Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் எந்த வேலையையும் பாதியாக செய்வதை தவிர்க்கணும்...
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 28 ஜூலை 2024 முதல் 03 ஆகஸ்ட் 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பான பலனைப் பெற காத்திருக்க வேண்டும். இந்த வாரத்தில் வெற்றி பெறுவது சற்று கடினமாக இருக்கும். இருப்பினும் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சித்தால், விரைவில் நல்ல பலனைப் பெறலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் வெற்ற பெற சற்று காத்திருக்க வேண்டும். வெற்றி பெற தாமதமானாலும் முயற்சிகளை தொடர்ந்து எடுத்து வர அறிவுறுத்தப்படுகிறது. வெற்றி கிடைக்காவிட்டால் உடனே ஏமாற்றமடைய வேண்டாம். கடின உழைப்பை தொடரும் போது விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக, சில நம்பிக்கைகள் ஏற்படும். பணிபுரிபவர்கள் தங்களின் தற்போதைய வேலையை மாற்ற நினைக்கலாம. இருப்பினும் எந்த ஒரு முடிவை எடுக்கும் முன்பும் அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். அரசு வேலைக்கு முயற்சித்துக் கொண்டிருந்தால், நல்ல வெற்றி பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். ஒருவேளை பணிபுரிந்து கொண்டிருந்தால், பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல், கடினமாகவும் உழைக்க வேண்டும். அரசு வேலைக்காக போட்டித் தேர்வில் கலந்து கொண்டிருந்தால், இந்த வாரத்தில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவீர்கள். மேலும் இச்செயலால் மனமும் மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் ரீதியாக பெற விரும்பும் வெற்றியைப் பெற இன்னும் நேரம் உள்ளது. எனவே தோல்வியைக் கண்டால் உடனே சோர்வடைந்து ஏமாற்றமடையாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். தோல்வியைக் கண்டால் உடனே சோர்வடைந்துவிடாமல், தொடர்ந்து முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். உங்களின் அதிகமான கடின உழைப்பானது உங்களின் செயல்திறனை விரைவில் வெளிப்படுத்தும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக அனுபவசாலிகளின் ஆலோசனையைப் பெறுவது நல்லது. இது தொழிலில் மிகப்பெரிய நன்மையை அளிக்கும். முக்கியமாக இது உங்களை இது சரியான வழியில் அழைத்தும் செல்லும்.
மகரம்
மகர ராசிக்கார்களே! இந்த வாரம் தொழிலில் நல்ல வெற்றியைக் கண்பீர்கள். இதனால் மிகுந்த மகிழ்ச்சியடைவீர்கள். நீண்ட நாட்களாக உழைத்துக் கொண்டிருந்த உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சிலர் பதவி உயர்வைப் பெறலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலைப் பொறுத்தவரை நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். சமூகத்தில் நல்ல நிலையில் உள்ளோரின் நட்பு கிடைக்கும். இந்த நட்பு உங்களுக்கு சிறப்பான பலனைத் தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் உங்களின் தீவிர உழைபபு தேவைப்படும். பணியிடத்தில் உங்களிடம் கொடுக்கப்பட்டுள்ள வேலைகளை கடினமாக உழைத்து திறம்பட செய்து முடிப்பீர்கன். வாரத்தின் பிற்பகுதியில் நல்ல செய்திகளை பெறக்கூடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications