Latest Updates
-
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்கள் எந்த வேலையையும் அவசரமா செய்வதை தவிர்க்கணும்...
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 14 ஜூலை 2024 முதல் 20 ஜூலை 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்தி நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஒப்படைக்கப்பட்ட எந்த ஒரு வேலையையும் ஒழுங்காகவும், ஏமாற்றாமலும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும். எந்த ஒரு முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், உங்கள் உள்ளுணர்வைக் கேட்டு எடுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களுக்கு தொழில் ரீதியாக அருமையாக இருக்கும். உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். மேலும் இந்த வாரத்தில் உங்கள் திறமைகளை வெளிப்படுத்தவும், உங்களின் முயற்சிகளுக்கு நல்ல பாராட்டும் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் புதிய விஷயங்களை முயற்சிக்க சிறந்த வாரமாக இருக்கும். எப்போதும் ஒரே வேலையை தொடர்ந்து செய்யாமல், செய்யும் வேலையில் புதிதாக ஏதாவது ஒன்றை முயற்சி செய்வது நல்லது. உங்களின் திறமைகளை மேம்படுத்த, வெளியிடங்கள் மற்றும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் மனதிற்கு எது சிறந்தது என தோன்றுகிறதோ, அதை செய்ய பயப்பட வேண்டாம். அவசர முடிவுகளை எடுக்கும் போது கவனமாக இருங்கள். அவசரமாக எந்த வேலையையும் செய்யாதீர்கள். இல்லாவிட்டால் வருத்தப்படுவீர்கள்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் தலைமைத்துவ திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். சிலருக்கு பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. உங்களிடம் கொடுக்கப்பட்ட வேலைகளை பொறுப்புடன் செய்து முடிக்க முயற்சி செய்யுங்கள். பணியிடத்தில் எந்த ஒரு முடிவை எடுப்பதாக இருந்தாலும், மற்றவர்களின் கருத்துக்களை கேட்க மறவாதீர்கள். அப்படி கேட்பதன் மூலம், சாதகமான முடிவுகள் கிடைக்கலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் ஒரு வேலையைத் தொடங்கினால், அதை கவனமாக செய்து முடிக்க மறவாதீர்கள். இந்த வாரத்தில் ரிஸ்க் எடுக்க பயப்பட வேண்டாம். உங்களின் சிறப்பான தலைமைப் பண்புகளை வெளிப்படுத்தி, உங்களைச் சுற்றியுள்ளவர்களை ஊக்குவிப்பீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் வேலை செய்வோருடனான உறவு நன்றாக இருக்கும். உங்களின் சிறப்பான செயல்திறன் காரணமாக பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. எந்த ஒரு வேலையை செய்யும் முன் நன்கு யோசிக்க வேண்டும். அவசரமாக எதையும் செய்யாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். இந்த வாரத்தில் உங்களின் கற்பனைத்திறனால் உயர் அதிகாரிகளை ஆச்சரியப்படுத்துவீர்கள். புதிய விஷயங்களை மேற்கொள்ள சிறந்த வாரம். உங்களின் புதிய யோசனைகள் உங்களை தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றத்தை காண வழிவகை செய்யும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிப்பாக இருக்கும். உங்களின் முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். உங்களைச் சுற்றியுள்ளவர்களை சந்தோஷமாக வைத்திருப்பீர்கள். உங்கள் வழியில் வரும் தடைகளை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெல்வீரகள்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் சில புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். அதை திறம்பட பயன்படுத்திக் கொண்டால், பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வைப் பெறுவீர்கள். வேலையில் உங்களின் முயற்சிகளுக்கு ஏற்ற பலனை இந்த வாரத்தில் பெறுவீர்கள். சிலருக்கு நல்ல வெகுமதி கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலைப் பொறுத்தவரை கடினமாக இருந்தாலும், கவனம் செலுத்தினால் நல்ல பலனைப் பெறலாம். பணியிடத்தில் சவால்களை எதிர்கொண்டாலும், உங்களின் படைப்பாற்றல் திறன் மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறனால் சிறப்பான பலனைப் பெறுவீர்கள். முக்கியமாக உங்களின் உள்ளுணர்வு சொல்வதைக் கெட்டு நடந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்களின் உள்ளுணர்வு மற்றும் கற்பனைத்திறன் சிறப்பாக இருப்பதால், வேலையில் உங்களின் திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்துவீர்கள். உள்ளுணர்வின் படி எந்த ஒரு விஷயங்களை செய்தாலும் நல்ல பலனைப் பெறலாம். இந்த வாரத்தில் வெற்றிகள் அதிகம் கிடைக்கும் வாய்ப்புள்ளதால், உங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களைத் தவறவிடாதீர்கள்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications