Latest Updates
-
இன்றைய ராசிபலன் 22 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ராஜயோகம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஆகஸ்ட் 02 செவ்வாய் மிதுன ராசிக்கு செல்வதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சௌ சௌ வாங்குனா இந்த பொருளை சேர்த்து சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
குருபகவான் கடக ராசியில் அஸ்தமனமாவதால் துரதிர்ஷ்டத்தால் துரத்தப்படப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஈவ்னிங் டைம்ல ந்த செட்டிநாடு உருளைக்கிழங்கு அடையை செஞ்சு கொடுங்க - டேஸ்ட் தாறுமாறா இருக்கும் -
உலகில் எந்த நாட்டில் இன்டர்நெட் மிகவேகமாக உள்ளது தெரியுமா? இந்தியாவின் இன்டர்நெட் வேகம் என்ன தெரியுமா? -
ஆந்திரா பூண்டு மிளகு கார குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையா, ஆரோக்கியமா இருக்கும் -
எலான் மஸ்க் அவருடைய பணத்தை பிரித்துக் கொடுத்தால் பூமியில் உள்ள ஒவ்வொருவருக்கும் எவ்வளவு கிடைக்கும் தெரியுமா? -
டிபன் சென்டர் டிபன் சாம்பார் ருசியா இருப்பதன் ரகசியம் இதாங்க.. அது என்னன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு மோசமான நாளாக இருக்குமாம்
லட்சுமி நாராயண ராஜயோகம்: பிப்ரவரி முதல் இந்த 3 ராசிக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கபோகுது.. உங்க ராசி இதுல இருக்கா?
Venus Mercury Conjunction Make Lakshmi Narayan Rajyog 2025: வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இந்த புதன் பேச்சு, புத்திசாலித்தனம், படிப்பு, வியாபாரம் ஆகியவற்றின் காரணியாவார். அதே சமயம் அசுரர்களின் குருவாக கருதப்படுபவர் சுக்கிரன். இந்த சுக்கிரன் அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படுகிறார்.
இவ்விரு கிரகங்களுமே குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றி, மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் சுக்கிரன் ஜனவரி 28 ஆம் தேதி தனது உச்ச ராசியான மீன ராசிக்குள் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் பிப்ரவரி மாதத்தில் புதனும் மீன ராசிக்குள் நுழையவுள்ளார். இதனால் மீன ராசியில் சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் லட்சுமி தேவியின் சிறப்பான ஆசியை பெறவுள்ளார்கள்.
மீன ராசியில் பயணித்து வரும் சுக்கிரன் இந்த ராசியில் மே 31 ஆம் தேதி வரை இருப்பார். அதே வேளையில் புதன் மே 07 ஆம் தேதி வரை மீன ராசியில் இருப்பார். இதனால் இவ்விரு கிரகங்களின் சேர்க்கையால் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகமானது மே 07 ஆம் தேதி வரை நீடித்திருக்கும். இப்போது பிப்ரவரியில் மீன ராசியில் உருவாகவுள்ள லட்சுமி நாராயண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மீனம்
மீன ராசியின் முதல் வீட்டில் சுக்கிரன் மற்றும் புதனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடைவதோடு, நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்கும்.
பரம்பரை சொத்துக்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி, அந்த சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் பலவிதமான நற்பலன்கள் கிடைக்கும். வணிகர்களுக்கு பெரிய அளவில் லாபம் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் ஏராளமான செல்வத்தைப் பெறுவார்கள்.
நீண்ட நாட்களாக முடிக்க முடியாமல் இருந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் நல்ல பாராட்டைப் பெறும். உயர் அதிகாரிகளுடனான உறவு மேம்படும். இதனால் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
தனுசு
தனுசு ராசியின் 4 ஆவது வீட்டில் புதன் மற்றும் சுக்கிரனின் சேர்க்கையால் லட்சுமி நாராயண ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் இந்த ராசிக்காரர்கள் நல்ல பொருள் இன்பத்தைப் பெறுவார்கள்.
சிலருக்கு புதிய வீடு, வாகனம், சொத்துக்களை வாங்கும் யோகம் உள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். பங்குச் சந்தையில் முதலீடு செய்திருந்தால் அல்லது செய்தால் நல்ல லாபம் கிடைக்கும். பெற்றோருடனான உறவு மேம்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை இக்கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications