சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால் எட்டுத்திக்கும் கொடிகட்டி பறக்கப்போற 4 ராசிக்காரங்க இவங்கதான்...!

ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்க பணம் முக்கியமல்ல, அன்பும் அவசியம். வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்க அன்பு செலுத்தவும், நேசிக்கப்படவும் கூடிய திறன் இருக்க வேண்டும். ஒரு மனிதன் இதையெல்லாம் அடையவும் அனுபவிக்க ஆரோக்கியமும் அவசியம். இந்த எல்லா ஆசீர்வாதங்களும் ஒருவருக்கு கிடைக்க அதிர்ஷ்டமும் தேவை.

ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் அன்பு, நல்லிணக்கம் மற்றும் ஆரோக்கியத்தின் கிரகமாக இருக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் சரியான இடத்தில் இருந்தால், அவருக்கு நல்ல காலம் தொடங்கி விட்டது என்று அர்த்தம். துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன், 43 நாட்கள் நீடிக்கும் ஒரு பிற்போக்கு இயக்கத்தில் நுழைந்துள்ளார். தற்போது மீன ராசியில் இருக்கும் சுக்கிரன் வக்ர பெயர்ச்சி அடைவதால், சில ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் தொடங்கப் போகிறது. அவர்கள் எந்தெந்த ராசிக்காரர்கள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

Venus Retrograde in Pisces Bring Financial Benefits To These Zodiac Signs

மேஷம்

சுக்கிரனின் வக்ர பெயர்ச்சியால், மேஷ ராசிக்காரர்களுக்கு நன்மைகளும், அதிர்ஷ்டமும் கிடைக்கப்போகிறது. இதனால் அவர்களுக்கு லட்சுமி யோகம் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. மேஷ ராசியின் இரண்டாவது வீட்டில் சுக்கிரன் உறுதியாக நிலைபெறுவார். எனவே மேஷ ராசிக்காரர்களுக்கு இது சாதனைக்குரிய காலகட்டமாக இருக்கும். இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு இதனால் நிதி ஆதாயம் காத்திருக்கிறது. இந்த ராசிக்காரர்களுக்கு வியாபாரத்தில் பெரிய லாபம் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும்.

கடகம்

கடக ராசியின் ஐந்தாவது வீட்டில் சுக்கிரன் பெயர்ச்சி அடைகிறார். எனவே, கடக ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பெரும் முன்னேற்றங்களை அனுபவிப்பார்கள். அவர்களின் வாழ்க்கையில் பல மகிழ்ச்சியான விஷயங்கள் நடக்கும். துக்கங்கள் அவர்களிடமிருந்து வெகு தொலைவில் இருக்கும். இந்த காலகட்டத்தில் இந்த ராசிக்காரர்களுக்கு தாங்கள் விரும்பும் நபரை திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் அதிகரிக்கும்.

துலாம்

சுக்கிரன் துலாம் ராசியின் ஏழாவது வீட்டில் பெயர்ச்சி அடைகிறார். எனவே இந்த ராசிக்காரர்கள் திருமண வாழ்வில் மகிழ்ச்சியை அடைய முடியும். உங்கள் துணையுடனான கருத்து வேறுபாடுகள் இந்த காலகட்டத்தில் நீங்கும். இந்த ராசிக்காரர்கள் ஒரு நண்பருடன் சேர்ந்து புதிய தொழில் தொடங்க வாய்ப்பு கிடைக்கும். இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் பல விஷயங்களை ஒன்றாகச் சாதிக்க முடியும்.

மகரம்

மகர ராசியின் பதினொன்றாவது வீட்டில் சுக்கிரன் நிலைபெறுகிறார். இதனால், சமூகத்தில் அவர்களின் மதிப்பு அதிகரிக்கும். அவர்களின் செயல்பாடுகளால் நட்பு வட்டத்தில் புகழ் அதிகரிக்கும். அலுவலகத்தில் உங்களின் நற்பெயர் காட்டுத்தீ போல பரவும். இதனால் உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கும் மற்றும் மனரீதியான பிரச்சனைகள் குறையும். இந்த ராசி மாணவர்களுக்கு கல்வியில் சிறந்து விளங்கவும் வாய்ப்பு கிடைக்கும். பொருளாதாரரீதியாக அவர்கள் பெரும் முன்னேற்றத்தை அடைவார்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Story first published: Sunday, February 2, 2025, 22:25 [IST]
Desktop Bottom Promotion