Latest Updates
-
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 28 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டுமாம் -
May 2026 Career Horoscope: மே மாதத்தில் தொழிலில் கொடிகட்டி பறக்கப் போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
1 கப் சுண்டல் இருந்தா.. ஒருடைம் இப்படி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு பிரமாதமா இருக்கும்.. -
இந்த தேதிகளில் பிறந்தவர்கள் 35 வயசுக்கு மேல் தான் வெற்றியை காண்பார்களாம்.. உங்க பிறந்த தேதி இதுல இருக்கா? -
லிவ்-இன் உறவு முறிவு கிரிமினல் குற்றமா? உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு என்ன சொல்கிறது?
சுக்கிரன் கன்னி ராசிக்கு செல்வதால் இந்த 5 ராசிக்காரங்க கையில இருக்குற பணம் கறையப்போகுதாம்...!
பொதுவாக சுக்கிரன் நன்மை தரும் கிரகமாக கருதப்படுகிறது. ஆனால் சில அரிதான சமயங்களில் சுக்கிரன் தீய பலன்களைத் தருகிறார். சுக்கிரன் அதன் அனைத்து நன்மைகளையும் தீமைகளாக மாற்றுகிறது, குறிப்பாக ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு மாறும்போது. கன்னி ராசி பெரும்பாலும் சுக்கிரனின் எதிர்மறை ராசியாக கருதப்படுகிறது.
எனவே சுக்கிரன் கன்னி ராசியை அடையும் போது பலவீனமாகிறார். இந்த கிரகப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தப்போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் 25ம் தேதியில் இருந்தே கடினமான காலம் தொடங்குகிறது. சுக்கிரன் பலன் தரும் ராசியாக இருந்தாலும், கன்னி ராசிக்கு சுக்கிரன் செல்வது மேஷ ராசிக்காரர்களுக்கு கடுமையான மாற்றங்களைக் கொண்டுவருகிறது. எதிரிகள் அதிகரிக்ப்பார்கள், மேலும் அவர்களின் நிதி ஆதாயத்தை தடுக்கும் விஷயங்கள் ஏற்படலாம். இந்த காலகட்டத்தில் அவர்களின் நிதிநிலை மோசமாக பாதிக்கப்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்கும் இந்த சுக்கிர பெயர்ச்சியால் பாதகமான பலன்கள் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை. விரும்பிய விஷயங்கள் அனைத்திலும் தடைகள் ஏற்படும். பணத்தை திறம்பட நிர்வகிக்க முடியாமல் போகலாம். இதுவரை உங்களின் பிரதான வருமானமாக இருந்து வந்த வேலையில் பிரச்சினைகள் ஏற்படலாம். இந்த காலக்கட்டத்தில் உங்கள் நிதிநிலை உங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தும்.
சிம்மம்
கன்னி ராசிக்கு சுக்கிரன் பெயர்ச்சி அடைவதால் சிம்ம ராசிக்காரர்களுக்கு அடிக்கடி மோசமான பலன்கள் ஏற்படும்.அதிக பணம் சம்பாதிப்பது சாத்தியம் என்றாலும், அதை எப்படிச் செலவிடுவது என்பது சவாலாக இருக்கும். உங்களின் கவனக்குறைவால் உங்கள் வாழ்க்கையில் பல தடங்கல்கள் ஏற்படலாம். நீண்ட கால பலன்களுக்காக அனைத்தையும் குறிக்க கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கிய பிரச்சினைகளும் ஏற்படலாம்.
துலாம்
ஆகஸ்ட் 25-க்கு பிறகு துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் மிக மோசமான காலகட்டத்தை சந்திக்க நேரிடும். ஆரோக்கிய பிரச்சினைகள் அவர்களை பாடாய்படுத்தும். பல விஷயங்களில் ஆர்வம் அதிகரித்து, வாழ்க்கையில் எதையுமே செயல்படுத்த முடியாத காலகட்டம் ஏற்படக்கூடும். அவர்களின் வெற்றிக்கு பல வழிகளில் தடங்கல்கள் ஏற்படும். ஆன்மீக விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்களால் பல வழிகளில் சவால்கள் ஏற்படலாம். மேலும் ஆகஸ்ட் 25 முதல் கடுமையாக உழைத்தால்தான் குறைந்தபட்ச பலனாவது கிடைக்கும். பல உணர்ச்சிகரமான விஷயங்கள் உங்களுக்கு சவால்களை ஏற்படுத்துகின்றன. சில ஆரோக்கிய பிரச்சினைகள் வர வாய்ப்பு உள்ளது. எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
