Weekly Health Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் உணவு பழக்கத்தில் சில மாற்றங்களை செய்வது நல்லது...

Weekly Health Horoscope: ஒருவரது ஜாதகத்தில் இருக்கக்கூடிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் இயக்கமானது அவரது வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அத்தகைய சூழ்நிலையில், கிரக நிலை அமைப்பின் விளைவு அவரவர் ஆரோக்கியத்தில் கண்கூடாக தெரியும். அந்த வகையில் ஆரோக்கியத்தை அடிப்படையாக கொண்டு இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்பதைப் பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்க போகிறோம்...

ஜூலை 08ம் தேதி முதல் ஜூலை 14ம் தேதி வரையிலான காலக்கட்டத்தில், மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களின் ஆரோக்கியம் எப்படி இருக்கும், நீங்கள் நோயிலிருந்து விடுபடுவீர்களா அல்லது உடல்நலம் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடுமா என்றெல்லாம் இப்போது பார்ப்போம்.

Weekly Health Horoscope From 08 July To 14 July 2024 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே, இந்த வாரத்தின் ஆரம்பம் உங்களுக்கு சிறப்பாக இருக்காது. உடல் ரீதியான பிரச்சனைகளால் உங்களின் முக்கியமான வேலைகள் தடைபடலாம். ஆனால், சரியான நேரத்தில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். இது உங்களுக்கு நல்ல பலனைத் தரும். ஆரோக்கியம் மேம்படும். நீங்கள் நன்றாக உணருவீர்கள். நீங்கள் நீண்ட காலமாக உங்கள் உடல்நலப் பரிசோதனை செய்யவில்லை என்றால், இந்த நேரம் அதற்கு சாதகமானது.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே, இந்த வாரம் உங்களுக்கு ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். மேலும், உங்கள் மன அழுத்தமும் குறையும். முன்பை விட உங்கள் உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள். இதன் காரணமாக நீங்கள் புத்துணர்ச்சியுடன் இருப்பீர்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே, சோம்பல் காரணமாக உங்கள் வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாமல் போகும். இந்த பிரச்சனையிலிருந்து விடுபட, நீங்கள் உங்கள் உணவு பழக்கத்தை மாற்ற வேண்டும். அதிகாலையில் எழுந்தவுடன் லேசான உடற்பயிற்சியுடன் நாள தொடங்க முயற்சிக்க வேண்டும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே, உடல்நலம் குறித்து நீங்கள் தொடர்ந்து அலட்சியமாக இருந்தால், பெரும் விளைவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உங்கள் உடல்நிலையில் திடீர் பின்னடைவு ஏற்படலாம். நீங்கள் மிகவும் பலவீனமாகவும் சோர்வாகவும் உணர்வீர்கள். உங்களுக்கு ஏற்கனவே ஏதேனும் நோய் இருந்தால், உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம். உடனடியாக மருத்துவரை அணுகவும். தினமும் யோகா மற்றும் தியானம் செய்வது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே, பணிச்சுமை அதிகரிப்பதால், உங்கள் மன அழுத்தமும் அதிகரிக்கும். இந்த நேரத்தில், நீங்கள் அதிக அழுத்தத்தை உணருவீர்கள். மேலும் உங்கள் மீது சரியாக கவனம் செலுத்த முடியாது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் தவறான விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும். வேலையுடன் உடல் ஆரோக்கியத்திலும் சரியாக கவனம் செலுத்துவது நல்லது.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே, உடல் ஆரோக்கியத்துடன், மனநலத்திலும் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்களிலிருந்து விலகி நேர்மறையாக இருக்க முயற்சியுங்கள். வாழ்க்கையில் ஏற்றத் தாழ்வுகள் இருக்க தான் செய்யும். ஒவ்வொரு கஷ்டத்தையும் முழு நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும். ஓய்வெடுக்க உங்களுக்காக போதுமான நேரத்தையும் ஒதுக்க வேண்டும். இது உங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ஆரோக்கியத்தைப் புறக்கணித்து தொடர்ந்து வேலை செய்தால், நீங்கள் சில பெரிய பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். சீரான உணவு மற்றும் லேசான உடற்பயிற்சி மூலம் நல்ல ஆரோக்கியத்தை அனுபவிக்க முடியும். நீங்கள் அதிக வேலை அழுத்தத்தை உணர்ந்தால், சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு உங்களுக்குப் பிடித்த இடத்திற்கு சென்று வாருங்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இந்த வாரம் நீங்கள் நன்றாக உணர்வீர்கள். உங்கள் சிந்தனையும் நேர்மறையாக இருக்கும். இருப்பினும், இந்த வாரம் உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம். இந்த வாரம் பயணங்கள் செய்ய திட்டமிட்டால், உங்கள் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. குறிப்பாக, இந்த பருவநிலையில் உங்கள் உணவுப் பழக்கத்தில் எந்த கவனக்குறைவும் காட்டாதீர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே, தேவையற்ற கவலைகளிலிருந்து விலகி இருங்கள். இல்லையெனில், உங்கள் உடல்நிலை மோசமடையக்கூடும். இந்த காலகட்டத்தில், உங்களுக்கு உடல்நலம் தொடர்பான சிறிய பிரச்சனைகள் இருந்தாலும், அதைப் புறக்கணிக்காதீர்கள். இல்லையெனில், அது தீவிரமான மாறலாம். உங்கள் மன அழுத்தத்தைக் குறைக்க, உங்களுக்குப் பிடித்த செயல்களில் கவனம் செலுத்துங்கள்.

மகரம்

மகர ராசிக்காரர்களே, உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை கொடுப்பீர்கள். அதனால், நீங்கள் மிகவும் ஆரோக்கியமாகவும், மன வலிமையாகவும் இருப்பீர்கள். இந்த காலகட்டத்தில், நீங்கள் சில விளையாட்டுகளில் பங்கேற்கலாம். இது உங்களுக்கு புத்துணர்ச்சியை ஏற்படுத்தும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே, சில பழைய நோயிலிருந்து நீங்கள் விடுபடுவீர்கள். உங்கள் ஆரோக்கியத்தில் பெரிய முன்னேற்றம் இருக்கும். உங்கள் மன ஆரோக்கியமும் நன்றாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் முக்கிய முடிவுகளை முழு நம்பிக்கையுடன் எடுப்பீர்கள். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கையிலும் ஏதாவது நல்லது நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே, உங்கள் கட்டுப்பாடற்ற கோபமும், அதிகமாகச் சிந்திக்கும் பழக்கமும் உங்கள் ஆரோக்கியத்தைக் கெடுக்கும். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது நல்லது. அதிகப்படியான அழுத்தத்தில் எந்த வேலையையும் செய்யாதீர்கள், உங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமே முதலில் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Monday, July 8, 2024, 16:30 [IST]
Desktop Bottom Promotion