Latest Updates
-
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது! -
செட்டிநாடு வெங்காய கோசு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்..
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்பட போகுது..
Venus Transit In Thiruvathirai Nakshatra On June 2024: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் செல்வம், அழகு, ஆடம்பரம், காதல் ஆகியவற்றின் காரணியாவார். சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரனின் நிலையில் ஒவ்வொரு முறை மாற்றம் ஏற்படும் போதும், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் தற்போது சுக்கிரன் மிதுன ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி ஜூன் 18 ஆம் தேதி நிகழ்ந்தது. இந்த பெயர்ச்சியின் போது சுக்கிரன் திருவாதிரை நட்சத்திரத்திற்குள் நுழைந்தார். சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலனும், சிலருக்கு மோசமான பலனும் கிடைக்கலாம்.

ஜோதிடத்தில் உள்ள 27 நட்சத்திரங்களில் 6 ஆவது நட்சத்திரம் தான் திருவாதிரை. இந்த நட்சத்திரத்தின் அதிபதி ராகு. சுக்கிரனும், ராகுவிற்கும் இடையே நட்புணர்வு உள்ளதால், சில ராசிக்காரர்கள் இந்த நட்சத்திர பெயர்ச்சியால் நல்ல அதிர்ஷ்டத்தையும், தொழிலில் நல்ல லாபத்தையும் பெறுவார்கள். இப்போது சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது அற்புதமான பலன்களை வழங்கும். குறிப்பாக இந்த ராசிக்காரர்கள் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள். மேலும் அறிவாற்றலும், புரிதலும் மேம்பட்டு, பல பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வணிகர்கள் பெரிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். முக்கியமாக ராகுவின் நிலை ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால், ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது அதிர்ஷ்டமானதாக இருக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வணிகத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். பணியிடத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். வியாபாரம் தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும் மற்றும் இந்த பயணம் நல்ல நிதி நன்மைகளைத் தருவதாக இருக்கும். இதுவரை ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்தால், இனிமேல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியானது சிறப்பான பலன்களை வழங்கும். பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறும். இதனால் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரம் செய்பவர்கள் புத்திசாலித்தனமான திட்டங்களை தீட்டுவதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம். சுக்கிரனின் அருளால் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, நல்ல ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications