சிம்மம் செல்லும் சுக்கிரன்: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களின் பண பிரச்சனைகள் தீரப்போகுது..

Venus Transit In Leo On 31 July 2024: ஜோதிடத்தில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுபவர் தான் சுக்கிரன். இந்த சுக்கிரன் மாதம் ஒருமுறை ராசியை மாற்றுவார். மேலும் இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார். சுக்கிரன் தற்போது கடக ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ஜூலை 31 ஆம் தேதி சுக்கிரன் சிம்ம ராசிக்குள் நுழையவுள்ளார். சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சூரியனும் சுக்கிரனும் நட்பு கிரகங்கள். எனவே சூரியனின் ராசிக்கு சுக்கிரன் செல்வதால், சற்று சிறப்பாகவே இருக்கும். அதுவும் இந்த சுக்கிர பெயர்ச்சியால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.

Venus Transit In Leo On 31 July 2024 Will Solve Money Problems For These Zodiac Signs

இருந்தாலும், சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால், 3 ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். முக்கியமாக பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும், நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது சுக்கிரன் சிம்ம ராசிக்கு செல்வதால் எந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும் என்பதைக் காண்போம்.

மிதுனம்

மிதுன ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். பணியிடத்தில் உடன் வேலை செய்வோர் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் நல்ல நிதி ஆதாயங்களைத் தருவதாக இருக்கும்.

காதல் வாழ்க்கை நன்றாக இருக்கும். திருமண வாழ்க்கையும் இனிமையாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். இதுவரை சந்தித்த பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நிறைய பணத்தை சேமிப்பீர்கள். ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

கடகம்

கடக ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும் வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்களின் வேலை நல்ல பாராட்டைப் பெறுவதோடு, பதவி உயர்வு அல்லது சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.

புதிய தொழிலை தொடங்க நினைத்து, அதை இக்காலத்தில் தொடங்கினால் சிறப்பான பலனைப் பெறலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். உறவுகளைப் பொறுத்தவரை, வாழ்க்கைத் துணையுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். ஆரோக்கியமும் நன்றாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் செல்கிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் ஒவ்வொரு வேலையையும் திறம்பட செய்து முடிப்பார்கள். வேலை தேடுபவர்கள் நல்ல வேலையைப் பெறுவார்கள். சிலர் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். இந்த பயணம் சிறப்பான பலனை அளிக்கும்.

வியாபாரிகள் தங்கள் போட்டியாளருக்கு கடுமையான போட்டியைக் கொடுப்பார்கள் இதன் மூலம் நிறைய லாபம் கிடைத்து, நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிலருக்கு புதிய வருமான ஆதாரங்கள் கிடைக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவார்கள். மேலும் குழந்தைகளால் பெருமையடைவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, July 30, 2024, 9:56 [IST]
Desktop Bottom Promotion