்தில் மன அழுத்த சூழ்நிலைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். பணத்தை முதலீடு செய்யும்போது கவனமாக இருக்க வேண்டும். வணிகர்களுக்கு வாரத்தின் பிற்பகுதி மங்களகரமானதாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கடந்த வாரத்தை விட சற்று சிறப்பாக இருக்கும். திட்டமிட்ட பணிகளை சரியான நேரத்தில் முடிப்பதால் உங்கள் உற்சாகமும் தைரியமும் அதிகரிக்கும். உங்கள் முயற்சிகளும் கடின உழைப்பும் பணியிடத்தில் அங்கீகரிக்கப்படும். வாரத்தின் நடுப்பகுதியில் உயர் அதிகாரிகளின் உதவியுடன் லாபம் ஈட்ட வாய்ப்புகள் இருக்கும். இந்த வாரம் உங்கள் விருப்பம் நிறைவேறக்கூடும். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். காதல் துணையுடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிட உங்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் வணிக ரீதியாக நன்றாக இருக்கும். இந்த வாரம் உங்கள் முழு கவனத்தையும் உங்கள் வணிகத்தில் வைத்திருப்பீர்கள். வாரத்தின் முதல் பாதி வணிகர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். கடந்த காலத்தில் தொழில் மற்றும் வணிகத்திற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சிகள் வெற்றிகரமாகவும் பயனுள்ளதாகவும் இருக்கும். புத்திசாலித்தனம் மற்றும் புரிதலால் சில பெரிய பிரச்சினைகளை தீர்க்க முடியும். உறவுகளை இனிமையாக வைத்திருக்க சில விஷயங்களில் நீங்கள் சமரசம் செய்ய வேண்டியிருக்கும்.
கும்பம்
இந்த வாரம் மிகவும் மங்களகரமானதாக இருக்கும். குழந்தைகள் தொடர்பான ஒரு பிரச்சினையுடனும் நீங்கள் சிறிது காலமாக போராடிக்கொண்டிருந்தால், அதற்கான தீர்வு இந்த வாரம் கிடைக்கும். தொழில் மற்றும் வணிகத்தில் கடின உழைப்பிற்கான முழு பலன் கிடைக்கும். கடந்த வாரத்தை விட இந்த வாரம் வணிகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வாரத்தின் பிற்பகுதியில், திடீரென்று சில நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
மீனம்
இந்த வாரம் நீண்டகால பிரச்சனைகளில் இருந்து சிறிது நிவாரணம் பெறுவீர்கள். இந்த வாரம் எந்த நடவடிக்கையும் எடுப்பதற்கு முன்பு அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் தவறுதலாக கூட எந்த விதியையும் சட்டத்தையும் மீறாதீர்கள். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள், இல்லையெனில் நீங்கள் ஏமாற்றப்படலாம். இந்த வாரம், யாரையும் கண்மூடித்தனமாக நம்பாதீர்கள், இல்லையெனில் இந்த வாரம் நீங்கள் ஏமாற்றப்படலாம். மேலும் கடன் வாங்க வேண்டியிருக்கும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications