Latest Updates
-
திருநெல்வேலி ஸ்டைல் அரைச்சுவிட்ட சாம்பார் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
அடுத்தவர் மனைவியை திருடுவது இந்த நாட்டில் வேடிக்கையான விளையாட்டாம் - ஆனா இதுல ஒரு விவகாரமான கண்டிஷன் இருக்கு -
சில்லி கார்லிக் ப்ரைடு ரைஸ் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
காரைக்குடி கார சட்னி - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
சனிபகவான் ரேவதி நட்சத்திரம் செல்வதால் அக்டோபர் மாதம் வரை இந்த 3 ராசிக்காரங்க ராஜாதான் - உங்க ராசி இதுல இருக்கா -
இன்றைய ராசிபலன் 05 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு தங்க மழை கொட்டப்போகுதாம் -
புதன் பெயர்ச்சியால் நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது.. -
மழைக்காலத்தில் சருமம் பொலிவா இருக்கணுமா? அப்ப இந்த ஆயுர்வேத ஃபேஸ் மாஸ்க்கை போடுங்க.. -
ஆடி கிருத்திகை ஸ்பெஷல் அப்பம் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மிதுன ராசியில் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்காரர்களின் பணக்கஷ்டம் தீரப்போகுது!
சுக்கிரன்-கேது இணைவதால் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டக்கதவு திறக்கப்போகுதாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் 'கடவுள்களின் குரு' என்று விவரிக்கப்படுகிறது. இந்த கிரகம் நல்ல அதிர்ஷ்டம், காதல் மற்றும் பணத்தின் அதிபதியாகவும் கருதப்படுகிறது. சுக்கிரன் தோராயமாக 28 நாட்களில் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு தனது நிலையை மாற்றுகிறார். அதேசமயம், நிழல் கிரகமான கேது ஒவ்வொரு 18 மாதங்களுக்கும் தனது ராசியை மாற்றுகிறது. இந்த வரிசையில், கேது அனைத்து ராசிகளிலும் பயணிக்க மூன்று வருடங்கள் ஆகும்.
இதுபோன்ற கிரக பெயர்ச்சிகளின் போது ஒரு கிரகம் மற்ற கிரகங்களுடன் இணைகிறது, அதன்படி ஆகஸ்ட் 2024-ல் கன்னி ராசியில் சுக்கிரனும் கேதுவும் இணைவதும் நடைபெறுகிறது. இரண்டு கிரகங்கள், சுக்கிரன்-கேது ஒரு ராசியில் வருவது சில ராசிகளின் அதிர்ஷ்டக் கதவை திறக்கப் போகிறது. இந்த பதிவில் கன்னி ராசியில் சுக்கிரன்-கேது இணைவதால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிக்காரர்கள் யாரென்று தெரிந்து கொள்ளலாம்.

கிரகப் பெயர்ச்சியின் தேதி என்ன?
25 ஆகஸ்ட் 2024 அன்று, சுக்கிரன் கன்னி ராசிக்குள் 01:24க்கு மாறுகிறார். இந்த ராசியில் கேது ஏற்கனவே இருக்கிறார். இந்த சூழ்நிலையில், இரண்டு கிரகங்களும் 18 செப்டம்பர் 2024 வரை இணைந்திருக்கும். அதன் பிறகு, சுக்கிரன் துலாம் ராசிக்கு மாறுகிறார். இந்த அரிய கிரக சேர்க்கையால் அதிர்ஷ்டமடையப் போகும் ராசிக்காரர்கள் யாரென்று மேற்கொண்டு பார்க்கலாம்.
கடகம்
கடக ராசியின் மூன்றாவது வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நடைபெறுகிறது. இதனால் கன்னி ராசிக்காரர்கள் பல நன்மைகளைப் பெறப் போகிறார்கள் மற்றும் அவர்களின் தடைபட்ட வேலைகள் அனைத்தும் இந்த காலகட்டத்தில் முடிக்கப்படும். கடக ராசிக்காரர்களின் செல்வ நிலைகள் கணிசமாக அதிகரிக்கும். அவர்கள் கடின உழைப்பிற்கான பலனை இந்த காலகட்டத்தில் பெறுவார்கள், அவர்களின் வாழ்க்கையில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்திருக்கும்.
இந்த காலகட்டத்தில், அவர்கள் தங்கள் குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுகிறார்கள். குழந்தைகளிடமிருந்து சில நல்ல செய்திகளை எதிர்பார்க்கலாம், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கடக ராசிக்காரர்கள் தங்கள் உடன்பிறந்தவர்களுடன் நல்ல உறவை வளர்த்துக் கொள்ளலாம் மற்றும் உங்கள் பழைய நண்பர்களைச் சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளன. பணியில் இருப்பவர்கள் வேலையில் கவனம் செலுத்தி உத்தியோகத்தில் வெற்றியை எதிர்பார்க்கலாம். நீங்கள் பணியிடத்தில் சிறப்பாகச் செயல்பட முடியும்.
சிம்மம்
சிம்ம ராசியின் இரண்டாம் வீட்டில் சுக்கிரன் மற்றும் கேது சேர்க்கை நடைபெறுகிறது. இந்த காலகட்டத்தில் வாழ்க்கையின் அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவார்கள் மற்றும் பணம் சம்பாதிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் தங்களுக்கென சொத்து அல்லது வாகனம் வாங்கலாம், காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். குழந்தை வேண்டும் என்ற உங்கள் ஆசை இப்போது நிறைவேறும்.
உயர்கல்வியைத் தொடர விரும்புபவர்கள் சாதகமான வாய்ப்புகளைப் பெறலாம். உங்களின் தனித்துவமான ஆளுமையின் அடிப்படையில் உயர்நிலையை அடைவதில் வெற்றி பெறுவீர்கள். கலை மற்றும் இசையில் ஆர்வம் அதிகரிக்கிறது மற்றும் இந்த துறைகளில் உங்கள் வாழ்க்கையை உருவாக்க நீங்கள் திட்டமிடலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் பதினொன்றாவது வீட்டில் சுக்கிரனும் கேதுவும் சேர்க்கை நடக்கிறது. இக்காலகட்டத்தில் அவர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைப்பதுடன் பணியிடத்தில் பதவி உயர்வுகள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. பணியில் இருப்பவர்களுக்கு இது சிறந்த நேரமாக இருக்கும் மற்றும் அவர்கள் விரும்பிய இடத்திற்கு இடமாறுதல் கிடைக்கலாம்.
தொழிலதிபர்களுக்கு, குறிப்பிட்ட துறைகளில் லாபம் மற்றும் முன்னேற்றம் அடைவதற்கு சாதகமான காலமாக இருக்கும். குடும்பத்தில் ஆன்மீகம் சம்பந்தமான நிகழ்வுகள் அல்லது சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். விருச்சிக ராசிக்காரர்கள் அவர்களின் கடின உழைப்புக்கான அங்கீகாரத்தையும், பாராட்டையும் பெறுவதற்கான காலகட்டம் இது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)
Disclaimer: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள ரத்தினக் கற்களின் நன்மைகள் பாரம்பரிய நம்பிக்கைகள் மற்றும் ஜோதிட நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் முடிவுகள் நபருக்கு நபர் மாறுபடும். ஜோதிட நோக்கங்களுக்காக எந்த ரத்தினக் கல்லையும் அணிவதற்கு முன்பு ஒரு சான்றளிக்கப்பட்ட ஜோதிடர் அல்லது ரத்தின நிபுணரை அணுகுமாறு நாங்கள் பரிந்துரைக்கிறோம். இந்த உள்ளடக்கம் தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே, மேலும் தொழில்முறை ஆலோசனைக்கு மாற்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.



Click it and Unblock the Notifications
