Latest Updates
-
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப்போகுது...
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 14 ஜூலை 2024 முதல் 20 ஜூலை 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். உங்களுடன் வேலை செய்பவர்களே உங்களுக்கு எதிராக செயல்படலாம். அதற்காக சோர்ந்து போகாமல், கடினமாக உழைத்துக் கொண்டே இருங்கள். இதனால் நிச்சயம் எதிர்காலத்தில் எதிர்பாராத நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் நல்ல வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக முக்கியமானதாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் விரும்பிய வேலையைப் பெறுவார்கள். அலுவலகத்தில் சிறப்பான நபரின் நட்பு கிடைப்பதன் மூலம், பதவி உயர்வைப் பெறக்கூடும்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணியிடத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் கிடைக்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதுவரை நீங்கள் செய்த கடின உழைப்புக்கான பலன் இந்த வாரத்தில் கிடைக்கும். வெளிநாட்டு வாய்ப்புக்களும் தேடி வரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். உங்களின் கடின உழைப்பு இந்த வாரம் பெரிய வெற்றியைத் தரும். அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் உங்கள் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். விரும்பிய வேலையை இந்த வாரத்தில் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் வேலையை மாற்றும் எண்ணம் இருந்தால், இந்த வாரத்தில் அதற்கு முயற்சிகளை எடுப்பீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் வெற்றிக்கான வாய்ப்புக்கள் உள்ளன. கடினமாக உழைத்தால் உங்களின் வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். இந்த வாரத்தில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல பலனைத் தருவதாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக அவ்வளவு சிறப்பாக இருக்காது. வெற்றிக்காக காத்திருக்க வேண்டும். உங்களின் முயற்சிகளில் வெற்றி கிடைக்காவிட்டால், விரக்தியும், ஏமாற்றமும் அடையாமல் தொடர்ந்து முயற்சிகளை செய்யுங்கள். இதனால் விரைவில் நல்ல பலனைப் பெறலம்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் உங்கள் தொழில் வாழ்க்கையில் பெரிய வெற்றியை எதிர்பார்க்கக்வடாது. ஏனெனில் இந்த வாரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இல்லை. ஆனால் வாரத்தின் இரண்டாம் பகுதியில் சிறப்பான நபரின் உதவியால் ஒரு நல்ல முன்னேற்றத்தைப் பெறுவீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. சிலருக்கு விரும்பிய வேலை மாற்றம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக முக்கியமானதாக இருக்கும். வேலை தேடுபவர்கள் நல்ல வேலையைப் பெறுவார்கள். சிறப்பான ஒருவரின் நட்பு கிடைப்பதன் மூலம், பணியிடத்தில் பதவி உயர்வைப் பெறக்கூடும்.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications