Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் நடக்கப்போகும் ராகு-கேது பெயர்ச்சியால் ராஜயோகம் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
சரவணபவன் நெய் மணக்கும் வெண் பொங்கல் ரெசிபி - ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் அசத்தலா இருக்கும் -
இந்த 4 மாதங்களில் பிறந்தவர்களிடம் நல்ல குணங்களை விட கெட்ட குணங்கள்தான் அதிகமாக இருக்குமாம் -
5 முட்டை இருந்தா பள்ளிப்பாளையம் முட்டை வறுவலை செஞ்சு பாருங்க - காரசாரமா வேற லெவலில் இருக்கும் -
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம்
Weekly Career Horoscope: இந்த வாரம் இந்த ராசிக்காரர்களுக்கு வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்..
Weekly Career Horoscope: ஜோதிடத்தின் படி கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. எப்படி ஒவ்வொரு மாதமும் ஒருவருக்கு ஒவ்வொரு மாதிரி உள்ளதோ, அதேப் போல் ஒவ்வொரு வாரமும் வேறுபடும். குறிப்பாக தொழில் ரீதியாக பல மாற்றங்களைக் காணலாம்.
உங்களுக்கு அடுத்து வரும் 7 நாட்கள் தொழில் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? கீழே 01 செப்டம்பர் 2024 முதல் 07 செப்டம்பர் 2024 வரையிலான காலகட்டமானது ஒருவருக்கு தொழில் ரீதியாக எந்த மாதிரி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் தொடர்பான கவலைகள் நீங்கும். போட்டி தேர்வுகளில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் சிறப்பாக நடந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. முக்கியமாக இந்த வாரத்தில் உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், உங்களின் முக்கியமான வேலை பாழாகும். வார இறுதியில் வேலையில் வெற்றி கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். உங்களின் முயற்சிக்கு ஏற்ற நல்ல பலன் கிடைக்கும். பணிபுரிபவர்கள் கடின உழைப்புக்கான பலனைப் பெறுவார்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களே! இந்த வாரம் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். அந்த கடின உழைப்புக்கான பலன் உடனே கிடைக்காது. அதற்காக ஏமாற்றமடையாமல், தொடர்ந்து முயற்சி செய்யுங்கள். இதனால் நிச்சயம் நல்ல வெற்றியைப் பெறலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக சிறப்பாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் விரும்பிய வேலையைப் பெறலாம். இன்டர்வியூ சென்றால், அதில் நீங்கள் தேர்வாகலாம். மொத்தத்தில், இந்த வாரம் தொழிலைப் பொறுத்தவரை அற்புதமாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலைப் பொறுத்தவரை, சில புதிய நம்பிக்கைகள் மனதில் எழும். ஒருவரது ஆலோசனையின் பேரில் உங்கள் வேலையை மாற்ற முடிவெடுக்கலாம். இந்த முடிவு உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக அற்புதமாக இருக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவைப் பெறுவீர்கள். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் ரீதியாக முக்கியமானதாக இருக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். பணியிடத்தில் சிறப்பான நபரின் நட்பினால், பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பார்கள். இந்த வாரம் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். முயற்சிகளுக்கு நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணங்களை அதிகம் மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களே! இந்த வாரம் பணியிடத்தில் உயர் அதிகாரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும். பேச்சையும் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். ஆனால் வார இறுதியில் நல்ல வெற்றி கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்களே! இந்த வாரம் தொழில் தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டால் நல்ல வெற்றியைப் பெறுவீர்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications