Latest Updates
-
ஆகஸ்ட் 10-ல் உச்ச ராசியில் வலுவடையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
ஆகஸ்ட் 11-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி என்ன? -
கேரளா ஸ்டைல் பட்டாணி குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - பூரி, சப்பாத்திக்கு அருமையா இருக்கும் -
இந்த பொருட்களில் ஒன்று உங்கள் பூஜையறையில் இருந்தாலும் உங்க வீட்டில் நிம்மதியும், அதிர்ஷ்டமும் இருக்காதாம் -
சௌசௌ வாங்குனா இப்படி கிரேவி செய்யுங்க, சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
எலிவால் மாதிரி இருக்கும் முடியை அடர்த்தியாக்கணுமா? அப்ப முட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க.. -
வாழும் நாஸ்ட்ராடமஸ் கணிப்பு படி 2026-ல் இந்த இடத்தில் ஆபத்தான போர் நடக்கப்போகுதாம் - எந்த நாடு போர் நடத்தப்போக -
சனி மங்கள யோகத்தால் செப்டம்பர் வரை இந்த 3 ராசிக்காரங்க பிரச்சனை மேல் பிரச்சனைய சந்திப்பாங்க.. உஷார்.. -
செட்டிநாடு கத்திரிக்காய் உருளை கோசுமல்லி ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டக்கரான சைடிஷா இருக்கும் -
முட்டைக்கோஸை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க..
Weekly Health Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் வெளி உணவுகளைத் தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது...
Weekly Health Horoscope: ஒருவரது ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கமானது அவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், கிரக நிலை அமைப்பின் விளைவு அவரவர் ஆரோக்கியத்தில் கண்கூடாக தெரியும். அந்த வகையில் ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டு இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்...
ஜூலை 22ம் தேதி முதல் ஜூலை 28ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும், நீங்கள் நோயிலிருந்து விடுபடுவீர்களா அல்லது உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமா என்றெல்லாம் இப்போது பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே, இந்த காலகட்டத்தில் உணவுக் கோளாறுகளால் உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். வேலையைப் பற்றி அதிக அழுத்தம் எடுத்து கொள்ளாதீர்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். மோசமான உடல்நலம் உங்கள் வேலையிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் உடல்நிலை பலவீனமாக இருக்கும். அதனால், நீங்கள் மிகவும் சோம்பலாகவும் பலவீனமாகவும் உணருவீர்கள். நீங்கள் விரும்பினாலும் உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. இதன் காரணமாக நீங்கள் மிகவும் எரிச்சலடையலாம். மருத்துவரிடம் முறையான ஆலோசனை பெற வேண்டும். உங்கள் அன்றாட வழக்கத்தை போதுமான ஓய்வுடன் ஒழுங்கமைக்க முயற்சிக்கவும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே, உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். மேலும், மனதளவில் நன்றாக இருப்பீர்கள். இருப்பினும், சிறிதளவு கூட கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என்று உங்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் ஓய்வு நேரத்தை நன்றாகப் பயன்படுத்தி நல்ல புத்தகத்தைப் படியுங்கள். இது உங்கள் மூளைக்கு பயிற்சி அளிப்பதோடு, நீங்கள் நன்றாக உணருவீர்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு மிகவும் பரபரப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில், நீங்கள் வேலை தொடர்பான பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வெளி உணவுகளைச் சாப்பிடுவதால் திடீரென உடல் நலம் கெடவும் வாய்ப்புள்ளது. உங்களுக்கு வாயு, அஜீரணம், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் இருக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே, கோபம் மற்றும் மன அழுத்தத்திலிருந்து விலகி இருங்கள். குறிப்பாக உங்களுக்கு உயர் இரத்த அழுத்த பிரச்சனை இருந்தால், கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இது தவிர, அதிகப்படியான வறுத்த, பொரித்த மற்றும் காரமான உணவுகளையும் தவிர்க்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சராசரியாக இருக்கும். ஆனால், எந்த வகையிலும் கவனக்குறைவாக இருக்க வேண்டாம். நீங்கள் நீண்ட காலமாக உங்கள் உடல்நலப் பரிசோதனை செய்யவில்லை என்றால், இதுவே அதற்கு சரியான நேரம். உங்கள் தினசரி வழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்யுங்கள். விரைவில், நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே, வேலை முக்கியமானது தான் என்றாலும், உங்கள் உடல்நலத்தில் எந்த வகையிலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள். இந்த காலகட்டத்தில் நீங்கள் அதிகமாக அலைய வேண்டியிருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்களுக்காக போதுமான நேரத்தை நீங்கள் பெற முடியாது. இது உங்கள் ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும். நீங்கள் போதுமான ஓய்வு எடுத்து நேர்மறையாக இருக்க முயற்சி செய்தால் நல்லது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே, தினமும் காலையில் திறந்த வெளியில் நடைப்பயணத்துடன் உங்கள் நாளைத் தொடங்குங்கள். இது உங்களை மிகவும் புத்துணர்ச்சியுடன் உணர வைப்பதோடு உங்கள் ஆற்றல் மட்டமும் அதிகரிக்கும். யோகா மற்றும் தியானம் செய்வதும் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன், நேரத்துக்கு உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்வது நன்மை பயக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே, நீங்கள் நம்பிக்கையுடனும் ஆற்றலுடனும் இருப்பீர்கள். உங்கள் நேர்மறை ஆற்றல் உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பெரிதும் பாதிக்கும். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். மேலும், உங்கள் உடற்தகுதியைப் பராமரிக்க தினமும் உடற்பயிற்சி செய்யவும். உங்கள் மன ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உங்கள் திறமையும் அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே, இந்த நேரத்தில் நீங்கள் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஒரு சிறிய கவனக்குறைவு கூட விலை உயர்ந்ததாக இருக்கும். அதிகரித்து வரும் உடல் எடையையும் கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு உங்கள் உணவு பழக்கங்களில் சில மாற்றங்களைச் செய்யுங்கள். குறிப்பாக, நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் லேசான உடற்பயிற்சி செய்வதும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்கள் ஆரோக்கியத்தைப் பற்றி மிகவும் கவலைப்படுவீர்கள். குறிப்பாக, இதயம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கோபம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். நேர்மறையாக இருக்க முயற்சி செய்யுங்கள். ஓய்வில் கவனம் செலுத்துங்கள். அவ்வப்போது உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். முடிந்தால், கார்டியோ பயிற்சிகளையும் செய்யுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். தொடர்ந்து யோகா, தியானம் செய்து வந்தால் நல்ல பலனைக் காணலாம். நீங்கள் போதுமான ஓய்வு பெறுவீர்கள். உங்கள் உடற்சோர்வு நீங்கும். இந்த நேரத்தில் நீங்கள் மிகவும் புத்துணர்ச்சியுடனும், நிதானமாகவும் உணர்வீர்கள். இருப்பினும், மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications