Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு வேலைப்பளு ரொம்ப அதிகமா இருக்கும்..

Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.

உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 09 ஜூன் 2024 முதல் 15 ஜூன் 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

Weekly Career Horoscope Predictions From 09 June To 15 June 2024 In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும். உங்களுக்கு எதிராக அனைத்தும் இருக்கும். இருப்பினும் சோர்வடையாமல் கடினமாக உழைத்தால், நிச்சயம் வெற்றியைப் பெறலாம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இதுவரை செய்த உங்களின் கடின உழைப்பு இந்த வாரத்தில் நல்ல பலனைத் தரும். வேலை தொடர்பாக வெளியூர் பயணங்கள மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தரும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் பற்றி நீங்கள் கவலைப்பட தேவையில்லை. உங்களின் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். இதனால் மனம் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சிலருக்கு புதிய தொழிலை தொடங்குவதற்கான திட்டங்கள் மனதில் எழும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக மிகவும் முக்கியமானதாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்களின் நட்பு கிடைக்கும். இதனால் தொழிலில் ஒரு நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலைப் பொறுத்தவரை பெரிய வெற்றியை எதிர்பார்க்கக்கூடாது. ஏனெனில் இந்த வாரத்தில் அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. ஆனால் வாரத்தின் இரண்டாம் பாதியில் சமூகத்தில் நல்ல அஸ்தஸ்த்தில் உள்ளவரின் நட்பால் தொழிலில் நல்ல பலனைப் பெறலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! உங்கள் தொழில் சிறப்பாக பிரகாசிக்க இன்னும் காத்திருக்க வேணடும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும். மனம் தளராமல் தொடர்ந்து உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக மிகவும் அதிர்ஷ்டசாலி. உங்களின் அனைத்து முயற்சிகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். வெளியூர் பயணங்களையும் மேற்கொள்ள நேரிடும். இப்பயணம் நல்ல பண ஆதாயங்களைத் தருவதாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். வேலை தேடுபவர்கள் எதிர்பார்த்த வேலையைப் பெறுவார்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் அதிர்ஷ்டமாக இருக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் எதிர்பார்த்த வெற்றியை உடனே பெற முடியாது. பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். இப்படி அவசரப்படாமல் இருந்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சில புதிய நம்பிக்கைகளைப் பெறுவீர்கள். அனுபவமிக்க ஒருவரின் ஆலோசனையின் பேரில் உங்கள் வேலையை மாற்ற முடிவெடுக்கலாம். இந்த முடிவு உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! இந்த தொழில் தொடர்பான முயற்சிகளில் சிறப்பான வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடி கிடைக்காமல் இருந்தால், இந்த வாரத்தில் சோர்வடையாமல் முயற்சித்தால் நல்ல வேலையைப் பெறலாம்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் வேலையைப் பற்றிய கவலையில் இருந்து விடுபடுவீர்கள். ஏனெனில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த வேலை உங்களைத் தேடி வரும். சமூகத்தில் சிறப்பான நபரின் நட்பு கிடைத்து, தொழிலில் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, June 9, 2024, 10:30 [IST]
Desktop Bottom Promotion