Latest Updates
-
இன்றைய ராசிபலன் 06 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க குடும்பத்துல பெரிய பிரச்சினை வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 13-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா ஜொலிக்கப் போறாங்களாம் -
ஆமை வடை ரெசிபி - இந்த மாதிரி வடை சுட்டு பாருங்க - மொறுமொறுனு சூப்பராக இருக்கும் -
இந்தியாவில் இயற்கையாக வைரம் கிடைக்கும் ஒரே மாநிலம் எது தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம்
1 வருடம் கழித்து துலாம் ராசியில் உருவாகும் மாளவ்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு முன்னேற்ற கதவு திறக்கப்போகுது..
Venus Transit In Libra Make Malavya Rajyog 2024: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவார். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். தற்போது சுக்கிரன் சிம்ம ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் செப்டம்பர் 18 ஆம் தேதி சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழையவுள்ளார். இந்த துலாம் ராசியில் சுக்கிரன் நுழைவதால், மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த யோகமானது மங்களகரமான யோகம். இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது.

முக்கியமாக நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நல்ல நிதி ஆதாயங்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்திற்கான பாதைகள் திறக்கும். இப்போது சுக்கிரன் உருவாக்கவுள்ள மாளவ்ய ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 7 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் தொழில் மற்றும் வேலையில் நல்ல பலன்களைப் பெறுவார்கள். பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். சிலருக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கலாம். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வாகனம் வாங்கலாம் மற்றும் பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் முதல் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும். பணப் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நிதி நிலை வலுவாக இருக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். முதலீடுகளை செய்தால், நல்ல லாபத்தைப் பெறலாம். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 11 ஆவது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். குடும்பத்தினருடன் இனிமையாக பொழுதைக் கழிப்பீர்கள். வணிகர்களுக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவற்றைப் பெற வாய்ப்புள்ளது. புதிய நண்பர்களை உருவாக்குவீர்கள். இந்த நட்பு எதிர்காலத்தில் பயனுள்ளதாக இருக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications