Latest Updates
-
முட்டை பத்திரியும், தேங்காய் பாலும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 22 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ஆசீர்வதிக்கப்பட்ட நாளாக இருக்குமாம் -
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா?
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் வெற்றிகள் குவியும்...
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 04 ஆகஸ்ட் 2024 முதல் 10 ஆகஸ்ட் 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சாதகமான பலன்கள் கிடைக்கும். அரசு வேலைக்காக போட்டி தேர்வுகளில் பங்கு பெற்றிருந்தால், சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள். பணியிடத்தில் அனுபவசாலிகளின் வழிகாட்டுதல் கிடைக்கும். சிலருக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் வெற்றி பெற காத்திருக்க வேண்டும். இந்த வாரத்தில் எவ்வளவு முயற்சித்தாலும், சாதகமான பலன்கள் கிடைக்காது. அதற்காக முயற்சியை கைவிடாதீர்கள். தொடர்ந்து முயற்சித்தால் வெற்றியைப் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் தொடர்பான பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் வேலையை இழக்க நேரிடும். எனவே சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவார்கள். வேலை தேடிக் கொண்டிருந்தால் விரும்பிய வேலை இந்த வாரத்தில் கிடைக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலைப் பொறுத்தவரை கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். வெற்றி கிடைக்காவிட்டால் மனம் தளராமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். இப்படி முயற்சிக்கும் போது உங்களின் செயல்திறன் பணியிடத்தில் வெளிப்பட்டு நல்ல பாராட்டைப் பெறும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் வெற்றி காண்பது கடினமாக இருக்கும். சொல்லப்போனால் வேலையை முடிக்க அல்லது விரும்பிய வேலையைப் பெற இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டும். வெற்றி கிடைக்காவிட்டால் சோர்ந்து போகாமல், தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருங்கள். நிச்சயம் வெற்றி கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த வாரம் அருமையாக இருக்கும். ஆனால் பேச்சைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அந்த பேச்சே உங்கள் வேலையை கெடுத்துவிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந் வாரம் தொழில் ரீதியாக நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். திட்டமிட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் வேலையைப் பொறுத்தவரை மிகவும் சிறப்பாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். அரசு வேலைக்காக தேர்வு எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு இந்த வாரம் அற்புதமாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலைப் பொறுத்தவரை அவ்வளவு சிறப்பாக இருக்காது. எவ்வளவு கடினமாக உழைத்தாலும், வெற்றி பெற காத்திருக்க வேண்டும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்காமல் போனால் மனம் வருந்தாமல் தொடர்ந்து முயற்சி செய்யுங்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சில பிரச்சனைகளை சந்திக்கலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடன் தகராறு ஏற்படலாம். இதன் விளைவாக அலுவலகத்தில் உங்களின் வேலை பாதிக்கப்படலாம். சிலருக்கு வேலை போகவும் வாய்ப்புள்ளது. எனவே கவனமாக இருங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக அதிர்ஷ்டசாலியாக இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல பலனைத் தருவதாக இருக்கும். வேலையில் மிகவும் அர்ப்பணிப்புடன் இருப்பீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications