Latest Updates
-
தேங்காய் தோசையும்.. தேங்காய் சட்னியும்.. - இந்த காம்போவை எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 13 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க சொந்த காசுல சூனியம் வைச்சுக்கப் போறாங்களாம்...! -
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது...
வார ராசிபலன் (04 August 2024 To 10 August 2024)- இந்த வாரம் இந்த ராசிக்காரங்க கடன் கொடுப்பதை தவிர்க்கணும்...
Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?
அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 ஆகஸ்ட் 04 ஆம் தேதி முதல் 2024 ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக மிகவும் அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். புதிய வீடு, வாகனம் போன்றவற்றை வாங்க திட்டமிட்டிருந்தால் இந்த வாரம் சாதகமாக இருக்கும். வெளிநாடு சென்று உயர்கல்வி கற்க விரும்பினால் சரியான திசையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். பணிபுரிபவர்கள் முன்னேற்றமடைய கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தொழிலதிபராக இருந்தால், இந்த வாரத்தில் நல்ல லாபத்தைப் பெற பல வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலைகள் அதிகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க, தினமும் உடற்பயிற்சியுடன் நாளைத் தொடங்குங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! பணிபுரிபவர்களுக்கு இந்த வாரத்தின் தொடக்கம் சிறப்பாக இருக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்கள் அபரிமிதமான நிதிப் பலன்களைப் பெறலாம். வாரத்தின் நடுப்பகுதியில் திடீர் பெரிய செலவுகள் ஏற்படுவதால், உங்கள் நிதி நிலை சற்று பாதிக்கப்படலாம். வேலை விஷயத்தில் கவனக்குறைவை தவிர்க்கவும். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, உங்கள் எல்லா வேலைகளையும் திட்டமிட்டபடி முடிக்க முயற்சி செய்யுங்கள். உறவுகளைப் பொறுத்தவரை, இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் வாழ்க்கையில் சாதமான மாற்றங்கள் ஏற்படும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். கடன் கொடுப்பதாக இருந்தால், நன்கு சிந்திக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் பணியிடத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். நிதி ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவதை நன்றாக இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நிதிப் பிரச்சனைகள் தீரும் மற்றும் உங்களின் மிகப்பெரிய கவலைகள் நீங்கும். பரம்பரை சொத்துக்களை விற்க நினைத்தால் நல்ல வாய்ப்பு கிடைக்கும். மாணவர்களுக்கு சாதகமான வாரமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் உங்கள் திறமை மற்றும் செயல்திறனுடன் உங்கள் எல்லா வேலைகளையும் சரியான நேரத்தில் முடிப்பீர்கள். உயர் அதிகாரிகளும் உங்கள் செயல்பாடுகளால் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இந்த வாரம் வணிகர்களுக்கு மிகவும் பிஸியாக இருக்கும். ஆனால் நீங்கள் எதிர்பார்த்த பலன்களைப் பெற வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சளி, இருமல், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், இந்த வாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். தற்போதைய வேலையில் முன்னேற்றம் வேண்டுமானால் இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். ஆனால் நிச்சயம் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகள் கவனமாக இருக்க வேண்டும். உங்கள் வணிகத் திட்டங்களை ரகசியமாக வைத்திருக்க முயற்சிக்கவும், இல்லையெனில் உங்கள் எதிரிகள் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். வீட்டில் சூழ்நிலை மேம்படும். உறவுகளில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உங்கள் நிதி நிலை சாதாரணமாக இருக்கும். அத்தியாவசிய விஷயங்களுக்கு மட்டும் செலவு செய்யுங்கள். ஆரோக்கியம் குறித்த கவலையுடன் இருப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும் மற்றும் உங்கள் மிகப்பெரிய கவலைகள் தீரும். வேலை தேடிக்கொண்டிருந்தால், நீங்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். அதிக பணம் செலவழிப்பீர்கள். வாழ்க்கைத் துணையுடனான உறவில் இணக்கம் ஏற்படும். உங்கள் காதலியின் அன்பும் ஆதரவும் உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் சில பதற்றம் அதிகரிக்கும். உடல்நிலை குறித்து எச்சரிக்கையாக இருங்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். இடமாற்றம் செய்வதால் உங்கள் பிரச்சனைகள் அதிகரிக்கலாம். தொழிலுக்காக கடன் வாங்க விரும்பினால் சில தடைகளை சந்திக்க நேரிடும். வேலையில் பிஸியாக இருப்பதால் குடும்ப வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்த முடியாமல் போகும். அத்தகைய சூழ்நிலையில், உறவுகளில் இடைவெளி ஏற்படலாம். பண வரவு இருக்கும் ஆனால் அதை புத்திசாலித்தனமாக செலவு செய்ய வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த முயற்சிக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் பணிபுரிபவர்களுக்கு மிகவும் இனிமையாக இருக்கும். உணவகங்களில் பணிபுரிபவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பணிச்சுமை அதிகமாக இருக்கும். ஆனால் உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களைப் பெறுவீர்கள். அரசு வேலை செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்டும். நிதி நிலை வலுவாக இருக்கும். திருமண வாழ்வில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும், அதன் தாக்கம் உங்கள் வேலையிலும் தெரியும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. யாருக்காவது கடன் கொடுத்திருந்தால், பணத்தைத் திரும்பப் பெறுவதில் தாமதம் ஏற்படும். ஆனால் தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருக்கும். இந்த வாரத்தில் சில செல்வாக்கு மிக்க நபரின் ஆதரவு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு கடந்த வாரத்தை விட இந்த வாரம் சிறப்பாக இருக்கும். சில முக்கியமான வேலைகளை முடிக்க கடினமாக உழைத்தால், நல்ல வெற்றியைப் பெறலாம். வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். வார இறுதியில் குடும்பத்துடன் சிறிது தூரம் பயணம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சவாலானதாக இருக்கும். தொழில் வாழ்க்கையில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். தொழிலதிபராக இருந்தால், இந்த வாரத்தில் நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவசர அவசரமாக முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். இது தவிர, பணம் தொடர்பான பரிவர்த்தனைகளையும் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்களின் பணிச்சுமை அதிகரிக்கும். இதனால் உங்கள் மன அழுத்தம் அதிகரிக்கும். கடினமாக உழைத்தாலும், உங்கள் எதிர்பார்ப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் ஏமாற்றமடையத் தேவையில்லை. பொறுமையாக இருங்கள். வாழ்க்கைத் துணையின் ஆரோக்கியம் பலவீனமாக இருக்கும். அவர்களின் ஆரோக்கியத்திற்காக நிறைய செலவுகளை செய்ய வேண்டியிருக்கும். அண்டை வீட்டாருடன் தகராறு ஏற்படலாம். உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு கலவையானதாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் சவால்கள் இருக்கும், இருப்பினும் உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன் கிடைக்கும். பாதகமான சூழ்நிலைகளில், உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள். பண விஷயத்தில் இந்த வாரம் உங்களுக்கு சிறப்பாக இருக்கும். வருமானம் நன்றாக இருக்கும், மேலும் சேமிக்கவும் முடியும். இருப்பினும், அபாயகரமான நிதித் திட்டங்களில் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். காதல் வாழ்க்கையில் சில நல்ல மாற்றங்கள் ஏற்படலாம். உங்கள் உறவில் புதுமையை உணர்வீர்கள். வாழ்க்கைத் துணையுடன் உறவை மேம்படுத்த சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் மாணவர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். வெளிநாட்டில் வேலை செய்பவர்களுக்கு இந்த வாரம் நன்றாக இருக்கும். வாடகை வீட்டில் குடியிருந்து உங்கள் சொந்த வீட்டைக் கனவு கண்டால், உங்களுடைய இந்த ஆசையும் நிறைவேறும். தொழிலதிபர்களுக்கு லாபம் ஈட்ட பல வாய்ப்புகள் கிடைக்கும். இருப்பினும், பண விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். மற்றவர்களின் ஆலோசனையின் பேரில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உங்கள் தினசரி வழக்கத்தை ஒழுங்கமைத்து, உங்கள் உணவில் கவனம் செலுத்துங்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











