Latest Updates
-
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...! -
1/2 கப் கோதுமை ரவா இருந்தா.. காலையில் இந்த டிபனை செய்யுங்க.. கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 05 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமாக வாகனம் ஓட்டணும்...! -
12 ஆண்டுக்கு பின் நடக்கும் குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 3 ராசிகள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... -
வேர்க்கடலையுடன் இந்த 2 பொருட்களை சேர்த்து ஆந்திரா ஸ்டைலில் சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு செமையா இருக்கும்... -
சூரியன்-புதன் உருவாக்கும் புதாதித்ய யோகம் 2026: இந்த 4 ராசிக்காரர்களுக்கு பணமும், புகழும் குவியப்போகுதாம்...! -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி செட்டிநாடு ஸ்டைலில் பாயாசம் செஞ்சு பாருங்க... அமிர்தம் மாதிரி இருக்கும்...!
Virgo Horoscope 2025: இந்த 2025 ஆம் ஆண்டு கன்னி ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும்-ன்னு தெரியணுமா?
Virgo Horoscope 2025 In Tamil: 2025 புத்தாண்டில் நமக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும். திருமணம் நடக்க வேண்டும், குழந்தை பிறக்க வேண்டும், கடன் பிரச்சினை தீர வேண்டும் என்று பலரும் எதிர்பார்ப்பார்கள். 2025 ஆம் ஆண்டில் நவ கிரகங்களின் இடப்பெயர்ச்சியால் கன்னி ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னமாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்பது குறித்து ஜோதிடர் சொ. ஜெயலட்சுமி அவர்கள் விரிவாக கூறியுள்ளார். வாருங்கள், கன்னி ராசிக்காரர்களுக்கு 2025 எப்படி இருக்கும் என்பதை பார்க்கலாம்.
குருவின் அருளாலும் பார்வையாலும் ராகு, கேதுவின் இடப்பெயர்ச்சியாலும் அற்புத மாற்றங்கள் நிகழப்போகிறது. வீடு தேடி ராஜ யோகம் வரப்போகிறது என்றாலும் கண்டச்சனி காலம் தொடங்கப்போவதால் கவனமாக இருக்க வேண்டும். அதே போல பத்தாம் வீட்டில் குரு பயணம் செய்யப்போகும் காலத்தில் பல வித மாற்றங்களை ஏற்க தயாராக வேண்டும்.

கிரகப்பெயர்ச்சிகள்: கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு சனி பகவான் ஆறாம் வீட்டில் இருந்து ஏழாம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி அடையபோகிறார். குருபகவான் ஆண்டு முழுவதும் 9,10,11ஆம் வீடுகளில் பயணம் செய்யப்போகிறார். அதே போல ராகு ஏழாம் வீட்டில் இருந்து ஆறாம் வீட்டிற்கு கேது ஜென்ம ராசியில் இருந்து 12ஆம் வீட்டிற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர்.
குடும்ப வாழ்க்கை
கடந்த இரண்டரை ஆண்டுகாலமாக ஆறாம் வீட்டில் ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்து வந்த சனிபகவான் 2025 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் ஏழாம் வீடான களத்திர ஸ்தானத்திற்கு வரப்போகிறார். கண்டச்சனியாக பயணம் செய்யப்போகும் சனி பகவான் உங்களுக்கு பெரிய அளவில் கஷ்டங்களை தரமாட்டார். சின்னச் சின்ன சோதனைகளையும், உடல் ஆரோக்கியத்தில் லேசான பாதிப்புகளையும் ஏற்படுத்துவார். குடும்ப வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும் களத்திர ஸ்தான சனி பகவான் சோதனைகளை கொடுத்தாலும் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.
பொருளாதார நிலை
பண விசயத்தில் சிக்கனம் தேவைப்படும். 2025ஆம் ஆண்டில் உங்கள் செலவுகளைக் குறைத்து,சேமிக்கத் தொடங்குங்கள். சகோதரர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம். பிள்ளைகளின் எதிர்காலத்துக்காகக் கொஞ்சம் சேமிக்கத் தொடங்குவீர்கள். 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில் குருபகவான் 9ஆம் வீடான பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். குரு பகவானின் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பது சிறப்பு. பணம் பல வழிகளிலும் வந்து சேரும்.
வேலை, தொழில்
வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். பங்குச்சந்தையில் செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். கடன்களை அடைக்க வருமானத்தை தரப்போகிறார் குருபகவான். சகோதர சகோதரிகளுக்கு நன்மைகள் நடக்கும். திருமணம் நடைபெறும். திருமணமாகி நீண்ட நாட்களாக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும்.
பொருளாதார நிலை
குரு பகவான் பயணமும் பார்வையும் உங்கள் ராசிக்கு சாதகமாக பயணம் செய்யும் காலத்தில் சொந்த வீடு கட்டுவீர்கள் சொத்து சுகம் வாங்கும் யோகம் வரும். வேலையில் உயர்பதவியில் உள்ளவர்களுக்கு அதிகார பலம் தேடி வரும். குரு பலன் கிடைக்கப்போவதால் குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும். பணம் பலவழிகளிலும் வந்து சேரும். 2025 ஆம் ஆண்டு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். சொந்த வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு. குடும்பத்தில் இதுநாள் வரை தடைபட்டு வந்த சுப காரியங்கள் கைகூடும். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும்.
பெண்கள்
பெண்களின் மன அமைதியும் நிம்மதியும் அதிகரிக்கும். ஆன்மீக தலங்களுக்கு யாத்திரை செல்வீர்கள். ஜென்ம கேது சில நேரங்களில் மன குழப்பத்தையும் விரக்தியான மனநிலையையும் தருவார் என்றாலும் கவலைப்படாமல் செய்யும் வேலையில் கவனம் செலுத்துங்கள். ஆண்டின் பிற்பகுதியில் ராகு 6ஆம் வீட்டிற்கு கேது விரைய ஸ்தானத்திற்கும் இடப்பெயர்ச்சி அடையப்போவதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. ராகு நோய்களையும் கடனையும் அதிகரிப்பார். கடன் வாங்க வேண்டாம் யாருக்கும் கடன் கொடுக்கவும் வேண்டாம்.
மாணவர்கள்
கன்னி ராசியில் பிறந்த மாணவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. குரு பகவானின் பயணமும் பார்வையும் சில நேரங்களில் கை கொடுக்கும். கண்டச்சனி காலம் என்பதால் படிப்பில் அக்கறை காட்டுவது அவசியம். நோய் பாதிப்புகள் நீங்க, மன நிம்மதி அதிகரிக்க செவ்வாய்கிழமை விநாயகரை அருகம்புல் சாற்றி வழிபடுவது அவசியம்
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











