வார ராசிபலன் (02 Feb 2025 To 08 Feb 2025)- பிப்ரவரி முதல் வாரம் இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்...

Weekly Horoscope: நம் வாழ்வில் ஏற்படக்கூடிய அனைத்து நல்லது கெட்டதும் நமது ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகளை பொறுத்தது. அந்த வகையில், அடுத்து வரும் 7 நாட்களும் கிரக நிலைகளின் படி 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்க போகிறது என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா?

அப்படியெனில், இந்த கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2025 பிப்ரவரி 02 ஆம் தேதி முதல் 2025 பிப்ரவரி 08 ஆம் தேதி வரையிலான காலக்கட்டத்திற்கான 12 ராசிக்குமான வார ராசிபலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Horoscope For 02 February 2025 To 08 February 2025 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் கடின உழைப்பு நல்ல பலனைத் தரும். உயர் அதிகாரிகள் உங்கள் திறமையால் ஈர்க்கப்படுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைத்தாலும், முதலீடு செய்யும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறபாடுகுள் ஏற்படலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதி ரீதியாக லாபகரமானதாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும் வாய்ப்புள்ளது. முதலீடுகளும் நல்ல லபத்தைத் தரும். பணியிடத்தில் உங்களின் திறமை மேம்படும். எதிரிகளிடம் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியம் சீராக இருக்கும். ஹோட்டல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வியாபாரிகளுக்கு சற்று சவாலாக இருக்கும். பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். தம்பதிகளிடையேயான உறவு வலுவடையும். ஆரோக்கிய விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரத்தின் தொடக்கம் மெதுவாக இருக்கும். பணியிடத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். பதவி உயர்வுக்கான வாய்ப்புக்களும் உள்ளன. நிதி விஷயங்களில் சற்று கவனமாக இருக்க வேண்டும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டும். குடும்ப வாழ்க்கை இனிமையாக இருக்கும். அன்புக்குரியவருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் முன்னேற்றத்திற்கான பல புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலையை மாற்ற நினைத்தால், இந்த வாரம் சாதகமாக இருக்கும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெறலாம். குடும்ப சூழல் அமைதியாகஇருக்கும். சில நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியம் சீராக இருக்கும். இருந்தாலும், உடல் சோர்வைத் தவிர்க்க ஓய்வு எடுக்க வேண்டும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் பொறுமை சோதிக்கப்படலாம். பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். சில சவால்களை எதிர்கொள்ள நேரிடும். நிதி நிலை சாதாரணமாக இருக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். காதல் உறவுகளில் சிறுசிறு பிரச்சனைகளை சந்திக்கலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். பணியிடத்தில் கடின உழைப்பு நல்ல பாராட்டைப் பெறும். வியாபாரிகளுக்கு முக்கிய வேலை வெற்றிகரமாக நடக்கலாம். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருக்கும். உறவுகள் வலுவடையும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் வேலையில் தடைகளை சந்திக்கலாம். இருப்பினும் அதை புத்திசாலித்தனத்தால் சரிசெய்வீர்கள். நிதி ரீதியாக எந்த முடிவையும் கவனமாக எடுக்க வேண்டும். குடும்பத்தில் மனக்கசப்புகள் அதிகரிக்கலாம். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும். உங்கள் இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவீர்கள். பணியிடத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். காதல் வலுவடையும். ஆரோக்கியம் சாதாரணமாக இருக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் நிதானத்தையும் பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டும். பணியிடத்தில் சில பிரச்சனைகளை சந்திக்கலாம். நிதி நிலை சீராக இருக்கும். இருந்தாலும் தேவையற்ற செலவுகளைத் தவிர்கக் வேண்டும். குடும்பத்தில் மனக்கசப்புகள் அதிகரிக்கலாம். காதல் வாழ்க்கையில் புதுமை இருக்கும். ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருங்கள். தியானத்தில் ஈடுபடுங்கள்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் முழு நம்பிக்கையுடன் இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும். புதிய வேலை வாய்ப்புகள் கடைக்கும். தொழிலதிபர்களுக்கு சாதகமாக இருக்கும். அன்பானவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். காதல் உறவுகளில் சில மாற்றங்களைக் காண்பீர்கள். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் சில புதிய பொறுப்புக்களைப் பெறலாம். நிதி ரீதியாக நல்ல நாளாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். குடும்ப வாழ்க்கையில் அமைதி நிலவும். காதல் உறவுகள் வலுவடையும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். அதற்கு தினமும் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, February 2, 2025, 6:00 [IST]
Desktop Bottom Promotion