Latest Updates
-
மயில்கள் ஏன் மழை வரும்போது நடனமாடுகிறது தெரியுமா? காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
சிக்கன் வாங்குனா இந்த மாதிரி தெலங்கானா ஸ்டைலில் மசாலா செஞ்சு பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
குருபகவான்-செவ்வாய் அரிய சேர்க்கையால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்!
சிம்மம் செல்லும் சுக்கிரன்: ஜூலை இறுதியில் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது...
Venus Transit In Leo On July 2024: ஜோதிடத்தில் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நல்ல நிலையில் இருந்தால், அந்நபரின் காதல் வாழ்க்கை மற்றும் நிதி நிலை சிறப்பாக இருக்கும். அதோடு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் அழகாகவும் இருப்பர். ஏனெனில் சுக்கிரன் தான் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இந்த சுக்கிரன் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது சுக்கிரன் கடக ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூலை 31 ஆம் தேதி சுக்கிரன் சூரியனின் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். சிம்ம ராசியில் சுக்கிரன் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சிம்ம ராசிக்குள் சுக்கிரன் நுழைவதால், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது சிம்மம் செல்லும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

கடகம்
கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிறைய செல்வத்தைப் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு பதவ உயர்வு கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. வியாபாரிகளுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைப்பதால் நிறைய லாபத்தைப் பெறக்கூடும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகள் தீரும்.
சிம்மம்
சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். தந்தையின் உதவியால் இலக்கை எளிதில் அடைவீர்கள். பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டப்படும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். போட்டியாளர்கள் உங்களுக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள். இருப்பினும் அதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். நிதி ரீதியாக நல்ல பலன்களைப் பெறுவீர்கள். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் நீங்கும். காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்லவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் கொஞ்சம் காதல் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டும். ஆனால் தொழில் ரீதியாக நன்றாக இருக்கும். வெளிநாட்டில் பணிபுரிய வேண்டுமென்ற ஆசை இருந்தால், அது நிறைவேறும். மாணவர்களுக்கு வெளிநாட்டில் படிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கும் வாய்ப்பு கிடைக்கும். மேலும் நிறைய பணத்தை சேமிக்க முடியும். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபத்தைப் பெறும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications