Latest Updates
-
உடனடி கார தோசையும், வெள்ளை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 07 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மனஉளைச்சலால் கஷ்டப்படப்போறாங்களாம் -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் இந்த 3 ராசிக்காரர்களை ஜெயிக்கிற குதிரையாக மாற்றப்போகுதாம் -
கேரட் தக்காளி தொக்கு ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
இந்த இடங்களில் மச்சம் உள்ள ஆண்கள் சக்கரவர்த்தியாக வாழும் அதிர்ஷ்டம் உள்ளவர்களாம் - உங்களுக்கு இருக்கா? -
ஆரஞ்சு ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
12 மாநிலங்கள் வழியாக செல்லும் இந்தியாவின் உயிர்நாடி என்று அழைக்கப்படும் நெடுஞ்சாலை எது தெரியுமா? -
செவ்வாய்-ராகு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் செப்டம்பர் மாதம் வரை கொடிகட்டி பறக்கப்போகும் 3 ராசிகள் -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் கோதுமை நெய் அப்பம் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணுங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம்
கன்னி செல்லும் சுக்கிரன்: ஆகஸ்ட் 25 முதல் இந்த 3 ராசிக்கு ராஜயோகம் அடிக்கப்போகுது...
Venus Transit In Virgo On 25 August 2024: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இந்த சுக்கிரன் ஒவ்வொரு முறை ராசியை மாற்றும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஆகஸ்ட் 25 ஆம் தேதி சுக்கிரன் புதனின் கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த கன்னி ராசியில் சுக்கிரன் செப்டம்பர் 18 ஆம் தேதி வரை இருப்பார்.

கன்னி ராசிக்கு சுக்கிரன் செல்வதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியானது சிறப்பாக இருக்கப் போகிறது. இப்போது சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்கள் அற்புதமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களைப் பெறுவார்கள். நிதி நிலை வலுவாக இருக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்களின் செயல்திறனால் நல்ல பாராட்டைப் பெறுவார்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது. மாணவர்கள் தேர்வுகளில் மகத்தான வெற்றியைப் பெறுவார்கள். குடும்ப உறுப்பினர்களுடன் இனிமையான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவார்கள். நண்பர்களின் முழு ஆதரவு கிடைக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவதோடு, அதிலிருந்து நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தம்பதிகளிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்காலம் குறித்த சில முக்கியமான முடிவுகளை இக்காலத்தில் எடுப்பீர்கள். சிலருக்கு புதிய வாகனம், வீடு, சொத்துக்கள், நகைகள் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் உங்களின் இலக்குகளை எளிதில் அடைவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications