Latest Updates
-
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
பார்லர் போகாமலே உங்க முகம் பளபளன்னு இருக்கணுமா? அப்ப காபித் தூள் வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
அசைவ உணவுக்கு இணையான சத்துக்களைக் கொண்ட சைவ உணவுகள் இதாங்க! நோட் பண்ணி வெச்சுக்கோங்க.. -
பீட்ரூட்டை இப்படி சாம்பார் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
செவ்வாய் பெயர்ச்சியால் இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
அவல் தோசையும், வேர்க்கடலை சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 19, 2026: இன்றைய நாள் இந்த 2 ராசிகளுக்கு ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் - ஜாக்கிரதை -
கடக ராசிக்கு சென்றுள்ள செவ்வாய்: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமும், சொத்துக்களும் குவியும்..
சுக்கிர பெயர்ச்சியால் ஆகஸ்ட் 25 முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது...
Venus Transit In Virgo On 25 August 2024: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் 30 நாட்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரன் ஆகஸ்ட் 25 ஆம் தேதி புதன் ராசியான கன்னி ராசிக்குள் நுழையவுள்ளார்.
கன்னி ராசியில் சுக்கிரன் நுழைவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. குறிப்பாக நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படவுள்ளது. இப்போது சுக்கிரன் கன்னி ராசியில் நுழைவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்
ரிஷப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் ந்த ராசிக்காரர்கள் குழந்தை தொடர்பான நல்ல செய்திகளைப் பெறுவார்கள். அனைத்து வேலைகளிலும் நல்ல வெற்றி கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. அலுவலகத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். சில ருக்கு புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம். காதலித்து வந்தால், அது திருமணமாக மாறலாம். இக்காலத்தில் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இக்காலத்தில் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதன் விளைவாக வேலையில் நல்ல வெற்றி கிடைக்கும். பந்தயம், லாட்டரி, பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், எதிர்காலத்தில் நல்ல லாபத்தைப் பெறலாம். சிலருக்கு வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்கள் தேடி வரும். புதிய உறவுகள் இக்காலத்தில் கிடைக்கும். இந்த உறவுகளால் எதிர்காலத்தில் எதிர்பாராத நன்மை கிடைக்கும். முக்கியமாக நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு உறவுகளைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். ஆளுமை நன்கு மேம்படும். பேச்சால் பல வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மேலும் உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். வியாபாரிகளுக்கு புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது மற்றும் பதவி உயர்வுக்கான வாய்ப்புக்களும் உள்ளன. வணிகர்கள் சிக்கிய பணத்தைப் பெறுவார்கள். குறிப்பாக நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
