மிதுன ராசியில் உதயமாகும் சுக்கிரன்: இன்னும் 2 நாட்களில் இந்த 3 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது..

Venus Rise In Gemini On 28 June 2024: வேத ஜோதிடத்தில் நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதைத் தவிர, அஸ்தமனமாகி உதயமாகவும் செய்யும். அப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் அசுரர்களின் தலைவனாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாவார். இவர் ரிஷபம் மற்றும் துலாம் ராசிகளின் அதிபதியும் கூட. இந்த சுக்கிரன் தற்போது அஸ்தமன நிலையில் மிதுன ராசியில் பயணித்து வருகிறார்.

Venus Rise In Gemini On 28 June 2024 Will Be Lucky For These Zodiac Signs

இந்நிலையில் ஜூன் 28 ஆம் தேதி சுக்கிரன் மிதுன ராசியில் உதயமாகவுள்ளார். சுக்கிரன் உதயமாவதால், இதுவரை அவரால் பெறவிருந்த நற்பலன்களில் உள்ள தடைகள் நீங்கி, அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இப்போது மிதுன ராசியில் உதயமாகும் சுக்கிரனால் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.

கும்பம்

கும்ப ராசியின் 5 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் புதிதாக திருமணமான இந்த ராசிக்காரர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெறலாம். ஒன்றிற்கு மேற்பட்ட ஆதாரங்களில் இருந்து நல்ல பண வரவைப் பெற வாய்ப்புள்ளது. இதனால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். பணிபுரிபவர்கள் மற்றும் தொழிலதிபர்களுக்கு அதிர்ஷ்டத்தின் ஆதரவால் வெற்றிகளும், லாபமும் கிடைக்கும். காதலித்து வந்தால் உங்கள் காதல் வெற்றி அடையும். சிலருக்கு காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.

சிம்மம்

சிம்ம ராசியின் 11 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் மிகப்பெரிய அதிகரிப்பு ஏற்படலாம். புதிய வருமானத்த்தின் மூலம் நிறைய பணத்தை சம்பாதிக்க முடியும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். இதனால் சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். தலைமைத்துவ திறன்கள் அதிகரிக்கும். கௌரவமும், புகழும் அதிகரிக்கும். முதலீடுகளின் மூலம் நல்ல பலனைப் பெறக்கூடும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெற வாய்ப்புள்ளது. .

ரிஷபம்

ரிஷப ராசியின் 2 ஆவது வீட்டில் சுக்கிரன் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பேச்சால் பலரை ஈர்ப்பதோடு, முக்கியமான காரியங்களை வெற்றிகரமாக முடிப்பார்கள். ஆளுமையும் மேம்படும். அதோடு தொழில் ரீதியாக முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலருக்கு பணம் சம்பாதிப்பதற்கு புதிய வழிகள் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல உயர்வு ஏற்படும். மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Tuesday, June 25, 2024, 11:31 [IST]
Desktop Bottom Promotion