Latest Updates
-
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
இந்த 8 அறிகுறிகள் தெரியுதா? அப்ப குடல் புற்றுநோய் இருக்க வாய்ப்பிருக்கு.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
ஆங்கிலேயர்களுக்கே கடன் கொடுத்து இந்தியாவில் முதன் முதலாக கார் வாங்கிய பணக்கார வியாபாரி யார் தெரியுமா? -
மீன ராசியில் அஸ்தமனமாகும் சனி பகவான்: மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்... -
கடுகளவும் பொறுமையில்லாத 4 ராசிக்காரங்க இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா?
வார ராசிபலன் (09 Feb 2025 To 15 Feb 2025)- இந்த காதலர் வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 பிப்ரவரி 09 ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். காதலித்து வந்தால், அன்பானவருடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். ஆனால் திருமணமானவர்கள் குடும்பத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். இருப்பினும் செலவுகளை செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும. பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உறவுகளைப் பொறுத்தவரை இனிமையாக இருக்கும். காதல் மற்றும் திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். அன்புக்குரியவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை மேம்படும். ஆனால் தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். தொழிலதிபர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புகள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு புதிய திட்டங்களில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும். வணிகர்களுக்கு நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆனால் ஆரோக்கிய விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உணர்ச்சி ரீதியான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் ஏதாவது ஒரு பிரச்சனை தலைதூக்கி கவலையை அதிகரிக்கும். ஆனால் போக போக சரியாகும். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கலாம். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இநத வாரம் நெருக்கமான ஒருவர் துரோகம் செய்யலாம். யாரையும் அதிகம் நம்ப வேண்டாம். எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்க வேடும். ஈகோவைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த தொழிலில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் நலல வெற்றியைப் பெறுவீர்கள். உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். பண விஷயத்தில் புத்திசாலித்தனமாக முடிவெடுக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். குடும்ப சூழல் நன்றாக இருக்கும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கு.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்திவ் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் நல்ல பலன் கிடைக்கும். நிதி நிலை மேம்படும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் நற்பெயர் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கலாம். வியாபரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்கார்களே! இந்த வாரம் முக்கியமான வேலைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம். நிதி நிலை வலுவாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். இருப்பினும் எந்த ஒரு முக்கிய முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி பெருகும். வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவு கிடைக்கும். பண விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். இந்த வாரம் முதலீடுகளை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு பண பிரச்சனைகள் ஏற்படலாம். ஆனால் நம்பிக்கையான நபரின் ஆலோசனையைப் பெற்றால், அந்த பிரச்சனை தீரலாம். வீட்டில் சூழல் இனிமையாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படலாம். நிதி ரீதியாக இந்த வாரம் நன்றாக இருக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தேவையற்ற சண்டைகளைத் தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. சோம்பேறித்தனத்தைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











