Latest Updates
-
கல்லீரலில் உள்ள நச்சுக்களை டக்குனு வெளியேற்றி உயிரைக் காக்கும் சிறந்த 10 உணவுகள் -
முட்டை தக்காளி குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சனிபகவான் மீன ராசியில் உதயமாவதால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் -
பாபா வங்காவின் கணிப்பு படி 2026-ல் இந்த நாட்டில் பேரழிவை ஏற்படுத்தும் சுனாமி வரப்போகுதாம் -
1 மாங்காயும், 3 தக்காளியும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. இட்லி, தோசைக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 22 ஏப்ரல் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வாகனம் ஓட்டணும் -
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் ஜூலை 07 வரை இந்த ராசிக்காரர்களுக்கு யோக காலமா இருக்கும்...
Venus Transit In Gemini On 12 June 2024: வேத ஜோதிடத்தில் அசுரர்களின் தலைவனாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியாவார்.
இந்த சுக்கிரன் ஒருவரது ஜாதகத்தில் வலுவாக இருந்தால், அந்நபர் வாழ்க்கையில் அனைத்து மகிழ்ச்சியையும் பெறுவார். அதே சமயம் சுக்கிரன் பலவீனமாக இருந்தால், அந்த நபர் அதிகம் போராட வேண்டியிருக்கும். எனவே தான் ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் நிலை மிகவும் முக்கியமானது.

இந்நிலையில் ஜூன் 12 ஆம் தேதி சுக்கிரன் புதனின் ராசியான மிதுன ராசிக்குள் நுழைந்தார். இந்த மிதுன ராசியில் ஜூலை 7 ஆம் தேதி வரை இருந்து, பின் கடக ராசிக்குள் நுழைவார். மிதுன ராசிக்கு சுக்கிரன் சென்றதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே நிச்சயம் காணப்படும். இப்போது மிதுன ராசிக்கு சுக்கிரன் சென்றதால் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 3 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் தைரியமும், புரிதலும், பொறுமையும் அதிகரிக்கும். உங்களின் வேலை பாராட்டப்படும். பல முக்கிய முடிவுகளை இக்காலத்தில் எடுக்கலாம். தொழில் மற்றும் வேலையில் மாற்றம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். கார், நிலம் அல்லது வீடு போன்ற சொத்துகளில் முதலீடு செய்ய விரும்பினால், அதற்கு இக்காலம் சாதகமாக இருக்கும். வணிகர்கள் சில பிரச்சனைகளை சந்தித்தாலும், பங்குச் சந்தையுடன் தொடர்புடையவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். மேலும் ஆரோக்கியம் மற்றும் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் முதல் வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் அதிக லாபத்தைப் பெறுவார்கள். மாணவர்கள் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். திருமணமாகாதவராக இருந்தால், நல்ல வரன் கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். குடும்ப உறுப்பினர்களிடம் அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் பொறுப்புகள் நிறைவேறும்.
கடகம்
கடக ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் உங்களின் செலவுகள் அதிகரிக்கும். எப்போதும் நன்கு யோசித்த பின்னரே செலவழிக்க வேண்டும். இக்காலத்தில் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். ஆனால் வியாபாரிகளுக்கு நல்ல காலமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் ஆரம்பத்தில் கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். இருப்பினும் வேலையில் சில குழப்பங்கள் இருக்கும். வியாபாரம் சம்பந்தமான பயணத்தை மேற்கொள்ள நேரிடும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சிறப்பாக இருக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 10 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு இப்பெயர்ச்சியானது நன்றாக இருக்கும். இக்காலத்தில் ஒரு நல்ல திட்டத்தின் மூலம் தொழிலில் வெற்றியையும் புகழையும் பெறுவீர்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 9 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷடத்தின் ஆதரவைப் பெறுவார்கள். நீண்ட தூர பயணத்தை மேற்கொள்ள நேரிடும். அதோடு தொழிலில் பல புதிய வாய்ப்புகளையும் பெறுவீர்கள். அனைத்து வேலைகளிலும் குடும்பத்தினரின் முழு ஆதரவு இருக்கும். இருப்பினும், ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்பெயர்ச்சியானது இந்த ராசிக்காரர்களை பணம் சம்பாதிக்க தவறான பாதையை நோக்கி தள்ளும். அதோடு பெரிய இழப்புகளுக்கும் வழிவகுக்கும். இருப்பினும் தொழிலில் முன்னேற்றத்தைக் காணக்கூடும். இதன் விளைவாக உங்களின் ரகசிய எதிரிகள் அதிகமாக பொறாமைப்படுவார்கள்.
தனுசு
தனுசு ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் சிறப்பாக இருக்கும். வேலையை விட உங்கள் முன்னுரிமைகளில் கவனம் செலுத்த வேண்டும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைப்பதால் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள் மற்றும் அதனால் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.
மகரம்
மகர ராசியின் 6 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சவால்கள் நிறைந்ததாக இருக்கும். சிறு விஷயங்களுக்கும் வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமை காக்க வேண்டும். அதோடு கடன் வாங்குவதைத் தவிர்க்கவும், இல்லையெனில், நீங்கள் எதிர்காலத்தில் சிக்கல்களைச் சந்திக்க வேண்டியிருக்கும். வேலையை மாற்ற நினைத்தால் இந்த நேரம் சாதகமாக இருக்காது.
கும்பம்
கும்ப ராசியின் 5 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நன்றாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. வாழ்க்கைத் துணையுடன் இனிமையாகப் பொழுதைக் கழிப்பீர்கள். குழந்தைகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். இருப்பினும் ஆரோக்கியத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.
மீனம்
மீன ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சுக்கிரன் சென்றுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் காதல் விவகாரங்களில் சில சவால்களை சந்திக்க நேரிடும். நிலம், கட்டிடங்கள் மற்றும் வாகனங்கள் வாங்குவதன் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். பணிபுரிபவர்கள் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்களை நிச்சயம் பெறுவார்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள இது நல்ல காலம் அல்ல.
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications











