Latest Updates
-
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்..
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரங்க வேலையில் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க..
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 25 ஆகஸ்ட் 2024 முதல் 31 ஆகஸ்ட் 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மேலும் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை அவரது தொழிலில் எதிர்பார்த்த பலன்களைப் பெறுவது சற்று கடினமாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். உடன் வேலை செய்வோரின் ஆதரவு கிடைக்கும். முக்கியமாக நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பொறுத்தவரை, பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் நல்லுறவை பேண முயற்சிக்க வேண்டும். முக்கியமாக பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், பேச்சாலேயே வேலை கெட்டுப்போகும். இருப்பினும் வாரத்தின் கடைசியில் தொழிலில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். அரசு வேலைக்காக எழுதியுள்ள தேர்வுகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். வேலை தொடர்பாக வெளியூர் செல்ல வேண்டிய சூழல் ஏற்படலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். அரசு வேலைக்காக தேர்வுகளை எழுதியிருந்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும். இதன் விளைவாக மனம் மகிழ்ச்சியாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அந்த கடின உழைப்புக்கு உடனடி பலன் கிடைக்காது. இருப்பினும் முயற்சியைக் கைவிடாமல், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். இதனால் எதிர்காலத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை தேடுபவர்களுக்கு சற்று சிரமமாக இருக்கும். முயற்சி செய்யும் வேலைகளில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். ஆரோக்கியம் குறித்த கவலை அதிகரிக்கும். உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இதனால் மிகவும் வருத்தப்படுவீர்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் பெரிய வெற்றியைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக செய்த கடின உழைப்புக்கான பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வெற்றி பெற அதிர்ஷ்டத்தை மட்டும் நம்பாமல் உழைப்பையும் போட வேண்டும். அரசு வேலைக்காக தேர்வுகளை எழுதியிருந்தால், எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவீர்கள். இதன் விளைவாக மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்காது. அதற்காக மனம் தளர்ந்து போகாமல், தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். இதனால் உங்களின் கடின உழைப்புக்கான பலன் விரைவில் கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலை தொடர்பாக நல்ல செய்திகளைப் பெறுவீங்கள். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். அலுவலகத்தில் சிறப்பான நபரின் நட்பு கிடைப்பதால், பணியிடத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications